Sunday, May 30, 2021

முருகன் புஜங்கப் பாமாலை | Murugan Bujanga paamaalai (In Tamil)

முருகன் புஜங்கப் பாமாலை | Murugan Bujanga paamaalai (In Tamil)



1. காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன் 
சூல மொடு ஐம்முகத்தோன் சுரனோடு நான்முகனும்
சீல மிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன்
மூலவினை மலைநீீீீீக்கி முழுச் செல்வமருள் புரிவான்

2. கவியறியேன் வசனமோ கண்டறியேன் யென்றன்
செவியறியா தொலியெதை செப்பியுமறியேன் பொருள்
புவிபுகழும் ஆறுமுகா! உன் புனிதமுகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து

3. உலகமெல்லா காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே!
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம் வாழும் தேவே!
பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்தி மிகு அந்தணர் தம்
குலதேவா! வேதத்தின் தத்துவமே! கோலமயில் வாகனனே! பணிகின்றேன்

4. செந்திற்கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவியெனும் வரையில்லாக் கடலினிலே
கந்தன் திருவருளால் கடந்திடுவார் பராசக்தி
மைந்தன் பதம்பணிவோம் மால் மருகன் சொன்னபடி 

5. "ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும் 
ஆங்கென அடிபணிந்து அமர்ந்திடுமாம் விந்தைபோல
ஏங்கும் கவலையோடு என்முன்னே வந்திட்டால் 
நீீீீங்கும் தீங் " கென்பான் நெஞ்சிலுறைச் செந்தூரான்

6. " எந்தன்மலை வந்தவர்கள் எந்தைமலை போனவர்கள் 
கந்தமலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோ " ரென்பான்
சிந்தும் ஒளி மதிமுகத்தோன் செந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம்வாழ்க

7. எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்கவல்ல 
சித்தர் வாழ்கந்தமலை சீீீீரலைவாய் ஓரத்தினில்
புத்தொளியாய்க் குகையினிலே புனிதகுகன் வீற்றுள்ளான். 
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்

8. மாணிக்கக் கட்டிலென்ன மாசறுபொற் கோயிலென்ன
நாணக்கண்டிடலாம் நாற்கோடி ரவிஒளியும் 
வானத்துத்தேவதேவன் வரம்வேண்டத் தான்தருவான் 
காணக்கண்குளிரும் கார்த்திகேயன் தாள்பணிவோம்

9. செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர்
இன்னொலி பாதரசம் இன்பமயமாக்கும் மனம்
உன்னினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே

10. தங்கமய ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரைஞானும் ஒட்டியாணம்
கிண்கிணிக்கும் சலங்கை ஒலி கிறங்கவைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளி வடி வாம் எழில்முருகன் தாள் பணிவோம்

11. மங்கை குறவள்ளிதனை மால்மருகன் ணைந்ததுமே
கொங்கையழகிட்ட குங்குமமும் மார்புறைந்தே
அங்கும் செவ்வொளிவீச அன்பர்தமையாட் கொள்வான்
தங்கநிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம்

12. சூரபதுமனைக் கொன்றே சுரன் பகை தான்வென்றே
தூரயமனை ஒட்டி துண்டித்த யானைதந்தம்
பாருலகம் படைத்தவனைப் பணியவைத்த வேலவனைச்
சேரும் உயிர்க்காக்கச் செந்தூரான் கரம் துணையே

13. பனிக்காலச் சந்திரனும் பருவமெலாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழுமதியின் தண்ணொளிபோல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றும் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம்வந்த கந்தனுக்கு நிகராமோ?

14. அன்னப்பறவைகளோ ? ஆறுமுகா புன்சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம்வருமே
வண்ணமலர்த் தமரையில் வண்டுலவும் விழியழகை
என்னசொல்ல? சிவபாலா? எழில் தாமரைமுகனே!

15. கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும்
நின்கருணைப் பெருவெள்ள நீர் துளிதான் கிட்டாதோ
அன்பரெனத் தொழுவோர்க்கு அருள்புரிந்தால் குறைந்திடுமோ?
உன்பார்வை படுமாயின் உய்வேனே உமைபாலா

16. முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
" என்னின்றுதித்த மைந்தா என்றென்றும் வாழ்க " வென
சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும்
மன்னுலகின் சுமைதாங்கும் மணிக்கிரீடசிரம் பணிவோம்

17. மாலைமணியணிகள் மார்பில் அசைந்தாட
கோலமிகு காதணியும் குண்டலமும் தோள்வளையும்
மேலிடைப்பட்டாடை மேன்மையொளி வீசிடுமே
வேலன், புரமெரித்தோன் வேதமைந்தா நீீ வருக

18. "இங்கு வா " வென்றதுமே இளையத் திருக்குமரன்
சங்கரிதன் மடியிருந்து சங்கரன் கரம் தழுவும்
தங்கநிற இளம்மேனி தவழும் குழந்தையவன்
திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்

19. குமரா! ஈசன் திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அமரர்பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா!
சமரில்தாரகனை கொன்றவனே! சரவணபவனே வள்ளிமணாளா!
உமையாள் உருவாம் வேல்முருகா! உம்மைப் பணிந்தோம் காத்திடுவாய்

20. புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபமடைக்கப்
பலம்நலிந்து செயல்மறந்து பயம்மிகுந்து உடல்நடுங்க 
நலம்நசிந்து உயிர்மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள்வேறு உதவிடுமோ உனையல்லால்

21. வெட்டு, பிள, பொசு க்கென்று வெஞ்சினமாய் யமதூ தர்
கிட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து அஞ்சேல் எனத்
தொட்டுக் காத்தருளத் தோன்றிடுவாய் வேலவனே

22. உனைப்பணிந்து கேட்கின்றேன் "ஓம் முருகா" என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணைபுரிவாய் அப்போது, துதித்திடுவேன் இப்போதே

23. தாரகன், சிங்கமுகன், தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் சூழும் அண்ட மாயிரத்தை
வீரமோடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன நோய்நீக்கிப் பார்த்தருள்வாய் வேலவனே

24. உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமெனும்
சுமையால் தளர்ந்தவன்நான் சுந்தரவடிவேல் கொண்டு,
இமையா அமரர்தேவா! ஏழைக்கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன், உளநோய் நீீீீக்கிடுவாய்

25. காசம்கபம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும்
நாசம்செயும் பெருநோயும் நலியவைக்கும் பைசாசம்
வாசம்செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலாஉன்
பூசுமிலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீீீீீீீவினையாம்

26. கந்தனைக் காணவேகண்கள், கரங்களும் அவன்பணிக்கே
செந்தில் முருகன் புகழ் செவிபடைத்த பயனாகும்
சந்ததமும் அவன் சரிதம் சந்தமொடு வாய்ப்பாடும்
சிந்தனையும் உடல்வாழ்வும் சீரலைவாய் கந்தனுக்கே

27. பக்திநெறி மனிதர்க்கும் பரதத்துவ முனிவர்க்கும்
முக்தி யளித்திடுவர்  மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையுமறிந்திடாத எளியநிலைப் பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியேனெதையுமறியேனே

28. மனைவியோடு மக்களும் மனையில்வாழும் பசுக்களும்
மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும், நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீீீீீங்க வேள்வியை விதிப்படி நடக்கச்செய்வீீர்!

29. நெடியமலைக் கிரௌஞ்சமதை நினைத்ததுமே வேல்கொண்டே
பொடி செய்தவேலவனே! புண்படுத்தும் நோய்களையும்
கொடியவிடப் பிராணியோடு கொத்தவரும் பறவையினம்
கடுகியோடச் செய்திடுவீர் கைகள் தாங்கும் வேலதனால்

30. தன்மகன் செய்தபிழை தந்தைதாய் மன்னியாரோ?
உன்மகன் நானன்றோ? உலகத்தின் தந்தையே நீ
தென்பரம் கிரிதேவா! தேவசேனா பதியே!
என்பிழை மலையெனினும் எளியேனைப் பொருத்தருள்வாய்

31. கந்தா! உன்மயில் போற்றி! கடம்பா வேல்போற்றி! சிவன்
மைந்தா சேவல்போற்றி! மறியாடும்தான் போற்றி!
சிந்தா குலந்தீீர் செந்தூரா! சிந்தும்சேவடியும் போற்றி!
வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கமையா

32. வெற்றிதரும் இன்பவடி வேலவனே! சிவன்மகனே!
வெற்றியின் திருஉருவே! விளங்கும் புகழுடையோய்!
வெற்றிகொண்ட திருக்கடலே! வெள்ள பெருக்கினைபோல்
வெற்றிபுகழ் இன்பமெலாம் வேண்டுவோர்க் கருளிடுவீர்!

33. கந்தனின் புஜங்கமதை கவிபாடி பக்தியோடு
வந்தித்து வழிபட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்
சிந்தைக்குகந்த இல்லாள், செல்வம், நன் மக்களுடன்
தந்திடும் பேரின்பநிலை தரணிபுகழ் குகனருளே


https://www.youtube.com/watch?v=JryFek6w0VU

Thursday, May 13, 2021

சந்தோஷி மாதா போற்றி | Santhoshi Matha Potri in Tamil

108 சந்தோஷி மாதா போற்றி | 108 Santhoshi Matha Potri in Tamil 



1. ஓம் சந்தோஷி மாதா போற்றி

2. ஓம் சகலமும் அருள்வாய் போற்றி

3. ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி

4. ஓம் வெற்றிகள் தருவாய் போற்றி

5. ஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றி

6. ஓம் கற்பகத்தருவே போற்றி

7. ஓம் கருணைக் கடலே போற்றி

8. ஓம் காரணத்தினுருவே போற்றி

9. ஓம் காரியமும் ஆனாய் போற்றி

10. ஓம் காசித்தல முறைவாய் போற்றி 

11. ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றி

12. ஓம் காலதேசம் கடந்தாய் போற்றி

13. ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி

14. ஓம் முக்குண உருவே போற்றி

15. ஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றி

16. ஓம் இனியநின் உருவே போற்றி

17. ஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றி

18. ஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றி

19. ஓம் வரமிக்கத் தருவாய் போற்றி

20. ஓம் அகரமுதலே எழுத்தே போற்றி 

21. ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றி

22. ஓம் ஈடிணையற்றாய் போற்றி

23. ஓம் இணையடி தொழுதோம் போற்றி

24. ஓம் கோரியது கொடுப்பாய் போற்றி

25. ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி

26. ஓம் விரதத்திற்கு உரியாய் போற்றி

27. ஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றி

28. ஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றி

29. ஓம் பிறப்பினைத் தருவாய் போற்றி

30. ஓம் பெருவாழ்வு அருள்வாய் போற்றி

31. ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி

32. ஓம் வணக்கத்திற்குரியாய் போற்றி

33. ஓம் வணங்கினால் மகிழ்வோய் போற்றி

34. ஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றி

35. ஓம் உயர்வுகள் தருவாய் போற்றி

36. ஓம் கோள்களும் போற்றப் போற்றி

37. ஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி

38. ஓம் நிறைவினைத் தருவாய் போற்றி

39. ஓம் சக்தியின் உருவே போற்றி

40. ஓம் சரஸ்வதி ஆனாய் போற்றி


https://www.youtube.com/watch?v=nTtZpp2Yehs

41. ஓம் திருமகள் உருவே போற்றி

42. ஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி 

43. ஓம் சூலத்தைகக் கொண்டாய் போற்றி

44. ஓம் வாளினை ஏற்றாய் போற்றி

45. ஓம் தீமைகள் அழிப்பாய் போற்றி

46. ஓம் திசைகள் எட்டும் நிறைந்தாய் போற்றி

47. ஓம் அற்புத உருவே போற்றி

48. ஓம் ஆனந்த சிலையே போற்றி

49. ஓம் தாமரை அமர்ந்தாய் போற்றி

50. ஓம் தக்கன தருவாய் போற்றி

51. ஓம் தருமத்தின் உருவே போற்றி

52. ஓம் தாயாக வந்தாய் போற்றி 

53. ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றி

54. ஓம் நிம்மதி அருள்வாய் போற்றி

55. ஓம் உமையவள் பேத்தி போற்றி

56. ஓம் உன்னதத் தெய்வம் போற்றி

57. ஓம் செல்வத்தின் உருவமே போற்றி

58. ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி

59. ஓம் உயிர்க்கு உயிராவாய் போற்றி

60. ஓம் உலகெலாம் நீயே போற்றி

61. ஓம் ஆபரணமணிவாய் போற்றி

62. ஓம் ஆடைகள் தருவாய் போற்றி 

63. ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றி

64. ஓம் கருணைசேர் கரத்தாய் போற்றி

65. ஓம் மனைமக்கள் ஈவாய் போற்றி

66. ஓம் மங்கலம் தருவாய் போற்றி

67. ஓம் உன்னையே துதித்தோம் போற்றி

68. ஓம் உடமைகள் தருவாய் போற்றி

69. ஓம் நங்கையர்க்கு நாயகி போற்றி

70. ஓம் நலமெலாம் தருவாய் போற்றி

71. ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி

72. ஓம் ஆனந்த உருவே போற்றி 

73. ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றி

74. ஓம் பாசத்தைப் பொழிவாய் போற்றி

75. ஓம் குணமெனும் குன்றே போற்றி

76. ஓம் குன்றென அருள்வாய் போற்றி

77. ஓம் தேவியர் தேவி போற்றி

78. ஓம் தரிசனம் தருவாய் போற்றி

79. ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி

80. ஓம் சிறப்பெலாம் கொண்டாய் போற்றி

81. ஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றி

82. ஓம் விண்ணவர் போற்றப் போற்றி 

83. ஓம் நான் முகன் கருணைபெற்றாய் போற்றி

84. ஓம் நலன்களின் உருவம் நீயே போற்றி

85. ஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றி

86. ஓம் புண்ணிய நாயகி போற்றி

87. ஓம் செல்வத்தின் உருவே போற்றி

88. ஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றி

89. ஓம் சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி

90. ஓம் சற்குணவதியே போற்றி

91. ஓம் ஐங்கரன் மகளே போற்றி

92. ஓம் அனைத்துமே நீதான் போற்றி 

93. ஓம் கண்களின் ஒளியே போற்றி

94. ஓம் கனகமாமணியே போற்றி

95. ஓம் அன்பருக்கு அன்பே போற்றி

96. ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி

97. ஓம் செல்வமாம் நிதியே போற்றி

98. ஓம் செல்வத்தின் பதியே போற்றி

99. ஓம் தத்துவமானாய் போற்றி

100. ஓம் வித்தகச் செல்வி போற்றி

101. ஓம் பழங்களை ஏற்பாய் போற்றி

102. ஓம் பாயாசம் உண்பாய் போற்றி 

103. ஓம் வெல்லம் கடலைசேர்த்து விருப்பமாய் உண்பாய் போற்றி

104. ஓம் குடும்பதில் நலன்கள் தந்து கொலுவிருந்தருள்வாய் போற்றி

105. ஓம் ஓம்கார உருவே போற்றி

106. ஓம் உன்னதத் தெய்வம் நீயே போற்றி

107. ஓம் சந்தோஷிமாதாவே போற்றி

108. ஓம் சௌபாக்கியம் அருள்வாய் போற்றி


சந்தோஷி மாதாகி ஜெய்! 

சந்தோஷி மாதாகி ஜெய்! 

சந்தோஷி மாதாகி ஜெய்! 

 

அனுமன் சாலீஸா | Hanuman Chalisa lyrics in tamil

அனுமன் சாலீஸா | Hanuman Chalisa lyrics in tamil

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ நிஜ மன முகுர ஸுதார பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்


1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ ஸவாரே

11. லாய ஸஜீவன லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
https://www.youtube.com/watch?v=-5bvt9cEe4I


16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

ராஹுகால துர்கா ஸ்தோத்திரம்|Rahu Kala Durga Stotram Lyrics in Tamil

ராஹுகால துர்கா ஸ்தோத்திரம்|Rahu Kala Durga Stotram Lyrics  in Tamil




வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்

அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்

இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்

உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்

அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்

குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே

திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்

திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!




ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்

ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே




கன்னி துர்கையே இதய கமல துர்கையே

கருணை துர்கையே வீரக் கனக துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
https://www.youtube.com/watch?v=TGCFRUFIoe0

கோளறு பதிகம் - திருஞான சம்பந்தர் | Kolaru padhigam lyrics in Tamil

கோளறு பதிகம் - திருஞான சம்பந்தர் | Kolaru padhigam lyrics in Tamil




1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!


2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!


3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.


4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.


11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.


Sunday, May 9, 2021

Maha-Manthra chanting 108 times - Japa



Bhakthi yoga is said to be the most important way towards salvation in this Kali-yuga. Hari Nama sankirtan / chanting the lord's name has been told the easiest way under bhakthi yoga.

Nama sankirtan is where most forms of Nava Vidha Bhakthi(Nine approaches to reach the lord, explained by Prahlada Maharaj) are practised at one go.

Kirthana (Praying), Sravana (Listening), Smarana (Remembering) are all the various forms of Nava vidha bhakthi that are put together while we chant the lord's name.

Maha Manthra Chanting : 

Before we start with the chanting of one round Maha-Mantra(108 times), the following sloka is recited:

Jay Shri Krishna Chaithanya Prabu Nithyanandha 
Shri Advaitha Gadhadhaara
Shri Vasadhi Gaura Bhakthi Vrindha

Maha-Manthra : 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare


For video content: Channel Link

Chant the mahamatra with us : Link

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...