செந்தீயில் ஆறு பொறி சேய் வடிவின் முருகா
ஓர் பெரும் சரவணையில் உற்ற திரு முருகா
ஒளி மீன்கள் அறுவர் முலை உண்டு வளர் முருகா
பார்வதி அணைக்க ஒரு பாங்கு சேர் முருகா
பன்னிருகை ஆறுமுகம் பகர் கந்த முருகா
பார் புகழும் நவ வீரர் பக்க முறை முருகா
பரமேசர் நெஞ்சிலுரை பாலனெனும் முருகா
செங்கட் கடாவினை அடக்கியூர் முருகா
செம் பொருளில் பிரமனை சிறை செய்த முருகா
சங்கரர்க் கோதுமொறு தற்பரா முருகா
தண்டை கிண் கிணி கொஞ்சு தாழென முருகா
அங்கனிற் குலகை வலமாய் வந்த முருகா
ஆண்டி வேடம் கொண்ட ஐயனே முருகா
தங்கு வையாபுரித்தலமுற்ற முருகா
சாடிடும் பனைவென்ற சக்திவேல் முருகா
அரும்பழம் நீ என்ற அறன் சொன்ன முருகா
அறுமுகம் ஓராரின் அழகு சேர் முருகா
அடியார் கிரங்கிடும் அன்னலே முருகா
இரு விழிகள் ஈராரின் செம்மலே முருகா
தீவினைகள் போக்கியருள் தெய்வமே முருகா
திருந்துக்கலை தந்த தேவனே முருகா
தேசிகா ஞான மறை தேடு பொருள் முருகா
தென்பரங் குன்றிற் சிறந்த வேல் முருகா
சிறு மிகும் செந்தில் நிறை செல்வனே முருகா
அன்பர் திரு ஆவினர் குடியில் வாழ் முருகா
அடியார் புகழ்ந்திடும் ஆண்டவா முருகா
இன்ப மிகும் ஏற்கத் திறைவனே முருகா
எண்ணிலா குன்றேறி வாழ் முருகா
பொன்னன் திருத்தணிகை போழ்ந்தவா முருகா
புகழ் சேர்க கழுக்குன்றின் புண்ணியா முருகா
சந்தனல் வேள்வி மலை தங்கிடும் முருகா
சாரும் விராலி மலை தன்னில் வாழ் முருகா
அந்தக் கடந்த திரு அருணையின் முருகா
அண்டர் வாழ் திரு மலையின் ஆனந்த முருகா
சந்தனல் ஒங்குவளர் சக்திமலை முருகா
சகமேவு மின்புதரு சித்தர்மலை முருகா
வந்த துன்பம் தீர்க்கும் மயிலையில் முருகா
வடபழனி மேவியே வாழ்கின்ற முருகா
குழகனே சிவகிரி கொற்றவா முருகா
கோதில் குன்றக்குடி குமரனே முருகா
அழகுரும் வேங்கடத் தையனே முருகா
ஆதி கதிர்காமத் தமர்ந்தவா முருகா
பிழையிலா பேரூர் பிறந்திடும் முருகா
பேசும் குழந்தை மலை பேரை நகர் முருகா
அழகனே பல மலைகள் ஆடிடும் முருகா
ஆடு பழமுதிர்ச் சோலை அடைந்தவா முருகா
வானவர் துயர் தீர்க்க வந்தவா முருகா
வையமே உய்ய வழி வகுத்தவா முருகா
தானவர் உறங்கெடத் தானைசேர் முருகா
தலை வீரனை தூது தான் விட்ட முருகா
ஈனர் கர்வம் கண்டெழுந்தவா முருகா
இகல் தாருகனை வேலுக் கிரையாக்கும் முருகா
ஆனைமுக சூரனை அழித்திட்ட முருகா
அடல் சிங்க முகனுடல் அகழ்ந்திட்ட முருகா
சேவலை கொடி கொண்ட சேந்தனே முருகா
சிகிதனை ஊர்த்தியாய் சேர்ந்தவா முருகா
தேவர் கோன் மகனை சிறைமீட்ட முருகா
செயவானக சூடும் வேழ் சேவகா முருகா
மூவரும் புகழ் கூற முறுவல் கொள் முருகா
முனிவரொடு தேவர் தொழும் முதல்வனே முருகா
ஆவல் மிகும் இந்திரர்க்கரசு தரும் முருகா
அன்பருக்க பயமே அளித்தவா முருகா
தெய்வானையை மணம் செய்தவா முருகா
தெள்ளு நலமெல்லாம் திகழ்ந்தவா முருகா
சைவகக்கொழுந்தே சடாட்சரா முருகா
சகல கலை வல்லமை தந்திடும் முருகா
மை கொண்ட கண் வள்ளி மையல் கொள் முருகா
மாதினைக் காணவே வனமேகும் முருகா
கைதனில் வில்லேந்தும் காணவா முருகா
கன்னிக் குறக் கொடியின் கண்ணில் நுழை முருகா
வான்மகிழ் வள்ளியொடு வாதிட்ட முருகா
மங்கை எதிரே வேங்கை மரமாகும் முருகா
கூனிடும் கிழ வேடம் கொண்டவா முருகா
குமரிகை தொட்டு வளை கோர்த்தவா முருகா
தினை தேன் கொண்ட மாவும் தின்றவா முருகா
சேயிழையின் மோகம் திழைத்தவா முருகா
ஆனை முகனைத்துணை அடைந்தவா முருகா
ஆறுமுக தரிசனம் அளித்தவா முருகா
வான் மகிழ் வள்ளியை மணம் கொண்ட முருகா
வள்ளி தெய்வானை சமேதனே முருகா
நான் கண்ட தெய்வமே ஞான வேல் முருகா
நம்பினோர்கட் கருள் நல்கிடும் முருகா
மேனிலை அதற்குமொரு வேலான முருகா
வேதமும் காணாத விஞ்சை என்னும் முருகா
ஊன் கொண்ட பிறவிகட் குறுதுணை முருகா
உன் பாதம் அன்றி வேறொன்றில்லை முருகா
சஞ்சலம் தீர்த்திடும் சண்முகா முருகா
சாருமிகு பரசுகம் தந்திடும் முருகா
அஞ்சலென்றென்னை வந்தாட் கொள்ளும் முருகா
அருளையும் பொருளையும் அளித்திடும் முருகா
தஞ்சமென்றோர்களை தாங்கிடும் முருகா
தாரணி கழிக்க வருள் சாதிக்கும் முருகா
மஞ்சுபொழி மாநிலம் வாழியே முருகா
மாதவர் தொழும் பாதம் வாழி சீர் முருகா
சங்கத் தலைவனே சரவணா முருகா
சமரபுரி வேலா புயவேளே முருகா
சூரபத்மனைத் சமர் புரிந்திட்ட முருகா
சண்முகத் தேவே சங்கத் தமிழனே முருகா
சங்கப் புலவனே சக்தி வேலனே முருகா
சங்கபாணி மருகோனே சற்குரு நாதா முருகா
சங்கரற்குக் குருவே சாந்தகுணசீலனே முருகா
சங்கரன் சேயே சண்முகக் கடவுளே முருகா
சகல லோகர்க்கும் நண்பனே முருகா
சக்தி மலைச் சாமியே சிவந்த ஆடையனே முருகா
சித்தர்கள் குருவே சிங்கார வேலனே முருகா
சித்தத்துள் நிற்பாய் சிவக்கொழுந்தே முருகா
சூரனை வதைத்தோய் சஷ்டி நாயகனே முருகா!
No comments:
Post a Comment