ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரி தேரோனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் செஞ்சுடர் ஞாயிறே போற்றி
ஓம் சூரியனார்கோவில் அமர்ந்தாய் போற்றிப் போற்றி
ஓம் அம்புலியே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றிப் போற்றி
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செண்பகப் பிரியனே போற்றி
ஓம் செவ்வாய் நாதனே போற்றி
ஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றி
ஓம் மேஷராசி அதிபதியே போற்றி
ஓம் செவ்வாய்த் தேவனே போற்றிப் போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
ஓம் நட்சத்ரேசனே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் ரேவதிக் கதிபதியே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் புத பகவானே போற்றிப் போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் வியாழனே போற்றிப் போற்றி
ஓம் அசுர குருவே போற்றி
ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
ஓம் கலை வளர்ப்போனே போற்றி
ஓம் கருடவாகனனே போற்றி
ஓம் கீழ் திசையனே போற்றி
ஓம் சுக்கிரனே போற்றி
ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி
ஓம் துலாராசி அதிபதியே போற்றி
ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் வெள்ளி நாயகனே போற்றிப் போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றிப் போற்றி
ஓம் அமிர்தம் அருந்திய அரவே போற்றி
ஓம் அரக்கன் தலை கொண்டாய் போற்றி
ஓம் இராகுவே போற்றி
ஓம் கடகம் உகந்த கனலே போற்றி
ஓம் கரிய ஆடை உகந்தாய் போற்றி
ஓம் காளத்தி உகந்த கடவுளே போற்றி
ஓம் சந்திரன் பகையே போற்றி
ஓம் சனியின் நண்பனே போற்றி
ஓம் தென்மேற்குத் திசை நோக்கி நின்றாய் போற்றி
ஓம் புளிப்புச் சுவையில் களிப்பாய் போற்றி
ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வேதம் உணர்ந்த தேவே போற்றி போற்றி
ஓம் அரவத் தலைவனே போற்றி
ஓம் அசுவதி அதிபதியே போற்றி
ஓம் அறுபரித் தேரனே போற்றி
ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
ஓம் கொள் விரும்பியே போற்றி
ஓம் செவ்வண கிரகமே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் மகத்துக் கதிபதியே போற்றி
ஓம் தும் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கேது பகவானே போற்றிப் போற்றி
No comments:
Post a Comment