தேவகுருவும் இரக்க சுபாவம் உள்ளவரும் உலகை ரட்சிப்பவரும் சகலகலைகளையும் அறிந்தவருமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.
எக்காலத்திலும் எல்லோருடைய விருப்பங்களையும் ஈடேற்றுபவரும், அனைத்தையும் வென்றவரும், சகலராலும் பூஜிக்கத்தக்கவரும், விருப்பு வெறுப்பற்றவரும், முனிவர்களுள் மேலானவரும், தர்மத்தைப் பாதுகாப்பவரும் தந்தைக்கு நிகரான குருவுமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.
வியாழ பகவானே உலகின் உற்பத்திக்கு காரணமானவரும், சகல உயிர்களின் பிறப்புக்கு காரணமானவரும் மூவுலகிற்கும் தலைமை ஏற்பவரும், மிகுந்த பராக்ரமம் உள்ளவருமாகத் திகழ்கிறார்.
இருபத்து நான்கு புண்யகார்ய தத்துவங்களையும் நியமமாகக் கடைப்பிடிப்பவரும் புண்ணியங்களை அளிப்பவரும் நந்தகோபரின் மகனாக அவதரித்தவருமான மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட இந்தத் துதியினை...
தினமும் விடியற்காலையில் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெறுவர். பகவான் விஷ்ணுவின் அருளுக்கும், குருபகவானின் அருளுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள். மனதில் பக்தியுடன் இதனை அதிசிரத்தையாகச் சொல்பவர். ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைப் பெற்று குரு அருளால் சகல செல்வமும் பெற்று வாழ்ந்து, முடிவில் விஷ்ணுலோகத்தை அடைவர்.
விஷ்ணு தர்மோத்ர புராணத்தில் உள்ள பிரகஸ்பதி துதி நிறைவுற்றது.
No comments:
Post a Comment