இவை இருந்தபோதும்... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?
குருவே சரணம்! குருவே அபயம்!
துணை எனவே வருமோ? நாம் தேடும் பந்தம்.. மனை, மனைவி, மக்கள் தனம், செல்வம், சுற்றம்
இவை இருந்தபோதும்... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?
குருவே சரணம்! குருவே அபயம்!
மறை யறிந்த மேலோன்! அறிவி யலில் தேர்ந்தோன் ! உரை எழுதும் திறனோன்! கவி புனையும் புலவோன் !
என்றிருந்த போதும்.... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?
குருவே சரணம்! குருவே அபயம்!
வெளி நாட்டில் கூட வந் தனைகள் செய்வார் ! உள் நாட்டில் உயர்த்தி உத்த மனாய்ச் சொல்வார் ! நன் நடத்தை யுடனே நல்ல வழி செல்வார்!
என் றிருந்த போதும்.... குருவின் மலர் அடியில் லயிக்காத காத மனதா மனதால் பயன் என்ன வாகும்?குருவே சரணம்! குருவே அபயம்!
முடி சூடும் மன்னர், மன்னாதி மன்னர் அடி பணிந்து போற்றும் அற்பு தத்தான் சான்றோன்
என் றிருந்த போதும்... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன என்ன வற்கு வாகும்?குருவே சரணம்! குருவே அபயம்!
வள்ள லென தந்து வான் புகழைக் கொண்டார்! உள்ள படி உலகில் எளிதில் எலாம் பெறுவார்!
என் றிருந்த போதும்... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?குருவே சரணம்! குருவே அபயம்!
லௌகீக வாழ்வின் போகியனும் இல்லை! பொன், பொருள்கள் மீது மோகமதும் இல்லை!
என் றிருந்த போதும்.... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?குருவே சரணம்! குருவே அபயம்!
வீட துவும் வேண்டாம்! காட துவும் வேண்டாம்! தேடி உடல் வளர்க்கும் தேவை யதும் வேண்டாம்! நாடி வரும் செல்வம் நாட வில்லை மனது !
என் றிருந்த போதும்.... குருவின் மலர் அடியில் லயிக்காத மனதால் பயன் என்ன வாகும்?குருவே சரணம்! குருவே அபயம்!
மன்ன வனோ, முனியோ மானி டர்கள் யாரும் அஷ்டகமாம் இதனை பக்தியுடன் சொல்லி
குருவின் வழி சென்றால் ப்ரம்ம நிலை அடைவார்.
குருவே சரணம்! குருவே அபயம்!
No comments:
Post a Comment