ஆருயிக் குயிராய் அமைந்தாய் போற்றி
இச்சா சக்தியாய் இயைந்தாய் போற்றி
ஈசன் அருளுக்கினியாய் போற்றி
ஈசனின் பாதி உடலே போற்றி
ஈகை வடிவே வள்ளலே போற்றி
உண்மைப் பொருளாய் ஒளிர்வாய் போற்றி
உலக பரம்பொருளே போற்றி
ஊக்கமும் உணர்வும் உதவுவாய் போற்றி
எழில் தரும் இயற்கை பொருளே போற்றி
ஏழிசை தாம் இசைப்பாய் போற்றி
ஐயம் தவிர்க்கும் அன்னையே போற்றி
ஒன்றென விளக்கும் உணர்வே போற்றி
ஓதாதுணர்ந்திடும் ஒளியே போற்றி
ஔவியம் நீக்கிய அருளே போற்றி
அகில பொருளாய் அமைந்தாய் போற்றி
கண்ணுள் மணியாய் கலந்தாய் போற்றி
காட்சிப் பொருளாய் விரிந்தாய் போற்றி
கிரியா சக்தியாய் கிளர்ந்தாய் போற்றி
கீழ்மை தவிர்த்தெம்மைக் காப்பாய் போற்றி
குணமெனும் குன்றாய் நிகழ்வாய் போற்றி
கூர்த்த மதியினைக் கொடுப்பாய் போற்றி
கெஞ்சும் குரல் கேட்டிரங்குவாய் போற்றி
கொஞ்சும் மொழி கொண்டவளே போற்றி
கேட்ட வரங்கள் ஈவாய் போற்றி
கைதவம் ஒழித்தருள் கடலே போற்றி
கொண்டல் நிறப்பூங் கொடியே போற்றி
கோதில் உளங்கொடி கொள்வாய் போற்றி
பெயர்க் கனியே போற்றி
ஙப்போர் மழவேந்தரசியே போற்றி
சதுர்மறைக் கிறைவியே தாயே போற்றி
சான்றோர் தவத்தின் உருவே போற்றி
சிந்தை குடிகொள் தெய்வமே போற்றி
சிங்கம் மேல் அமர் சோதியே போற்றி
சீரும் திருவும் அருள்வாய் போற்றி
ஸுருதிப் பொருளெனெத் தோற்றுவாய் போற்றி
ஸூரியச் சந்திரச்சுடரே போற்றி
செம்பொருளாகத் திகழ்வாய் போற்றி
சேவடி பணிவோர் திருவே போற்றி
சைவ நெறியிற் றழைப்பாய் போற்றி
சொல்லும் பொருளும் துலக்குவாய் போற்றி
சோர்வினைப் போக்கும் சோதியே போற்றி
சௌபாக்கிய மருள் தாயே போற்றி
ஞான சக்தியாய் நவில்வாய் போற்றி
நான்கு கரங்களுடன் அருள்வாய் போற்றி
நேயம் நிறைந்த தாயே போற்றி
டம்பம் தவிர்க்கும் தாயே போற்றி
இணக்கம் பெறுவோர்க்கு இறைவியே போற்றி
தளிர்போல் மேனி ஒளிர்வாய் பொற்றி
தாமரைச் சீரடி அமைந்தாய் போற்றி
திங்கள் முகத்துத் திருவே போற்றி
தீம்பால் மொழியே செப்புவாய் போற்றி
துடியிடை பெற்ற சுவர்ணமே போற்றி
தூமணி ஆரமிடற்றாய் போற்றி
தெளிந்த நன் நெஞ்சத் தேவியே பொற்றி
தேன் போல் இனிக்கும் செஞ்சொலா போற்றி
தெய்வீகம் போற்றுவார் தண்ணிழல் போற்றி
தொல்லறப் பயனாய் துலங்குவாய் போற்றி
புதுமை யாவும் புதுக்குவாய் போற்றி
பூரண இன்பப் போழியே போற்றி
பூவில் தேன் என இனிபபாய் போற்றி
பெண்மைக் கரசாய் பிறங்குவாய் போற்றி
பேரின்பக் கடல் ஆவாய் போற்றி
பைம்பொன் நிறத்துப் பாவாய் போற்றி
பொறையே பூணாய் பூண்பாய் பொற்றி
போற்றுவார்க் கிரங்கும் தாயே போற்றி
மலருள் மணமென வயங்குவாய் போற்றி
மாதவத் தோட்கருள் மாதா போற்றி
மிடிதவிர்த் தாளும் விமலையே போற்றி
மீனவர் மகளாய் விளங்குவாய் போற்றி
முடிவிலா ஞான முதல்வியே போற்றி
மூர்த்திகள் பலவாய் தோற்றுவாய் போற்றி
மென்மைகள் யாவிலும் மிளிர்வாய் போற்றி
மேதினிக் கரசியாய் விளங்குவாய் போற்றி
மையல் நீக்கிடும் ஐயை போற்றி
மொழிந்திடும் முத்தமிழ்க் குதவுவாய் போற்றி
மோனளத் தமர்ந்த முழுமுதல் போற்றி
மௌவலம் குழல் நீள் மயிலே போற்றி
இயல் இசை நாடகத் தியைவாய் போற்றி
இன்னிசை கொலுசு அணிந்தார் போற்றி
அரவமோ டாடிடும் அம்பிகை போற்றி
அஷ்ட சித்திகள் அளிப்பார் போற்றி
இலகொளி பரப்பிடும் எந்தாய் போற்றி
வரங்கள் பலவும் வழங்குவாய் போற்றி
வான்மழை யாகிக் காப்பாய் போற்றி
விண்ணும் மண்ணும் விரிந்தாய் போற்றி
வீடுபேறளிக்கும் மெய்ப்பொருள் போற்றி
வெற்றியின் சின்னமாய் மிளிர்வாய் போற்றி
வேதப் பொருளின் விளைவே போற்றி
வையங் காக்கும் மணியே போற்றி
அழகெலாம் ஒன்றாய் அமைந்தாய் போற்றி
எலுமிச்சை பழம் விரும்பியே போற்றி
இளமையில் என்றும் இருப்பாய் போற்றி
அறநிலை ஆற்றின் அமிழ்தே போற்றி
அனந்தமும் நீயே ஆவாய் போற்றி
கவின் பெறு கற்புக் கனலே போற்றி
செழியன் அநீதி தீர்த்தாய் போற்றி
செல்லிக் குதவிய திருவே போற்றி
திரிசூலங்கை திகழ்வாய் போற்றி
எல்ல உயிரும் ஈன்றாய் போற்றி
நல்லவை யாவையும் நல்குவாய் போற்றி
வணங்குவோர்க்கு கதி என நிற்ப்பாய் போற்றி
மூவுலகும் ஆளும் மாதா போற்றி
கண்கண்ட தெய்வமே காளியே போற்றி
மங்களம் முழங்கும் மணியே போற்றி
ஞான சக்தி அருள்வாய் போற்றி
சிறுவாச்சூரில் வசிப்பவளே போற்றி
மதுரகாளி மாதா போற்றி போற்றி!
No comments:
Post a Comment