நினைத்தது நிறைவேறும் மனம் உருகி தன்வந்திரி பகவானே உன் கவசம் தனை பாடிட பாடிட மனம் கனிந்து ரட்சிப்பாயே
பார் கடல்தனிலே அவதரித்தவனே பார் புகழ் தேற்றும் மருத்துவ தெய்வமே
பிணி தீர்த்திடவே வந்துதித்தவனே பணிந்தேன் தன்வந்திரி பகவானே
அமிர்தகலசம் தனை கரங்களில் தாங்கி ஆயுர் வேதம் இடும் மருத்துவம் கொணர்ந்தே
அபயம் அளித்து எமை காத்திட வருவாய் பணிந்தேன் தன்வந்திரி பகவானே
அச்சம் அகற்றிட அருள் கரம் நீட்டிடு அச்சுதனே கருணை தனை பொழிந்திடு
இச்சகம் வாழ வந்தருள் புரிந்திடு பணிந்தேன் தன்வந்திரி பகவானே
ஒளி பிரகாசமாய் திகழ்திடும் ஜோதியே வோய்வின்றி அருளைப் பொழியும் ஸ்ரீ பதியே
ஓங்கி உலகலந்த வளம் பொழி நிதியே பணிந்தேன் தன்வந்திரி பகவானே
மருத்துவ தேய்வமே வரும் பிணி தீர்ப்பாய் மகத்துவத்தால் பிணி வாராது காப்பாய்
உன் மந்திரம் சொல்லிட வந்தெமக்கு அருள்வாய் தன்வந்திரி பகவானே வருவாய்
வையகம் போற்றும் வைத்திய குருவே கை கூப்பி தொழுதோம் விரைவாய் வருவாய்
உய்ய வழிகாட்டி உயிர் காத்திடுவாய் தன்வந்திரி பகவானே வருவாய்
விஷ கிருமிகளை விரட்டியே துரத்திட விரைவாக வந்து எம்மை காத்திட
வினை தீர்த்துதெங்கள் விதிதனை மாற்றிட தன்வந்திரி பகவானே வருவாய்
ஆதிசேஷனே வருவாய் வருவாய் ஆயூர்வேதனே வருவாய் வருவாய்
ஆயுள் பலம் தர வருவாய் வருவாய் தன்வந்திரி பகவானே வருவாய்
சுந்தர வடிவே சுகம் தரும் திருவே சந்தர சகோதர நானச குருவே
சந்ததி காத்தருள் கற்பகத்தருவே தன்வந்திரி பகவானே எனையாளனே
நித்ய அலங்காரனே நித்ய அபிஷேகனே நித்ய மகோத்சவனே நித்ய அனுக்கிரகனே
நித்யா நந்தனே நித்ய கல்யானனே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
நானிலம் போற்றும் உன் திரு நாமமே நான்காயிரம் திவ்ய பிரபந்தமே
நாலாவிதம் மலரே உன் பாதமே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
ஜெயம் தந்தருளும் ஸ்ரீ ஜெகநாதனே ஜகம் நிறைந்தருளும் ஜெக ஜோதியனே
ஜெகத் காரகனே ஜெகத் ரட்சகனே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
ஆகாய தாமரை ஏறியே வருக அமிர்த கலசம் தாங்கியே வருக
ஆயுத கலையின் நிபுனனே வருக தன்வந்திரி பகவானே வருக
சங்கொடு சக்கரம் தாங்கியே வருக எங்கும் நிறைந்தருள் புரிந்திட வருக
செங்க மலர்தாள் பணிந்தோம் வருக தன்வந்திரி பகவானே வருக
அலங்கார பூஷனனே நினி நிதி வருக ஆரா அமுதனானவனே வருக
ஆகம வேத அழகனே வருக தன்வந்திரி பகவானே வருக
மனம் தரும் கற்பக விருட்சமே வருக வரம் தரும் எங்களை காத்திட வருக
வலம்பற சுகங்களை வழங்கியே காக்க தன்வந்திரி பகவானே காக்க
சிரசினை உந்தன் அருட்கரம் காக்க பிறை நெற்றியினை பேரருள் காக்க
செவிகள் இரண்டும் சதுர் கரம் காக்க தன்வந்திரி பகவானே எனை காக்க
விழிகள் இரண்டும் என் திரு விழி காக்க நாசியில் சுவாசம் புரிந்தெம்மை காக்க
பேசிடும் வாய்தனை புண்ணியன் காக்க தன்வந்திரி பகவானே எனை காக்க
நவிலும் நாவினை நலமொடு காக்க பற்கள் யாவும் பல் பூஷனன் காக்க
தொண்டையை அருட்கரம் கொண்டே காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
பிடரியை முதுகை பார்த்தன் காக்க தோள்கள் இரண்டையும் தூயவன் காக்க
கைகளும் விரல்களும் ஸ்ரீகரன் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க,
தண்டத்தை கருணை கரத்தோன் காக்க நுரையீரலை நாராயணன் காக்க
அன்புடன் இதயத்தை எங்கும் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
நாபி வயிற்றை நினதருள் காக்க இடையை உந்தன் இருகரம் காக்க
மறைக்கும் உறுப்பை மறைந்தே காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
தொடைகள் இரண்டும் அமுதரன் காக்க கால்கள் இரண்டும் கவி வரதன் காக்க
அன்புடன் இதயத்தை எங்கும் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
கபம் சளி பிணி ஏதும் தொற்றாமல் காக்க காய்சல் விஷ நோய் பற்றாமல் காக்க
உயிர் மூச்சாகி என் உயிரினை காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
காக்க காக்க கனிவொடு காக்க நோக்க நோக்க நோய்கள் பொடிபட
தாக்க தாக்க தடைகளை தாக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
பிணிகள் யாவுமே பார்வை படபட பகலவனை கண்ட பனிபோல் விலகிட
பயமும் பீதியும் பதரியே ஓடிட தன்வந்திரி பகவான் எனை காக்க
உன் திரு கவசம் ஓதிட ஓதிட பன்னிய பாவங்கள் யாவும் பொடிபட
என் இரு கரமும் மலரடி தொழுதிட தன்வந்திரி பகவான் எனை காக்க
மனச்சுமை யாவும் மறைந்திட மறைந்திட சந்தோஷம் வந்து சேர்ந்திட சேர்ந்திட
இன்பம் வாழ்வில் இனிதே பெருகிட பெருகிட தன்வந்திரி பகவான் எனை காக்க
மச்சாவதாரன் மகிழ்ந்து எனை காக்க கூர்மவதாரன் குளிர்ந்தெனை காக்க
வாராக அவதாரன் வந்து எனை காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
நரசிம்ம அவதாரன் நலம் கண்டு காக்க வாமன அவதாரன் வலம் தந்து காக்க
பரசுராம அவதாரன் பலம் தந்து காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
ராமா அவதாரன் ரகு குணன் காக்க பலராம அவதாரன் புவனம் காக்க
கிருஷ்ண அவதாரன் குவலயம் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
கல்கி அவதாரன் கரம் தூக்கி காக்க கலகமும் கலக்கமும் வராமல் காக்க
கலியுகம் செழித்திட கருணையோடு காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
மலை நின்றருளும் மாதவா போற்றி அலைகடல் உறையும் கேசவா போற்றி
ஆலினில் துயிலும் தூயவா போற்றி Mதன்வந்திரி பகவானே போற்றி
தூணிலும் நிறைந்த பெருமாளே போற்றி துரும்பிலும் நிறைந்த பெருமாளே போற்றி
யாவும் நிறைந்த பேரருளே போற்றி தன்வந்திரி பகவானே போற்றி
கடலலை நடுவே உதித்தாய் போற்றி இடர் களைந்திடவே வருவாய் போற்றி
உடனிருந்து எங்களை காப்பாய் போற்றி தன்வந்திரி பகவானே போற்றி
சரணம் சரணம் நின் திருவடி சரணம் சரணம் சரணம் மலரடி சரணம்
சரணம் தன்வந்திரி பகவானே சரணம் சரணம் சரணம் சரணாகதியே
No comments:
Post a Comment