Wednesday, November 27, 2024

Shiva panjatchara stotra tamil| சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் தமிழ்

அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசு வரதன்தான் விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தன் அபேதமும் பேதம் ஆன அரியதிகம் பரனை யந்த நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின் றேனே.

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண் நந்தியுள் ளிட்டோரான நற்கணநாதன் ஆனான் மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான மகாரமாய் உருக்கொள் வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே

தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து தாட்சாயனியின் மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன் தொக்கமா விடைக்கொ டிகொள் தூயனை அரனை அந்தச் சிகாரமாய் உருக்கொள் வோனைச் சிவனையான் துதிக்கின்றேனே.

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழுது வாழ்த்தும் சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின் றேனே.

யட்ச சொரூபம் கொண்ட யாகசெஞ் சடையைக் கொண்ட கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...