Saturday, March 29, 2025

ஸ்ரீஹயக்ரீவ கவசம் தமிழ் | Hayagriva Kavasam Tamil

கல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவ கவசம்


தேவதேவனே மஹா தேவனே
கருணைக்கடலான சங்கரனே
வரங்களை தருவதையே இயற்கையாகக் கொண்ட உங்களால்
ஸ்ரீலட்சுமி துணைவரும் திருமாலின் பல அவதாரங்களையும்

வேதங்களையும் பற்றியும் கூறப்பட்டனவே...
மஹா ப்ரபுவே, ஸ்ரீ ஹயக்ரீவ கவசம் பற்றி
எனக்குக் கூறிட வேண்டும் எனவும்
சிவனிடம் பார்வதி வேண்டினாளே

என் உள்ளம் கவர்ந்தவளே தேவி
அன்பே வடிவமாகி பிரியமுடன் பேசுபவளே
எத்தனைதான் இரகசியம் ஆனாலும்
பாற்கடலில் இருந்து எடுத்த

அமுதத்துக்கு நிகரான
ஸ்ரீ ஹயக்ரீவ கவசம்தனை
உனக்குக் "கூறுவேன் எனவும்
சிவனும் சொன்னாரே...

மஹா ப்ரளய முடிவில் இரவுநேரத்தில்
தானே திரிந்தும் ஹயக்ரீவ வடிவமெடுத்தும்
வேதங்களை அபகரித்த ஹயக்ரீவன் என்ற அசுரனை
வதம் செய்து வேதங்களை தன்னுடனே ஆக்கிக்கொண்டாரே

அப்படிப்பட்ட இந்தக் கவசமானது
மகனிடம் கொண்ட பாசத்தினால்
நான்முகன் எனக்கு உபதேசம் செய்தனரே
இந்த ஹயக்ரீவ கவசத்துக்கு

பிரம்மா ரிஷி அனுஷ்டுப் சந்தஸ்
ஹயக்ரீவரே தேவதை ஹ்ரௌஜம் பீஜம்
ஹ்ரீம் சக்தி ஓம் கீலகம் எனவும்
உறக்க உத்கீலகம் ஆகுமே...

ஸ்ரீமஹா லட்சுமியின் தாமரை போன்ற
கரத்தில் உள்ள தங்கக்குடத்தால்
அமுத வெள்ளத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட
சிரசினை உடையவரும்...

சின்முத்திரை அக்ஷமாலை தாமரை
புத்தகம்தனை கரங்களில் கொண்ட
கருணை தெய்வமும் கருணைக்கடலே
ஆன ஸ்ரீஹயக்ரீவரைத் துதிக்கின்றேன்...

அமுதத்தால் நனைக்கப்பட்டவன் சிரசை காக்கட்டும்
சந்திரனைப் போன்ற அழகானவன் நெற்றியைக் காக்கட்டும்
அசுரர்களுக்கு சத்ருவானவன் நயனங்களைக் காக்கட்டும்
வாக்கு வன்மைக்கு கடலான தெய்வம் நாசியைக் காக்கட்டும்

நிலையான சிரோத்திரம் உடையவன் காதுகளைக் காக்கட்டும் கருணைக்கடலானவன் கன்னங்களைக் காக்கட்டும்
வாக்குக்கு தெய்வம் முகத்தைக் காக்கட்டும்
தெய்வங்களின் விரோதியை அழிப்பவன் நாவை காக்கட்டும்

ஹனுமானால் வணங்கப்படுபவன் ஹனுவை காக்கட்டும் வைகுண்டபதியானவர் தொண்டையைக் காக்கட்டும்
ஹயக்ரீவன் என் கழுத்தை காக்கட்டும்
திருமகளுக்கு இருப்பிடமானவன் இதயத்தைக் காக்கட்டும்

புவியைத் தாங்குபவன் வயிற்றை காக்கட்டும்
ப்ரஜாபதி ஆனவன் மேட்ரத்தைக் காக்கட்டும்
கதாயுதம் ஏந்தியவன் துடைகளை காக்கட்டும்
தாமரைக் கண்ணன் நாபியைக் காக்கட்டும்

உலகினை அளந்தவன் முழங்கால்களை காக்கட்டும்
அகிலங்களுக்கே தலைவன் ஆடுதசையைக் காக்கட்டும்
ஹயாசுரனை வதம்செய்தவன் புறங்கால்களை காக்கட்டும்
அறிவுக்கடலான தெய்வம் பாதங்களை காக்கட்டும்
வாக்குக்கு இறைவன் கிழக்குத்திகளில் காக்கட்டும்

மேன்மையான ஆயுதம் ஏந்தியவன் தெற்கில் காக்கட்டும்
பூபாரம் சுமப்பவன் மேல்திசையில் காக்கட்டும்
சிவனால் வணங்கப்படுபவன் வடக்கு திக்கில் காக்கட்டும்
சாட்சாத் நாராயணன் உயரே காக்கட்டும்

நற்செய்கைகளின் இருப்பிடமானவன் கீழ்ப்புறம் காக்கட்டும்
ஹரியானவன் வானில் காக்கட்டும்
புவியை தோற்றுவித்தவன் நாற்புறங்களிலும் காக்கட்டும்
அறிவுடைய எவன் இந்த கவசம்தனை

தன் உடலில் ஒவ்வொரு அங்கமாக தொட்டுக் கொண்டு
இணைத்தபடியே ஜபம் புரிவானோ அவனே
வீண்வாதம் புரிவோர் அரக்கர் குழுக்களால்
எந்நாழிகையும் துயர் காண்பதில்லை.

எவன் இந்த கவசத்தை மூன்று சந்திகளிலும்
பக்தி மேம்பட படித்திடுவானோ
அவன் மூடனாக உள்ளபொழுதிலும்
பிரஹஸ்பதிக்கு மேலாக விளங்குவான்
இது உறுதியான சத்தியவாக்கே.

-ஸ்ரீஹயக்ரீவ கவசம் முற்றிற்று

ஜ்ஞாநாநந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம்
ஹயக்ரீவமுபாஸ்மஹே'

என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி. இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்:

`ஸ்வரூபத்தில் ஞானமும், ஆனந்தமும் ஆனவரும் ரூபத்தில், சுத்த ஸ்படிகம் போன்ற வெண்மையை உடையவரும், ஞானத்தின் அதிஷ்டான தேவதையுமான ஹயக்ரீவனை உபாசிக்கிறோம்.'

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...