Monday, March 31, 2025

Namashivaya Mandhiram| நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம் 
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன் 
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல் 
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது 
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது 
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம் 
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...