ராம நாமம் சொல்ல சொல்ல நன்மை பெருகுமே! - நாவும் இனிக்குமே! பாமரன் முதல் பண்டிதன் வரை புனிதம் ஆக்குமே!
சிவனும் பார்வதியும் சொல்லும் நாமமாம்! கவலையை போக்கி சாந்தி நல்குமாம்!
ராம நாமம் சொல்லி அனுமன் கடலைத் தாண்டினான்! - மலையை தூக்கினான்! மலை போன்ற கவலையும் பனி போல் விலகுமாம்!
ராம நாமம் சொல்லி சபரி முக்தி எய்தினாள்! நாமமும் நாமியும் வேறு வேறு இல்லவே இல்லையாம்!
ராம நாமம் சொல்வதற்கு எந்த தடையும் இல்லையாம்! சொல்ல சொல்லச் தடைகள் எல்லாம் தானே விலகுமாம்!
No comments:
Post a Comment