Thursday, April 3, 2025

ராம‌நாம ஞானம்| Rama Nama Gyanam

நன்மையுண்மை வீரமீரம் உருவவெடுத்தால் யாரடா? 
நான்கு வேதம் காட்டுகின்ற பிரம்மமது ஏதடா? 
தாரகமாய் ஆகுகின்ற பேருமெது பாரடா 
ராமராம ராமராம ராமவென்று தேரடா
நேர்மையும் அளித்திடும் நீதியும் அளித்திடும் 
தீமையை எதிர்த்திடும் வீரமும் அளித்திடும் 
தீயவரை வெறுத்திடா குணமதும் கொடுத்திடும் 
ராமராம ராமராம ராமவென்ற நாமமே

வென்ற நாமம் ஏதடா? வெல்லும் நாமம் ஏதடா? 
வெள்ளையனை விரட்டியவர் சொன்ன நாமம் ஏதடா? 
வெள்ளையுள்ளம் தந்திடும் நாமமெது தேரடா 
ராமராம ராமராம ராமவென்று கூறடா

ராமராம ராமராம ராமவென்று கூறடா 
தொட்டசெயல் அத்தனையில் வெற்றிபெற்று வாழடா 
ராமராம ராமராம ராமவென்று கூறடா 
தொட்டதெல்லாம் வெற்றியாகி வெற்றிவாகை சூடடா

ராமராம ராமராம ராமவென்று கூறடா 
திண்மையுடல் மென்மைகுணம் கொண்டு மண்ணில் வாழடா 
மனநோயும் அற்றிடும் உடல்நோயும் அற்றிடும் 
ராமராம ராமராம ராமவென்று கூறடா

நல்லவனாய் வாழவும் யோகம் வேணும் காணடா 
சத்தியனாய் வாழவும் யோகம் வேணும் காணடா 
செல்வனாக வாழ்வும் யோகம் வேணும் காணடா 
யோகம் கொள்ள ராமராம ராமவென்று கூறடா

ராமராம ராமராம ராமவென்று கூறுவோன் 
ராமராம ராமராம ராமர்போல ஆகுவான் 
ராமராம ராமராம ராமர்போல ஆனபின் 
ராமராம புண்ணியமாம் கிருஷ்ணராவும் ஆகுவான்

கிருஷ்ணர்போல ஆவதும் கசக்குமோ குலாமரே 
லட்டுதின்ன ஆசைகொண்ட கலியுகக் குலாமரே
ராமராம ராமராம ராமர்போல ஆனபின் 
ராமராம புண்ணியமாம் கிருஷ்ணராவும் ஆகுவான்

மெய்வலிமை தந்திடும் மெய்ஞானம் தந்திடும் 
மெய்யான தெய்வத்தை கண்முன்னும் தந்திடும் 
மெய்மறைக்கும் பொய்களை அறுத்திடும் அறுத்திடும் 
மெய்யதான ராமராம ராமவென்ற நாமமே

விபத்துகள் தடுத்திடும் சூனியம் முறித்திடும் வினைகளில் தீயதை விரட்டியும் அடித்திடும் 
தவறுகள் செய்வதை தடுத்திடும் திருத்திடும் 
நன்மைசெய்ய வைத்திடும் ராம ராமராம நாமமே

ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராம வென்று கூறடா!

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...