வாங்கும் பக்தர்களே மிட்டாய் இருக்குது
மிக நேர்த்தியாக விட்டால் வராத மிட்டாய்
ஆத்ம மிட்டாய் இது ஜெகந்தனிலே மிக அருமையான மிட்டாய்
பரமாத்மா எனும் பதத்தினால் செய்த பக்தர்கள் தின்னும் மிட்டாய்
சுருக்கமாகலே இரண்டெழுத்துள்ள சூட்மமானமிட்டாய் வருத்தமின்றி தொண்டர்கள் வகையாகவே பாடும் ராமநாம மிட்டாய்.
ஆதியில் அயனுக்காக மச்சவதாரம் வகித்ததும் இந்த மிட்டாய்.
தேவர்களுக்காக கிரியை தாங்க கூர்மமான மிட்டாய்.
ஹிரண்யாதனை கொல்ல வராக வதாரம் வகித்ததும் இந்த மிட்டாய். பிரஹலாதனுக்காக தூணில் நின்றும் வந்த நரசிம்ம நாம மிட்டாய்.
மஹாபலியின் மமதை அடக்க வாமனமான மிட்டாய் கார்த்தவீர்யனின் கர்வத்தை அடக்கிய பரசுராமமிட்டாய்.
ராவணனை கொல்ல அவதரம் செய்த கோதண்டராம மிட்டாய்.
கம்ஸனை கொல்ல அவதாரம் செய்த பால் கோபால் மிட்டாய்.
கண்ணணுக்கண்ணனாய் அவதாரம் செய்த பலராம மிட்டாய்.
கலியுகந்தன்னில் கண் கண்ட தெய்வம் ஸ்கந்தனான மிட்டாய்.
பஞ்ச பாண்டவர்கள் பகுததறிந்து நல்ல பயற்சி பெற்ற மிட்டாய்.
கொஞ்சும் கிளிகள் பில்லாம் ரெங்கா ரெங்காவென்று கோதித் தின்னும் மிட்டாய்.
நானும் நீங்களுமாய் ஆனந்தமாக பஜனை செய்யும் மிட்டாய்.
இந்த மிட்டாய் உங்கள் சொந்த மிட்டாய் இது போனால் வராத மிட்டாய்.
No comments:
Post a Comment