Monday, October 7, 2024

காத்யாயனி 108 போற்றி தமிழ்| Kathyayani 108 Potri Tamil

ஓம் அகரத்தில் அமர்ந்திடும் அம்மா போற்றி
ஓம் அவன் அவள் அதுவும் ஆனோய் போற்றி
ஓம் அந்தணனுக்கு அன்னம் அளித்தோய் போற்றி
ஓம் ஆவணம் சித்தாடி அமர்ந்தோய் போற்றி
ஓம் ஆடி வெள்ளியில் ஆடிவரும் வல்லியே போற்றி
ஓம் ஆற்றைக் கடக்க ஆளாய் வந்தோய் போற்றி
ஓம் இதயத்தி லிருந்து இசைப்போய் போற்றி
ஓம் இகத்திலும் இன்பம் இடுவோய் போற்றி
ஓம் இன்னல்கள் அழித்திடும் எந்தாய் போற்றி
ஓம் ஈடிலா இரக்கம் ஈந்திடுத் தாயே போற்றி

ஓம் ஈரிரு சமயங்களின் ஈவே போற்றி
ஓம் உகரத்தின் உள்ளொளி ஆனோய் போற்றி
ஓம் உளமதில் உறையும் உருவே போற்றி
ஓம் உடுக்கின் ஒலியில் ஊதியமே போற்றி
ஓம் ஊமை எழுத்தில் ஊதியமே போற்றி
ஓம் ஊசலாடும் உளமதை ஊக்குவிப்போய் போற்றி
ஓம் எழுத்தின் வடிவில் எழுவோய் போற்றி
ஓம் எழுநிலை தந்திடும் எந்தாய் போற்றி
ஓம் ஏரிய பரண்மீது இருப்போய் போற்றி
ஓம் ஏவல் சூன்யம் எடுப்போய் போற்றி

ஓம் ஐய்யன் மானின் ஐயை போற்றி
ஓம் ஐந்திழுத்தும் நீயே ஆனோய் போற்றி
ஓம் ஒன்பது முனிகள் ஒன்றாய்த் துதிக்கிறார் போற்றி
ஓம் ஒன்றிய மனதில் உறைவோய் போற்றி
ஓம் ஒட்யாண பீடத்தில் உயர்வோய் போற்றி
ஓம் ஓங்காரத்தின் உள் இருப்போய் போற்றி
ஓம் ஓங்கியே உயரும் ஓங்காரியே போற்றி
ஓம் ஔவும் ஒவ்விட ஆனோய் போற்றி
ஓம் க எனும் எழுத்தின் கனியே போற்றி
ஓம் கன்னித் தெய்வக் கருணைக் கடலே போற்றி

ஓம் காவல் காக்கும் காத்தாயி அம்மா போற்றி
ஓம் கால் சிலம்பு கலீரென வருவோய் போற்றி
ஓம் கிடக்கும் தவமது கிட்டிட அருள்வோய் போற்றி
ஓம் கீழ்முகம் காண மேல்முகம் காட்டுவாய் போற்றி
ஓம் குங்கும அர்ச்சனை கொள்வோய் போற்றி
ஓம் குண்டலினி கூட்டும் குல தேவியே போற்றி
ஓம் குறுநகை புரிந்து குலத்தைக் காப்போய் போற்றி
ஓம் கூட்டும் ஐம்புலன் கூட்டுந் தாயே போற்றி
ஓம் கெட்டதகற்றி கேட்ட தருளுந் தாயே போற்றி
ஓம் கேள்வியில் ஞானம் கிளைத்திட அருள்வோய் போற்றி

ஓம் கைவல்யம் தந்திடுங் கருணைத் தாயே போற்றி
ஓம் கொடும் மாயையைக் குலைப்போய் போற்றி
ஓம் கோவிலாம் மனதில் குடி இருப்போய் போற்றி
ஓம் சண்டியுங் காளியும் சகலமும் ஆனோய் போற்றி
ஓம் சாமவேத சாரமாய்ச் சார்ந்தோய் போற்றி
ஓம் சித்தாடி காத்தாயி எனச் சிறந்தோய் போற்றி
ஓம் சிறுமி உருவில் சித்தத்தில் சேர்வோய் போற்றி
ஓம் சிலம்பொலி கேட்க செவி தந்தோய் போற்றி
ஓம் சீலமுள்ளவர் சீவனைக் காப்போய் போற்றி
ஓம் கழுமுனை காட்டிச் சுகந் தருவோய் போற்றி

ஓம் சூரிய சந்திர சூக்கும நாடிகள் ஆனோய் போற்றி
ஓம் செபமாலை தந்திடும் செல்வ மணியே போற்றி
ஓம் சேவகம் செய்வோர் செழிக்கச் செய்வோய் போற்றி
ஓம் சைவம் சேர்க்கச் செய்வினை அழிப்போய் போற்றி
ஓம் சொர்ணத் தகட்டில் சோபிக்குந் தாயே போற்றி
ஓம் சோதனை உற்றவர் வேதனைக் களைவோய் போற்றி
ஓம் தனை மறந்தவர்க்கு உந்தனைக் காட்டுந்தாயே போற்றி
ஓம் தானே எங்குமாய் தழைத்தோய் போற்றி
ஓம் தினை காத்தத் திரு மூவெழுத்தே போற்றி
ஓம் தீவினை அகற்றுந் தீஞ்சுடரே போற்றி


ஓம் துடியாய் வந்திடும் அடியார் துணையே போற்றி
ஓம் தூவெளி காட்டுந் தூய தாயே போற்றி
ஓம் தெளிந்திட மனதைத் தேற்றுந் தாயே போற்றி
ஓம் தேடுவோரிடம் தேடியே வருவோய் போற்றி
ஓம் தை வெள்ளியில் துள்ளி வரும் வல்லியே போற்றி
ஓம் தொலைவிலும் மன அலைவு அறிவோய் போற்றி
ஓம் தோரணங் கட்டித் தொழுவோர் துணையே போற்றி
ஓம் நயன ஒளியில் நலந் தரும் நங்காய் போற்றி
ஓம் நாசி யோத்தில் நான் என்ப தழிப் போய் போற்றி
ஓம் நீதியாம் உன் ஸந்நிதி நிழலளிப்போய் போற்றி

ஓம் நீயுண்டு நானுண்டு எனும் நீதி ஆனோய் போற்றி
ஓம் நுணுக்க மறியும் நுண்ணறிவே போற்றி
ஓம் நூறாய் ஒன்றாய் நுன் அணுவானோய் போற்றி
ஓம் நெடிலாய்க் குறிலாய் நின்றோய் போற்றி
ஓம் நேர்ந்திடும் ஆயுதமும் ஆனோய் போற்றி
ஓம் நைந்த மனதில் நர்த்தன மிடுவோய் போற்றி
ஓம் நொடியி லிருவினை நொறுக்குந் தாயே போற்றி
ஓம் நோன்பில் கடைக்கண் நோக்களிப்போய் போற்றி
ஓம் பரண் மீதேறி பறவைகளை ஓட்டினோய் போற்றி
ஓம் பணங் காத்துன் குணங் காட்டினோய் போற்றி

ஓம் பணிந்தவர் தலையில் பாதம் பதிப்போய் போற்றி
ஓம் பாதம் பதித்துப் பரம பதமே அருள்வோய் போற்றி
ஓம் பிறப்பிறப்பு அழிக்கும் பிறை மதியே போற்றி
ஓம் பீடமாம் மேருவில் பீடுடைய அம்மா போற்றி
ஓம் புலனடைக்கப் புத்துயிர் அளிக்கும் புனிதையே போற்றி
ஓம் பூசையி லோங்கார ஓசையு மாவோய் போற்றி
ஓம் பெண்ணாய் ஆணாய் பலவாய் நின்றோய் போற்றி
ஓம் பேசா அநுபூதி பேணிடத் தருவோய் போற்றி
ஓம் பைந்தமிழ் முருகன் பக்கலில் வரக் கண்டோய் போற்றி
ஓம் பொய்யான வாழ்வை மெய்யாக்கும் அன்னையே போற்றி

ஓம் போற்றும் அடியார் துயர் ஆற்றும் அம்மா போற்றி
ஓம் மகரத்தில் மலர்ந்த மான் விழி மங்கையே போற்றி
ஓம் மாறிடா மனதில் மாரியம்மை ஆவோய் போற்றி
ஓம் மின்னி ஒளி காட்டி மிளிரும் மகுடத் தாயே போற்றி
ஓம் மீளா அன்புக்கு ஆளாக்கும் அன்னையே போற்றி
ஓம் மும்மலங் கழிக்க முன் வந்தருள்வோய் போற்றி
ஓம் மூலமும் நடுவும் முடிவு மானோய் போற்றி
ஓம் மெய் ஞானந் தந்திடும் மீன் விழி அம்மா போற்றி
ஓம் மேலே ஆயிரத்தெட்டில் மேவிடுங் காத்தாயி போற்றி
ஓம் மை வழி வரும் வினை கைவழி கழிக்கும் காத்தாயி போற்றி

ஓம் மொழி வழி துதிக்க குழிவழி அகற்றும் காத்தாயி போற்றி
ஓம் மோனம் தந்து வானத்தில் வைக்கும் காத்தாயி போற்றி
ஓம் வீரனோடு லாடன் விளங்கிட வைத்த காத்தாயி போற்றி
ஓம் அரனொடு ஐங்கரனை அழைத்து வைத்த காத்தாயி போற்றி
ஓம் பக்கத்திப் பச்சைவாழி பார்த்து மகிழும் காத்தாயி போற்றி
ஓம் பக்திக் கிரங்கி பர பயம் அகற்றும் காத்தாயி போற்றி
ஓம் சக்தியாய் நின்று சகலமும் தானாகிய காத்தாயி போற்றி
ஓம் முக்தி தந்து முடித் தருளுந் தாயாம் காத்தாயி போற்றி

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...