Sunday, February 16, 2025

பழநி ஆண்டவர் திருப்பதிகம்| Pazhani Andavar Thirupathigam

மோதகம் நிவேதனம், மூஷிகம் உன் வாகனம்? முறங்கள்போல் செவித்தலம், வரம் கொடுக்கும் ஐங்கரம், போதகம், கஜானனம், புராணஞான வாரணம், போற்றி, போற்றி உன்பதம் காக்க வேண்டும் என்குலம்.
வேல்பிடித்த கையிலே செங்கோல் பிடித்து நின்றவா? வேண்டி வந்த யாவையும் விரைந்தளிக்கும் மன்னவா? கால்பிடித்தேன், என் மனக் கலக்கம் நான் உரைக்காகவா? கண்திறக்க வேண்டும் தென்பழநி ஆண்டவா!

எனது பக்கம் நீயிருக்கக் எங்கிருந்து பகைவரும்? யானிருந்த மனை நடுங்க எவ்விதம் துயர் வரும? மனது நொந்து நொந்து வந்த மைந்தனை நீ தாங்கவா வாழி வாழி தென்பழநி கோயில் கொண்ட ஆண்டவா!

ஆதிநாளில் சூரனை அழித்த தெய்வம் நீயெனில் அடுத்து வந்த பகையெலாம் முடித்த துண்மை தானெனில் மோதி நிற்கும் என் பகை முடிக்க வேல் எடுத்து வா முருகனேதென் பழநி கொண்ட அழகனே என் ஆண்டவா!

பன்னிரெண்டு கைத்தலத்தில் பளபளக்கும் ஆயுதம்! பாய்ந்து செல்லத் துடிதுடிக்கும் பச்சை மயில் வாகனம்! இன்னல் செய்யும் பகை முடிக்க இன்னும் என்ன தாமதம் என்னையாளும் மன்னனான தென்பழனி ஆண்டவா!

ஈசனே உன் மனைவி பேரும் தேவசேனை என்கிறார்! இன்னொருத்தி விழியிரண்டும் ஈட்டியென்று சொல்கிறார்! வாசம் செய்யும் இடமெலாம் பாசறைகள் அல்லவா? மைந்ததெனன் பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா!

ஆறுபடை வீடிருக்க வேறுபடை ஏனடா? அழிக்ககொணாத கோட்டைநின் சடாக்காஷரங்கள் தாமடா? மாறிலாத கவசமாய் வரும் கழன்று வேலடா? வல்வினை பகைமுடிப்பாய் தென் பழனி ஆண்டவா!

ஆரவார மாய் எழும் அகப்பகை: புறப்பகை: அறியொனாத மந்திர யந்திர தந்திரமாய் வரும்பகை வேர் விடும் குலப்பகை; வினைப்பகை; கிரகப்பகை வேறுபல் பகைமுடிப்பாய் வேல் பழநி ஆண்டவா!

எந்த வேளையான போதும் கந்தவேலைப் பாடுவேன்! இந்த வேளை உன்னையன்றி எந்த ஆளை நாடுவேன்!
வல்வினை பகைமுடிப்பாய் தென் பழனி ஆண்டவா!
வாழி வாழி தென்பழநி கோயில் கொண்ட ஆண்டவா!


No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...