Wednesday, April 16, 2025

Brihaspati Thuthi Tamil| பிரகஸ்பதி துதி தமிழ்

தினந்தோறும் இந்தத் துதியைச் சொல்வது நல்லது. இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டுமாவது காலை ஆறு முதல் ஏழுமணிக்குள் இந்தத் துதியைச் சொல்லி வருவது சகல தோஷங்களிலும் இருந்து விடுபடச் செய்யும். குருகடாட்சம் கிடைத்து வாழ்வில் திருமணம் முதலான தடைகளை நீங்கும்.
மஞ்சள் பட்டாடை தரித்தவரும் தேவர்களின் குருவும், வாக்கு வல்லமை மிக்கவரும், பார்வையாலேயே பல்வேறு நன்மைகளைச் செய்பவரும், என்றும் இளமையுடன் இருப்பவருமான பிரஹஸ்பதியை வணங்குகிறேன்.

கிரகங்களுள் தலைமையானவரும், மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்களை தனது பார்வை பலத்தால் போக்குபவரும், அழகிய வடிவினரும், அமரர்களின் ஆசார்யரும், கருணை நிறைந்தவருமான குருபகவானை துதிக்கிறேன்.

வேத வேதாந்தங்களை அறிந்தவரும், அனைத்து தேவர்களையும் விட அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவரும், நீதி தவறாதவரும், தாராவை தன் பத்தினியாகக் கொண்டவரும், ஆங்கீரஸரும், உலக உயிர்களின் குருவாகத் திகழ்பவருமான பிரஹஸ்பதியை போற்றுகின்றேன்.

குருபகவானை பக்தியோடு போற்றி இத்துதியைச் சொல்பவர், சங்கடங்கள் ஏதும் இல்லாதவராக, பிணிகளில் இருந்து விடுபட்டவராக, நீண்ட ஆயுளுடன், ஆரோக்யமாக, திருமணம், புத்திர சந்தான ப்ராப்தி உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் பெறுவர்.

வியாழக்கிழமைகளில் இந்தத் துதியைச் சொல்லி, தூப தீபங்கள் ஏற்றி, மஞ்சள் நிற ஆடை அணிவித்து, நறுமண மலர்களால் குருபகவானை அர்ச்சிப்பதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் வருவோர் வாழ்நாள் முழுவதும் குருகடாட்சத்தால் எல்லா நற்பலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம்!

Thirumanancheri Thirupathigam with meaning| திருமணஞ்சேரி பதிகம் அர்த்தத்துடன்

பாடல் எண் : 01
அயிலாரும் அம்பு அதனால் புரம் மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாள் ஒருகூறாகி 
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் 
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.

பாடல் விளக்கம்‬:
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழி பேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 02
விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய 
நெதியானை நீள்சடைமேல் நிகழ்வித்த வான் 
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பதியானை பாட வல்லார் வினை பாறுமே.

பாடல் விளக்கம்‬:
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.


பாடல் எண் : 03
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய 
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி 
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே.

பாடல் விளக்கம்‬:
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

பாடல் எண் : 04
விடையானை மேல் உலகு ஏழும் இப்ரெலாம் 
உடையானை ஊழிதோறு ஊழியுளதாய 
படையானை பண்ணிசை பாடு மணஞ்சேரி 
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.

பாடல் விளக்கம்‬:
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக் காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசை பாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 05
எறியார் பூங்கொன்றையினோடும் இளமத்தம் 
வெறியாரும் செஞ்சடையார மிலைந்தானை
மறியாரும் கை உடையானை மணஞ்சேரிச் 
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

பாடல் விளக்கம்‬:
ஒளிபொருந்திய கொன்றை மலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.


பாடல் எண் : 06
மொழியானை முன்னொரு நான்மறை ஆறு அங்கம் 
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி 
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே.

பாடல் விளக்கம்‬:
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 07
எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்குக் 
கண்ணானை கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே.

பாடல் விளக்கம்‬:
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப் போற்றும் புகழ் மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.


பாடல் எண் : 08
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டு இசை பாடும் மணஞ்சேரி 
பிடித்தாரப் பேண வல்லார் பெரியோர்களே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.

பாடல் எண் : 09
சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார் நல் மாதவர் ஏத்து மணஞ்சேரி 
எல்லாமா எம்பெருமான் கழல் ஏத்துமே.

பாடல் விளக்கம்‬:
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.


பாடல் எண் : 10
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர் 
சொல் தேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி 
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.

பாடல் விளக்கம்‬:
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.


பாடல் எண் : 11
கண்ணாரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த 
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.

பாடல் விளக்கம்‬:
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை

அனைத்து தெய்வங்கள் 108 போற்றி| All God 108 Potri

ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றி
ஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றி
ஓம் ஸ்ரீ கந்தா போற்றி
ஓம் ஸ்ரீ கடம்பா போற்றி
ஓம் ஸ்ரீ இடும்பா போற்றி
ஓம் ஸ்ரீ கபாலீஸ்வரா போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சிவனே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பகத்தாயே போற்றி
ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரீயே போற்றி
ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீ நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாஸுதேவனே போற்றி
ஓம் ஸ்ரீ கிருஷ்ணனே போற்றி 
ஓம் ஸ்ரீ பிரம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீ வைதீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அண்ணாமலையானே போற்றி
ஓம் ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜனே போற்றி
ஓம் ஸ்ரீ சரபேஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ நந்தீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அதிகார நந்தியே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ பெருமாளே போற்றி
ஓம் ஸ்ரீ சத்திய நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தான கோபாலனே போற்றி
ஓம் ஸ்ரீ கோவிந்தனே போற்றி
ஓம் ஸ்ரீமதி ராதா ராணியே போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவா போற்றி
ஓம் ஸ்ரீ சுதர்ஸனா போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஆதியந்தப்பிரபுவே போற்றி
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே போற்றி
ஓம் ஸ்ரீ மீனாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ விசாலாட்சியே போற்றி 
ஓம் ஸ்ரீ அன்னபூரணியே போற்றி
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ அபிராமியே போற்றி
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ பத்ரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ ச்யாமளாவே போற்றி
ஓம் ஸ்ரீ பிரத்யங்கராவே போற்றி
ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி
ஓம் ஸ்ரீ சாகம்பரியே போற்றி
ஓம் ஸ்ரீ மாரியம்மாவே போற்றி
ஓம் ஸ்ரீ மூகாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினியே போற்றி
ஓம் ஸ்ரீ பவானியே போற்றி
ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ வைபவ லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் ஸ்ரீ சப்த கன்னிகளே போற்றி
ஓம் ஸ்ரீ திருவிளக்கே போற்றி
ஓம் ஸ்ரீ துளசியே போற்றி
ஓம் ஸ்ரீ சூரியனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ அங்காரகனே போற்றி
ஓம் ஸ்ரீ புதனே போற்றி
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சுக்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகுவே போற்றி
ஓம் ஸ்ரீ கேதுவே போற்றி
ஓம் ஸ்ரீ நாரதா போற்றி
ஓம் ஸ்ரீ இந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ வருணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாயுவே போற்றி
ஓம் ஸ்ரீ அக்னியே போற்றி
ஓம் ஸ்ரீ குபேரா போற்றி
ஓம் ஸ்ரீ யமனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா போற்றி
ஓம் ஸ்ரீ சாய்பாபாவே போற்றி 
ஓம் ஸ்ரீ வாஸ்து தேவனே போற்றி
ஓம் ஸ்ரீ நாகராஜாவே போற்றி
ஓம் ஸ்ரீ வீரபத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ பைரவா போற்றி
ஓம் ஸ்ரீ மாக்கண்டேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஐயனாரே போற்றி
ஓம் ஸ்ரீ முனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே போற்றி
ஓம் ஸ்ரீ மதுரைவீரனே போற்றி
ஓம் ஸ்ரீ அகத்திய ரிஷியே போற்றி
ஓம் ஸ்ரீ ஆதிசங்கரனே போற்றி
ஓம் ஸ்ரீ அறுபத்திமூவர்களே போற்றி
ஓம் ஸ்ரீ ஆழ்வார்களே போற்றி
ஓம் ஸ்ரீ மகரிஷிகளே போற்றி
ஓம் ஸ்ரீ சித்தர்களே போற்றி
ஓம் ஸ்ரீ வேதங்களே போற்றி
ஓம் ஸ்ரீ உபநிஷத்துகளே போற்றி
ஓம் ஸ்ரீ இதிகாச புராணங்களே போற்றி
ஓம் ஸ்ரீ கங்கையே போற்றி 
ஓம் ஸ்ரீ யமுனையே போற்றி 
ஓம் ஸ்ரீ காமதேனுவே போற்றி
ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாவே போற்றி
ஓம் ஸ்ரீ ஆயுர்தேவீயே போற்றி
ஓம் ஸ்ரீ சகலதேவதா போற்றி போற்றி….

Vaastu Moorthy Potri Thuthi| வாஸ்து மூர்த்தி போற்றி துதி

1. ஓம் சுவர்க மங்கள சுவாமியே போற்றி!
2. ஓம் சுவர்க நிலம் பூந்தகையே போற்றி!
3. ஓம் சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி!
4. ஓம் சுவர்க புவன வடிவோனே போற்றி!
5. ஓம் சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி!
6. ஓம் சுவர்க பூலோக நாதரே போற்றி!
7. ஓம் சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி!
8. ஓம் சுவர்க புவன வளச் செல்வமே போற்றி!
9. ஓம் சுவர்க நிலமண்டல தேவா போற்றி!
10.ஓம் சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி!
11. ஓம் பூ பூவ சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி!
12. ஓம் சுவர்க இகபர நிலவழி நித்யனே போற்றி!
13. ஓம் சுவர்க பூநாத கான புவனனே போற்றி!
14. ஓம் சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா போற்றி!
15. ஓம் சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி!
16. ஓம் சுவர்க மண் உறை மறைவடி மகேசா போற்றி!
17. ஓம் சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி!
18. ஓம் சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி!
19. ஓம் சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி!
20. ஓம் சுவர்க புண்ணியத் திருமால் புறத்துரு போற்றி!
21. ஓம் சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி போற்றி!
22. ஓம் சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி!
23. ஓம் சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி!
24. ஓம் சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி! 
25. ஓம் சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி!
26. ஓம் சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி!
27. ஓம் சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி!
28. ஓம் சுவர்க இதழ் என்றும் இயம்பும் இனியா போற்றி!
29. ஓம் சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி!
30. ஓம் சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி 
31. ஓம் சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி! 
32. ஓம் சுவர்க மருத்துவக் கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி! 
33. ஓம் சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி!
34. ஓம் சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! 
35. ஓம் சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி!
36. ஓம் சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா போற்றி! 

Monday, April 14, 2025

கணபதி பிரார்த்தனை ஸ்லோகம்| Ganapathi Prarthana Sloka Tamil

இது காவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனி இயற்றியது

1. பத்ரதர மூர்த்திம் பத்ரதம கீர்த்திம் ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் நந

மங்களகரமான மூர்த்தியை, மங்களகரமான கீர்த்தியுள்ளவரை, ருத்திரனின் தனயனான பரம்பொருளின் மகிமையைப் பாடுவோம்.
2. ஜ்யோதிரிஹ ஸூக்ஷ்ம ஜ்வாலம் அதிதீப்தம் பாதி குலகுண்டௌ யோகிம் அனுஜாப்தம்?

பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் ஒளிர்கிறது.

3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே ஸந்ததமபாக்யோ மஜ்ஜதி ஸ: சோகே?

கணபதி கடவுளே! உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாகச் சோகத்தில் மூழ்கி இருப்பான்.

4. சீத நக ஜாயா: ஸூனுரதி ஹ்ருத்யாம் பூரி கருணோ மே பூரயதி வித்யாம்?

குளிர்ந்த மலையின் மகளின் (பார்வதி) புதல்வன் பூரண கருணையோடு இதயத்துக்கு உகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருள்வாராக!

5. வாரணமுகோ மே வாரயது கஷ்டம் ஸர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம்?

யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!

6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் தந்தி வதனோமே வர்த்தயது யோகம்?

வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் ஆன்மிக யோகத்தை வளர்க்கட்டும்!

7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா ஆவிச விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா?

யானை முகத்தோனே! மிகுந்த பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு எனக்குள் ஆவிர்பவிப்பாயாக!

8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜனாய ஈச்வர கணானாம் பாரத ஹிதாய ?

ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் சேவகனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையாகச் சேவையாற் றும் சக்தியை அருள்வாய்!

9. ஸர்வத ஜனோண்யம் வாஞ்சதி ந முக்திம் தேச குசலாய ப்ரார்த்தயதி சக்திம்?

எல்லாம் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தி யைக் கேட்கவில்லை. தேச நலனுக்கு உழைக்கத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.

Friday, April 4, 2025

அகர வரிசையில் அனந்த ராமாயணம்| Anantha Ramayan

அனந்தனே அசுரர்களை அழித்து அன்பர்களுக்கு அருள அவனியில் அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரனின் அம்சமாய் அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவோ அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!
அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான். அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.

அடவியிலும் அபாயம்! அரக்கர்களின் அரசன், அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை, அயோத்தி அண்ணல், அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை. அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த அடியாருள் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின் அரண்களை, அகந்தைகளை அடியொடு அக்னியால் அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி, அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான், அத்தசமுக அரக்கனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து, அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்தது அனுமனின் அருளாலே. அவன் அடி அர்ச்சிப்போம், அனைத்தையும் அருளிடுவோன் அன்பரின் அகம் அறிந்தே!

Thursday, April 3, 2025

ராம‌நாம ஞானம்| Rama Nama Gyanam

நன்மையுண்மை வீரமீரம் உருவவெடுத்தால் யாரடா? 
நான்கு வேதம் காட்டுகின்ற பிரம்மமது ஏதடா? 
தாரகமாய் ஆகுகின்ற பேருமெது பாரடா 
ராமராம ராமராம ராமவென்று தேரடா
நேர்மையும் அளித்திடும் நீதியும் அளித்திடும் 
தீமையை எதிர்த்திடும் வீரமும் அளித்திடும் 
தீயவரை வெறுத்திடா குணமதும் கொடுத்திடும் 
ராமராம ராமராம ராமவென்ற நாமமே

வென்ற நாமம் ஏதடா? வெல்லும் நாமம் ஏதடா? 
வெள்ளையனை விரட்டியவர் சொன்ன நாமம் ஏதடா? 
வெள்ளையுள்ளம் தந்திடும் நாமமெது தேரடா 
ராமராம ராமராம ராமவென்று கூறடா

ராமராம ராமராம ராமவென்று கூறடா 
தொட்டசெயல் அத்தனையில் வெற்றிபெற்று வாழடா 
ராமராம ராமராம ராமவென்று கூறடா 
தொட்டதெல்லாம் வெற்றியாகி வெற்றிவாகை சூடடா

ராமராம ராமராம ராமவென்று கூறடா 
திண்மையுடல் மென்மைகுணம் கொண்டு மண்ணில் வாழடா 
மனநோயும் அற்றிடும் உடல்நோயும் அற்றிடும் 
ராமராம ராமராம ராமவென்று கூறடா

நல்லவனாய் வாழவும் யோகம் வேணும் காணடா 
சத்தியனாய் வாழவும் யோகம் வேணும் காணடா 
செல்வனாக வாழ்வும் யோகம் வேணும் காணடா 
யோகம் கொள்ள ராமராம ராமவென்று கூறடா

ராமராம ராமராம ராமவென்று கூறுவோன் 
ராமராம ராமராம ராமர்போல ஆகுவான் 
ராமராம ராமராம ராமர்போல ஆனபின் 
ராமராம புண்ணியமாம் கிருஷ்ணராவும் ஆகுவான்

கிருஷ்ணர்போல ஆவதும் கசக்குமோ குலாமரே 
லட்டுதின்ன ஆசைகொண்ட கலியுகக் குலாமரே
ராமராம ராமராம ராமர்போல ஆனபின் 
ராமராம புண்ணியமாம் கிருஷ்ணராவும் ஆகுவான்

மெய்வலிமை தந்திடும் மெய்ஞானம் தந்திடும் 
மெய்யான தெய்வத்தை கண்முன்னும் தந்திடும் 
மெய்மறைக்கும் பொய்களை அறுத்திடும் அறுத்திடும் 
மெய்யதான ராமராம ராமவென்ற நாமமே

விபத்துகள் தடுத்திடும் சூனியம் முறித்திடும் வினைகளில் தீயதை விரட்டியும் அடித்திடும் 
தவறுகள் செய்வதை தடுத்திடும் திருத்திடும் 
நன்மைசெய்ய வைத்திடும் ராம ராமராம நாமமே

ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராமராம ராமமே
ராமராம ராமராம ராம வென்று கூறடா!

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...