Wednesday, November 27, 2024

Shiva panjatchara stotra tamil| சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் தமிழ்

அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசு வரதன்தான் விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தன் அபேதமும் பேதம் ஆன அரியதிகம் பரனை யந்த நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின் றேனே.

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண் நந்தியுள் ளிட்டோரான நற்கணநாதன் ஆனான் மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான மகாரமாய் உருக்கொள் வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே

தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து தாட்சாயனியின் மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன் தொக்கமா விடைக்கொ டிகொள் தூயனை அரனை அந்தச் சிகாரமாய் உருக்கொள் வோனைச் சிவனையான் துதிக்கின்றேனே.

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழுது வாழ்த்தும் சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின் றேனே.

யட்ச சொரூபம் கொண்ட யாகசெஞ் சடையைக் கொண்ட கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.

Wednesday, November 13, 2024

வில்வாஷ்டகம் தமிழ்| Vilvashtakam Tamil| Bilvashtakam Tamil

முக்கண்ணன், முக்குணத்தான் மூன்று முனை சூலம் போல் மூன்றுதள வில்வ இலை சிவவடிவாய் தோன்றிடுமே !

முப்பிறவி பிணிதீர்க்கும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே !

மங்கலத்தின் அடையாளம் மென்மைமிகு வில்வதளம் ! பக்தியுடன் செய்திடுவேன் சிவபூஜை அதனாலே…!

நல்லவைகள் தந்தருளும் ஒரு வில்வம் கரமெடுத்து' எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

முழுதான மூன்றுதளம் வில்வ இலை அதனாலே தொழுதேனே பூஜையிலே நந்தியெனும் ஈஸ்வரனை!

பாவமெலாம் அழித்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

சோம யாகம் செய்தபலன் சாளக்கிராம தானபலன் யாவையுமே தந்திடுமே வில்வமெனும் மூன்று தளம்!

சேமமெல்லாம் சேர்த்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

வாரணங்கள் ஆயிரமாய் தரும் பலனைத் தந்திடுமே ! ஆயிரமாய் திருமணங்கள் செய்துதரும் பலனுடனே!

பூரணமாய் பலன்கொடுக்கும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே !

திருமகளின் திருமார்பில் தோன்றியதாம் வில்வமரம் ! பெருமானாம் ஈசனவன் மனம்விரும்பும் வில்வமரம்!

பெருமைமிகு தருவதனில் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

வில்வமரம் கண்டாலே வினைதீரும் கண்டேனே ! வில்வமரம் தொட்டாலோ பாவமெலாம் விட்டோடும்!

பெரும்பாவம் தீர்த்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

காசியிலே பைரவனை ப்ரயாகையில் மாதவனை ஆசிபெற வேண்டியதன் அரும்பலனைத் தந்திடுமே!

நல்லபலன் தந்தருளும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

அடிமுனையில் ப்ரம்மனுமே நடுவினிலே திருமாலும் மேல்முனையில் ஈசனுமே உறைகின்ற வில்வ இலை!

மும்மூர்த்தி வாழ்கின்ற ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!

வில்வாஷ்டகம் இதை ஈசன் சன்னிதியில் பக்தியுடன் துதிப்போர்கள் முக்தியுடன் சிவனடியைச் சேர்ந்திடிவார் நிச்சயமாய் !


Siddhargal 108 Potri | சித்தர்கள் 108 போற்றி

1. ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி
2. ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகளே போற்றி
3. ஓம் அசுவினித்தேவர் திருவடிகளே போற்றி
4. ஓம் அத்திரிமகரிஷி திருவடிகளே போற்றி
5. ஓம் அம்பிகானந்தர் திருவடிகளே போற்றி
6. ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகளே போற்றி
7. ஓம் அல்லமாபிரபு திருவடிகளே போற்றி
8. ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகளே போற்றி
9. ஓம் இடைக்காடர் திருவடிகளே போற்றி
10. ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகளே போற்றி

11. ஓம் இராமதேவர் திருவடிகளே போற்றி
12. ஓம் இராமானந்தர் திருவடிகளே போற்றி
13. ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகளே போற்றி
14. ஓம் ஒளவையார் திருவடிகளே போற்றி
15. ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகளே போற்றி
16. ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகளே போற்றி
17. ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகளே போற்றி
18. ஓம் கண்ணானந்தர் திருவடிகளே போற்றி
19. ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகளே போற்றி
20. ஓம் கனநாதர் திருவடிகளே போற்றி

21. ஓம் கணபதிதாசர் திருவடிகளே போற்றி
22. ஓம் கதம்பமகரிஷி திருவடிகளே போற்றி
23. ஓம் கபிலர் திருவடிகளே போற்றி
24. ஓம் கமலமுனிவர் திருவடிகளே போற்றி
25. ஓம் கருவூர்தேவர் திருவடிகளே போற்றி
26. ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகளே போற்றி
27. ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகளே போற்றி
28. ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகளே போற்றி
29. ஓம் கனராமர் திருவடிகளே போற்றி
30. ஓம் காகபுஜண்டர் திருவடிகளே போற்றி

31. ஓம் காசிபர் திருவடிகளே போற்றி
32. ஓம் காலாங்கிநாதர் திருவடிகளே போற்றி
33. ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகளே போற்றி
34. ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகளே போற்றி
35. ஓம் குமரகுருபரர் திருவடிகளே போற்றி
36. ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகளே போற்றி
37. ஓம் குருராஜர் திருவடிகளே போற்றி
38. ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகளே போற்றி
39. ஓம் கூர்மானந்தர் திருவடிகளே போற்றி
40. ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகளே போற்றி

41. ஓம் கோரக்கர் திருவடிகளே போற்றி
42. ஓம் கௌசிகர் திருவடிகளே போற்றி
43. ஓம் கௌதமர் திருவடிகளே போற்றி
44. ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகளே போற்றி
45. ஓம் சங்கர மகரிஷி திருவடிகளே போற்றி
46. ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகளே போற்றி
47. ஓம் சச்சிதானந்தர் திருவடிகளே போற்றி
48. ஓம் சட்டநாதர் திருவடிகளே போற்றி
49. ஓம் சண்டிகேசர் திருவடிகளே போற்றி
50. ஓம் சத்யானந்தர் திருவடிகளே போற்றி

51. ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகளே போற்றி
52. ஓம் சிவவாக்கியர் திருவடிகளே போற்றி
53. ஓம் சிவானந்தர் திருவடிகளே போற்றி
54. ஓம் சுகபிரம்மர் திருவடிகளே போற்றி
55. ஓம் சுந்தரானந்தர் திருவடிகளே போற்றி
56. ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகளே போற்றி
57. ஓம் சூதமுனிவர் திருவடிகளே போற்றி
58. ஓம் சூரியானந்தர் திருவடிகளே போற்றி
59. ஓம் சூலமுனிவர் திருவடிகளே போற்றி
60. ஓம் சேதுமுனிவர் திருவடிகளே போற்றி

61. ஓம் சொரூபானந்தர் திருவடிகளே போற்றி
62. ஓம் ஜம்புமகரிஷி திருவடிகளே போற்றி
63. ஓம் ஜமதக்னி திருவடிகளே போற்றி
64. ஓம் ஜனகர் திருவடிகளே போற்றி
65. ஓம் ஜெகநாதர் திருவடிகளே போற்றி
66. ஓம் ஜெயமுனிவர் திருவடிகளே போற்றி
67. ஓம் ஞானச்சித்தர் திருவடிகளே போற்றி
68. ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகளே போற்றி
69. ஓம் தானந்தர் திருவடிகளே போற்றி
70. ஓம் திருகோணச்சித்தர் திருவடிகளே போற்றி

71. ஓம் திருமாளிகைதேவர் திருவடிகளே போற்றி
72. ஓம் திருமூலதேவர் திருவடிகளே போற்றி
73. ஓம் துர்வாசமுனிவர் திருவடிகளே போற்றி
74. ஓம் தேரையர் திருவடிகளே போற்றி
75. ஓம் நந்தனார் திருவடிகளே போற்றி
76. ஓம் நந்தீஸ்வரர் திருவடிகளே போற்றி
77. ஓம் நாதாந்தசித்தர் திருவடிகளே போற்றி
78. ஓம் நாரதர் திருவடிகளே போற்றி
79. ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகளே போற்றி
80. ஓம் பத்ரகிரியார் திருவடிகளே போற்றி

81. ஓம் பதஞ்சலியார் திருவடிகளே போற்றி
82. ஓம் பரத்துவாசர் திருவடிகளே போற்றி
83. ஓம் பரமானந்தர் திருவடிகளே போற்றி
84. ஓம் பராசரிஷி திருவடிகளே போற்றி
85. ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகளே போற்றி
86. ஓம் பிங்களமுனிவர் திருவடிகளே போற்றி
87. ஓம் பிடிநாகீசர் திருவடிகளே போற்றி
88. ஓம் பிருகுமகரிஷி திருவடிகளே போற்றி
89. ஓம் பிரும்மமுனிவர் திருவடிகளே போற்றி
90. ஓம் புண்ணாக்கீசர் திருவடிகளே போற்றி

91. ஓம் புலத்தீசர் திருவடிகளே போற்றி
92. ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகளே போற்றி
93. ஓம் பூனைக்கண்ணார் திருவடிகளே போற்றி
94. ஓம் போகமகரிஷி திருவடிகளே போற்றி
95. ஓம் மச்சமுனிவர் திருவடிகளே போற்றி
96. ஓம் மஸ்தான் திருவடிகளே போற்றி
97. ஓம் மயூரேசர் திருவடிகளே போற்றி
98. ஓம் மிருகண்டரிஷி திருவடிகளே போற்றி
99. ஓம் மெய்கண்டதேவர் திருவடிகளே போற்றி
100. ஓம் மௌனசித்தர் திருவடிகளே போற்றி

101. ஓம் யூகிமுனிவர் திருவடிகளே போற்றி
102. ஓம் யோகச்சித்தர் திருவடிகளே போற்றி
103. ஓம் யோகானந்தர் திருவடிகளே போற்றி
104. ஓம் ரோமரிஷி திருவடிகளே போற்றி
105. ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகளே போற்றி
106. ஓம் வரதரிஷி திருவடிகளே போற்றி
107. ஓம் வியாக்ரமர் திருவடிகளே போற்றி
108. ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகளே போற்றிப் போற்றி!

Wednesday, November 6, 2024

Kandha Sashti Kavasam Tamil| கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்

காப்பு

நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மைய நடஞ்செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென்று உவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக!
நேசக் குறமகள் நினைவோன்! வருக
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிற நிற நிறென

வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங்கிலியும்
கிலியுஞ்சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்
ஈராறு செவியில் இலங்குகுண் டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நககென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோத னென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
என் தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்

உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வே லவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!

கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்தி ெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி

அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Tuesday, November 5, 2024

முருகன் அஷ்டோத்திர பாமாலை தமிழ்| Murugan Ashtothra Pamalai Tamil

சீர் பரமன் கன்னுதலின் செய்ய திரு முருகா
செந்தீயில் ஆறு பொறி சேய் வடிவின் முருகா
ஓர் பெரும் சரவணையில் உற்ற திரு முருகா
ஒளி மீன்கள் அறுவர் முலை உண்டு வளர் முருகா
பார்வதி அணைக்க ஒரு பாங்கு சேர் முருகா
பன்னிருகை ஆறுமுகம் பகர் கந்த முருகா
பார் புகழும் நவ வீரர் பக்க முறை முருகா
பரமேசர் நெஞ்சிலுரை பாலனெனும் முருகா
செங்கட் கடாவினை அடக்கியூர் முருகா
செம் பொருளில் பிரமனை சிறை செய்த முருகா
சங்கரர்க் கோதுமொறு தற்பரா முருகா
தண்டை கிண் கிணி கொஞ்சு தாழென முருகா
அங்கனிற் குலகை வலமாய் வந்த முருகா
ஆண்டி வேடம் கொண்ட ஐயனே முருகா
தங்கு வையாபுரித்தலமுற்ற முருகா 
சாடிடும் பனைவென்ற சக்திவேல் முருகா
அரும்பழம் நீ என்ற அறன் சொன்ன முருகா
அறுமுகம் ஓராரின் அழகு சேர் முருகா
அடியார் கிரங்கிடும் அன்னலே முருகா 
இரு விழிகள் ஈராரின் செம்மலே முருகா 
தீவினைகள் போக்கியருள் தெய்வமே முருகா 
திருந்துக்கலை தந்த தேவனே முருகா 
தேசிகா ஞான மறை தேடு பொருள் முருகா
தென்பரங் குன்றிற் சிறந்த வேல் முருகா 
சிறு மிகும் செந்தில் நிறை செல்வனே முருகா 
அன்பர் திரு ஆவினர் குடியில் வாழ் முருகா 
அடியார் புகழ்ந்திடும் ஆண்டவா முருகா 
இன்ப மிகும் ஏற்கத் திறைவனே முருகா 
எண்ணிலா குன்றேறி வாழ் முருகா 
பொன்னன் திருத்தணிகை போழ்ந்தவா முருகா 
புகழ் சேர்க கழுக்குன்றின் புண்ணியா முருகா
சந்தனல் வேள்வி மலை தங்கிடும் முருகா
சாரும் விராலி மலை தன்னில் வாழ் முருகா
அந்தக் கடந்த திரு அருணையின் முருகா
அண்டர் வாழ் திரு மலையின் ஆனந்த முருகா
சந்தனல் ஒங்குவளர் சக்திமலை முருகா
சகமேவு மின்புதரு சித்தர்மலை முருகா
வந்த துன்பம் தீர்க்கும் மயிலையில் முருகா
வடபழனி மேவியே வாழ்கின்ற முருகா
குழகனே சிவகிரி கொற்றவா முருகா
கோதில் குன்றக்குடி குமரனே முருகா
அழகுரும் வேங்கடத் தையனே முருகா
ஆதி கதிர்காமத் தமர்ந்தவா முருகா
பிழையிலா பேரூர் பிறந்திடும் முருகா
பேசும் குழந்தை மலை பேரை நகர் முருகா
அழகனே பல மலைகள் ஆடிடும் முருகா
ஆடு பழமுதிர்ச் சோலை அடைந்தவா முருகா
வானவர் துயர் தீர்க்க வந்தவா முருகா
வையமே உய்ய வழி வகுத்தவா முருகா
தானவர் உறங்கெடத் தானைசேர் முருகா
தலை வீரனை தூது தான் விட்ட முருகா
ஈனர் கர்வம் கண்டெழுந்தவா முருகா
இகல் தாருகனை வேலுக் கிரையாக்கும் முருகா
ஆனைமுக சூரனை அழித்திட்ட முருகா
அடல் சிங்க முகனுடல் அகழ்ந்திட்ட முருகா
சேவலை கொடி கொண்ட சேந்தனே முருகா
சிகிதனை ஊர்த்தியாய் சேர்ந்தவா முருகா
தேவர் கோன் மகனை சிறைமீட்ட முருகா
செயவானக சூடும் வேழ் சேவகா முருகா
மூவரும் புகழ் கூற முறுவல் கொள் முருகா 
முனிவரொடு தேவர் தொழும் முதல்வனே முருகா
ஆவல் மிகும் இந்திரர்க்கரசு தரும் முருகா
அன்பருக்க பயமே அளித்தவா முருகா
தெய்வானையை மணம் செய்தவா முருகா
தெள்ளு நலமெல்லாம் திகழ்ந்தவா முருகா
சைவகக்கொழுந்தே சடாட்சரா முருகா
சகல கலை வல்லமை தந்திடும் முருகா 
மை கொண்ட கண் வள்ளி மையல் கொள் முருகா
மாதினைக் காணவே வனமேகும் முருகா 
கைதனில் வில்லேந்தும் காணவா முருகா
கன்னிக் குறக் கொடியின் கண்ணில் நுழை முருகா
வான்மகிழ் வள்ளியொடு வாதிட்ட முருகா
மங்கை எதிரே வேங்கை மரமாகும் முருகா
கூனிடும் கிழ வேடம் கொண்டவா முருகா
குமரிகை தொட்டு வளை கோர்த்தவா முருகா 
தினை தேன் கொண்ட மாவும் தின்றவா முருகா
சேயிழையின் மோகம் திழைத்தவா முருகா 
ஆனை முகனைத்துணை அடைந்தவா முருகா
ஆறுமுக தரிசனம் அளித்தவா முருகா
வான் மகிழ் வள்ளியை மணம் கொண்ட முருகா
வள்ளி தெய்வானை சமேதனே முருகா
நான் கண்ட தெய்வமே ஞான வேல் முருகா
நம்பினோர்கட் கருள் நல்கிடும் முருகா 
மேனிலை அதற்குமொரு வேலான முருகா
வேதமும் காணாத விஞ்சை என்னும் முருகா 
ஊன் கொண்ட பிறவிகட் குறுதுணை முருகா 
உன் பாதம் அன்றி வேறொன்றில்லை முருகா
சஞ்சலம் தீர்த்திடும் சண்முகா முருகா 
சாருமிகு பரசுகம் தந்திடும் முருகா
அஞ்சலென்றென்னை வந்தாட் கொள்ளும் முருகா
அருளையும் பொருளையும் அளித்திடும் முருகா
தஞ்சமென்றோர்களை தாங்கிடும் முருகா
தாரணி கழிக்க வருள் சாதிக்கும் முருகா 
மஞ்சுபொழி மாநிலம் வாழியே முருகா
மாதவர் தொழும் பாதம் வாழி சீர் முருகா
சங்கத் தலைவனே சரவணா முருகா 
சமரபுரி வேலா புயவேளே முருகா 
சூரபத்மனைத் சமர் புரிந்திட்ட முருகா
சண்முகத் தேவே சங்கத் தமிழனே முருகா
சங்கப் புலவனே சக்தி வேலனே முருகா 
சங்கபாணி மருகோனே சற்குரு நாதா முருகா 
சங்கரற்குக் குருவே சாந்தகுணசீலனே முருகா 
சங்கரன் சேயே சண்முகக் கடவுளே முருகா
சகல லோகர்க்கும் நண்பனே முருகா 
சக்தி மலைச் சாமியே சிவந்த ஆடையனே முருகா 
சித்தர்கள் குருவே சிங்கார வேலனே முருகா 
சித்தத்துள் நிற்பாய் சிவக்கொழுந்தே முருகா 
சூரனை வதைத்தோய் சஷ்டி நாயகனே முருகா!

Monday, November 4, 2024

சஷ்டி நோன்பேற்க்கும் முருகன் 108 போற்றி| Sashti Nonbu erkum Murugan108 Potri Tamil

ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
ஓம் அகத்தியருக்கு அருளிய ஆண்டவா போற்றி
ஓம் அமரரைக் காத்த அன்பா போற்றி
ஓம் அருணகிரி பாடிய அமலா போற்றி
ஓம் அழகர் மலையில் அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகம் கொண்ட ஆதவா போற்றி
ஓம் ஆண்டிக் கோலமே கொண்டாய் போற்றி
ஓம் ஆறுபடை வீடுடைய அரசே போற்றி
ஓம் ஆறெழுத்து மந்திரம் உகந்தாய் போற்றி
ஓம் இடும்பன் காவடி ஏற்றாய் போற்றி
ஓம் இளங்குமர ஏந்தலே எந்தாய் போற்றி
ஓம் உலகை வலம் வந்த உன்னதமே போற்றி
ஓம் உருகும் அடியார் உளம் வாழ்வாய் போற்றி
ஓம் எட்டுக்குடி அழகா எம்பிரான் போற்றி
ஓம் எண் கண் இறைவா ஏகா போற்றி
ஓம் எங்கும் இருப்பாய் துணையாய் போற்றி
ஓம் ஏரகத்து அரசே எம்மான் போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே அறுமுகா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே உத்தமா போற்றி
ஓம் ஔவைக்கு அருளிய பாலகா போற்றி
ஓம் கதிர்காம அருவக் கந்தா போற்றி
ஓம் கந்த கோட்டத்துறை கடவுளே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்ப மார்பா போற்றி
ஓம் கந்தா குமரா கனலா போற்றி
ஓம் களிற்றூர்திப் பெருமானே கடம்பா போற்றி
ஓம் கழுகுமலை வாழ் கந்தா போற்றி
ஓம் கனலில் உதித்த கருணையே போற்றி
ஓம் கார்த்திகைப் பெண்கள் பாலனே போற்றி
ஓம் காவடி ப்ரியனே கதிர்வேலா போற்றி
ஓம் கிரவுஞ்சம் தகர்த்த கீர்த்தியே போற்றி
ஓம் குடந்தைக் குமரா குருபரா போற்றி
ஓம் குமர கூர்வடி வேலா போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவா குகனே போற்றி
ஓம் குன்றக் குடிவாழ் குணாளா போற்றி
ஓம் கயிலை மலை சிறுவா போற்றி
ஓம் குன்றுதோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் கூடற் குமரா கோமான் போற்றி
ஓம் கொடியிற் சேவல் கொண்டாய் போற்றி
ஓம் கொல்லாதருளும் கோவே போற்றி
ஓம் கடம்பணி காளையே போற்றி 
ஓம் கோதில்லா குணத்துக் குன்றே போற்றி
ஓம் கௌமாரத் தலைவா கௌரி மைந்தா போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே நாயகா போற்றி
ஓம் ஞான தண்டாயுதபாணி போற்றி
ஓம் சக்திவேல் பெற்ற ஷண்முகா போற்றி
ஓம் சங்கத் தலைவா சதுரா போற்றி
ஓம் சடாட்சர மந்திரமே சரவணா போற்றி
ஓம் சரவணபவ சக்கரம் உறைவாய் போற்றி
ஓம் சங்கரன் பாலா சற்குணா போற்றி
ஓம் சரவணத் துதித்த சிவமைந்தா போற்றி
ஓம் சஷ்டி நோன்பேற்கும் சதுரா போற்றி
ஓம் சிங்கமுகனை வென்ற சீலா போற்றி
ஓம் சிந்தை நிறையும் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிகி வாகனா உன் சீர்த்தாள் போற்றி
ஓம் சிவகிரிச் செல்வ சிவகுமாரா போற்றி
ஓம் சுப்பிரமணியாய் ஒப்பிலாய் போற்றி
ஓம் சூரனை வென்ற சுப்ரமண்யா போற்றி
ஓம் சென்னிமலைச் செல்வா சிவன்சேயே போற்றி
ஓம் சேவற் கொடியோய் செவ்வேள் போற்றி
ஓம் சேனாதிபதியே செழுஞ்சுடரே போற்றி
ஓம் சைவக் கொழுந்தே சடாட்சரா போற்றி
ஓம் தார காந்தகா தயாபரா போற்றி
ஓம் திருச்செந்தூர் வாழ் தேவா போற்றி
ஓம் திருப்பரங் குன்றம் உறைவாய் போற்றி
ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
ஓம் திருப்போரூர் அருள் தேவா போற்றி
ஓம் திருமாலின் மருகா திருமுருகா போற்றி
ஓம் திருத்தணிகை வாழ் தெய்வமே போற்றி
ஓம் திருவருள் தருவாய் தேவ சேனாபதி போற்றி
ஓம் திருவிடைக்கழி அருள் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே திருவேலா போற்றி
ஓம் தித்திக்கும் வாழ்வருள் திவ்யா போற்றி
ஓம் திவ்ய சொரூப தேவனே போற்றி
ஓம் தேன் தினை மாவேற்கும் திருவே போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவயானை நாயகா போற்றி
ஓம் தேவாதி தேவனே தண்டபாணி போற்றி
ஓம் நக்கீரனைக் காத்த நல்லருள் போற்றி
ஓம் நந்தா விளக்கே நன்மையே போற்றி
ஓம் நவவீரர் நாயகா நல்லோய் போற்றி
ஓம் பராசக்தி பாலகா அறுமுகா போற்றி
ஓம் பழநிமலை பாலா வேலா போற்றி
ஓம் பழமுதிர் சோலை பரனே போற்றி
ஓம் பன்னிருகரமுடை பாலகா போற்றி
ஓம் பாலசுப்ரமண்ய பழமே போற்றி
ஓம் பிரணவம் உறைத்த பெரியோய் போற்றி
ஓம் பிரம்மன் வணங்கும் பாலனே போற்றி
ஓம் பொன்னாய் ஒளிரும் உன் திருவடி போற்றி
ஓம் மயிலேறி வரும் மாணிக்கமே போற்றி
ஓம் மயிலம் மலையிலருள் மரகதமே போற்றி
ஓம் மயூகிரி அமர்ந்த கோவே போற்றி
ஓம் மலைதோறும் அருளும் வள்ளலே போற்றி
ஓம் மலையைப் பிளந்த மால்மருகா போற்றி
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
ஓம் முருகெனும் அழகே முதல்வனே போற்றி
ஓம் மூவினை களைந்திடும் முருகனே போற்றி
ஓம் வடிவேலைப் பெற்ற வடிவழகா போற்றி
ஓம் வள்ளி மணாளா வடிவேலா போற்றி
ஓம் வல்லமை மிக்க வள்ளலேபோற்றி
ஓம் வயலூர் வாழும் வடிவேலா போற்றி
ஓம் விசாகத்துதித்த வேலனே போற்றி
ஓம் விருத்தனாய் வள்ளி முன் நின்றாய் போற்றி
ஓம் வீரபாகு சோதரா வெற்றிவேலா போற்றி
ஓம் வேடனாய் வந்த வேலவா போற்றி
ஓம் அல்லல் போக்கி அருளும் ஆண்டவா போற்றி
ஓம் ஆனந்த வாழ்வு தரும் ஆறுமுகா போற்றி
ஓம் பற்றினேன் உந்தன் திருவடி போற்றி!
ஓம் பதம் தந்து காத்திடுவாய் பன்னிரு கையனே போற்றிப் போற்றி!

Sunday, November 3, 2024

Vel Vanakkam tamil| வேல் வணக்கம் தமிழ்

திருப்பரங்குன்றம்

சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில் மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம் கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்).

முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக் குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு பெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர் ஆறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.

திருஆவினங்குடி

மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும் நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.

பழனி

திண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த அண்ணணார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய வண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.

திரு ஏரகம் (சுவாமிமலை).

சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம் சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப் பொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.

குன்றுதோறாடல் (திருத்தணி).

கொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண, மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக், குன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து வென்றிசேர் சக்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.

பழமுதிர்சோலை

புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில் அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர் பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும் சிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.

கதிர்காமம்

மடமையில் மனந்து வாழ்வாய் வானவர் வணங்கும் தேவாய்க் குடிமுழு தடிமை கொண்டோன் குறைகளைந்(து) ஆளுங் கோவாய்க் கடலுல கனைத்தும் போற்றக் கதிர்காம வெற்பின் மேவும் அடிகளின் கரத்து வேலை அர்ச்சிப்ப தெமக்கு வேலை.

திருப்போரூர்

ஓரூரும் பேரும் இல்லான் உறவோடு பகையும் இல்லான் ஆரூரன் தூதன் ஆனான், அவன்மகன் முருகன் என்பான் போரூரிற் கோவில் கொண்டான் புகல் அடைந்தாரைக் காப்பான் சீரூரும் இவன்கை வேலையே சிந்திப்ப(து) எமக்கு வேலை.

திருத்தணிகை

பண்டாரப் பையன் என்பார், பரிந்(து) அவன் மணந்து கொண்ட பொண்டாட்டி இருவர் என்பார், பேசும் மெய்த் தெய்வம் என்பார் கொண்டாடத்தணிகை வெற்பிற் கோவில் கொண்டுள்ளான் என்பார் தண்டாமல் அவன்கை வேலைத் தரிசிப்ப(து) எமக்கு வேலை.

சென்னிமலை

விருப்பமும் வெறுப்பும் இல்லா விழுமிய முனிவர் தேவர் திருப்பதம் வணங்கி வாழ்த்தச், செருக்களத்(து) அசுரன் நெஞ்சப் பொருப்பினைப் பிளந்து, வஞ்சப் பொறுப்பினைத் துளைத்த சென்னிப் பொருப்பின் கரத்து வேலைப் போற்றுவ(து) எமக்கு வேலை.

குமரகோட்டம்

அப்பனே முருகா நீயே அரன் எனச் சரண் அடைந்தார் தப்பெலாம் குறியா(து) ஈன்றதாயெனப் பரிவு காட்டும் பொய்பிலான், குமரகோட்டப் புனிதன் என்(று) உலகம் போற்றும் ஒப்பிலான் கரத்து வேலை ஓதுவ(து) எமக்கு வேலை. 

சிறுவாபுரி (சேக்கிழார் தாசன் இயற்றியது).

வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும் தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த சிறுவை தன் வாழ்வாம் எங்கள் ஸ்ரீராமன் மருகனாகும் அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.

ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர் செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.

(வேலும் மயிலும் சேவலும் துணை)

Saturday, November 2, 2024

Kandhan 108 Potri | கந்தன் 108 போற்றி

ஓம் கழல் வீரா போற்றி
ஓம் கரிமுகன் துணைவா போற்றி
ஓம் கயிலை மலைச் சிறுவா போற்றி
ஓம் கருணை மேருவே போற்றி
ஓம் கந்த வேலவா போற்றி
ஓம் கடம்பணி காளையே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கருணை வெள்ளமே போற்றி
ஓம் கமலச் சேவடியாய் போற்றி
ஓம் கந்த வேளே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கடம்புத் தொடையாய் போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கடம்பந்தாராய் போற்றி
ஓம் கண்டிக் கதிர் வேலா போற்றி
ஓம் கடம்ப மாலையனே போற்றி
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி
ஓம் கதித்த மலைக்கனியே போற்றி
ஓம் கருணை வடிவே போற்றி
ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கந்தபுரி வேளே போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் ஆனாய் போற்றி
ஓம் கருவாய் இருக்கும் கந்தா போற்றி
ஓம் கந்தக் கடம்பனே போற்றி
ஓம் கவிராசனே போற்றி
ஓம் கலப மயில் விசாகனே போற்றி
ஓம் கனகமலைக் காந்தா போற்றி
ஓம் கற்குடி மலையாய் போற்றி
ஓம் கச்சிப்பதியாய் போற்றி
ஓம் கருவூர் உறை கற்பகமே போற்றி
ஓம் கடம்பூர்க் கனியே போற்றி
ஓம் கரிய வனகர்க் கருணையே போற்றி
ஓம் கடவூர் உறையும் கருத்தே போற்றி
ஓம் கந்தன் குடி களிறே போற்றி
ஓம் கன்னபுரத்துச் சேயே போற்றி
ஓம் கந்தனூர் எந்தையே போற்றி
ஓம் கச்சி மாவடியாய் போற்றி
ஓம் கச்சிக் கச்சாலையாய் போற்றி
ஓம் காலிற் கழலினை உடையோய் போற்றி
ஓம் காங்கேய நல்லூர் முருகா போற்றி
ஓம் கான வள்ளியின் கணவா போற்றி
ஓம் காவலனே போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் காப்பவனே போற்றி
ஓம் கானவர் தலைவா போற்றி
ஓம் காவடிப் பிரியனே போற்றி
ஓம் காம தேனுவே போற்றி
ஓம் கார்த்திகை மாதர் மகனே போற்றி
ஓம் காவளூர்க் கனியே போற்றி
ஓம் காசி கங்கையில் மேவினாய் போற்றி
ஓம் காமாத்தூர் உறை கருணையே போற்றி
ஓம் கிரியோனே போற்றி
ஓம் கிரிதோறும் மகிழ்வாய் போற்றி
ஓம் கிளரொளியே போற்றி
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி
ஓம் கிரௌஞ்ச மலை பிளந்தோய் போற்றி
ஓம் கீரனூர் உறைவாய் போற்றி
ஓம் கீரனுக்கு அருளினாய் போற்றி
ஓம் கீதக் கிண்கிணி பாதா போற்றி
ஓம் கீர்த்தியனே போற்றி
ஓம் குகவேலா போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமாரா போற்றி
ஓம் குருமணியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குருநாதா போற்றி
ஓம் குன்றக்குடி குமரா போற்றி
ஓம் குமரேசா போற்றி
ஓம் குகமூர்த்தியே போற்றி
ஓம் குறத்தி கணவனே போற்றி
ஓம் குன்றங் கொன்றாய் போற்றி
ஓம் குன்றாக் கொற்றத்தாய் போற்றி
ஓம் குறிஞ்சிக் கிழவா போற்றி
ஓம் குன்றம் எறிந்தாய் போற்றி
ஓம் குன்றப் போர் செய்தாய் போற்றி
ஓம் குன்று துளைத்த குகனே போற்றி
ஓம் குன்றுதோறாடு குமரா போற்றி
ஓம் குழகனே போற்றி
ஓம் குமரக் கடவுளே போற்றி
ஓம் குன்றக் கடவுளே போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவனே போற்றி
ஓம் குருநாதக் குழந்தாய் போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குமர குருபரனே போற்றி
ஓம் குமரகுருபரற்கருளினை போற்றி
ஓம் குறத்தி திறத்தோனே போற்றி
ஓம் குமர நாயகனே போற்றி
ஓம் குகேசனே போற்றி
ஓம் குறவர் மருகா போற்றி 
ஓம் குறிஞ்சி நிலத்துக் கோனே போற்றி 
ஓம் குறவர் கோவே போற்றி 
ஓம் குராவடி வேலவனே போற்றி 
ஓம் குன்றக் குறவர் கோமானே போற்றி
ஓம் குளிர் மலைவாழ் குணமே போற்றி 
ஓம் குருபரனாக வந்தாய் போற்றி 
ஓம் குழைந்தோன் குமரா போற்றி
ஓம் குன்று தோறும் நின்றாய் போற்றி
ஓம் குரு சீலத்தோனே போற்றி
ஓம் குஞ்சரி கணவா போற்றி 
ஓம் குன்றுநவ ஏவும் வேளே போற்றி 
ஓம் குருடி மலைக் குமரா போற்றி 
ஓம் குமரக் கோட்டத்துறை கோவே போற்றி 
ஓம் குடசை மாநகர் குகனே போற்றி 
ஓம் குடந்தை உறையும் குழகா போற்றி 
ஓம் குரங்காடு துறை கூத்தா போற்றி
ஓம் கேசவன் மருகா கந்தனே போற்றிப் போற்றி!

Friday, November 1, 2024

குன்று வாழும் முருகன் 108 போற்றி| Murugan 108 Potri

1. ஓம் சென்னிமலை முருகனே போற்றி
2. ஓம் சிவன்மலை முருகனே போற்றி
3. ஓம் வெண்ணைமலை முருகனே போற்றி
4. ஓம் பழனிமலை முருகனே போற்றி
5. ஓம் சுவாமிமலை முருகனே போற்றி
6. ஓம் அழகர்மலை முருகனே போற்றி
7. ஓம் தணிகைமலை முருகனே போற்றி
8. ஓம் மருதமலை முருகனே போற்றி
9. ஓம் கபிலர்மலை முருகனே போற்றி
10. ஓம் கொல்லிமலை முருகனே போற்றி

11. ஓம் வட்டமலை முருகனே போற்றி
12. ஓம் பச்சைமலை முருகனே போற்றி
13. ஓம் விராலிமலை முருகனே போற்றி
14. ஓம் கதித்தமலை முருகனே போற்றி
15. ஓம் தோகைமலை முருகனே போற்றி
16. ஓம் கழுகுமலை முருகனே போற்றி
17. ஓம் மந்திரமலை முருகனே போற்றி
18. ஓம் கஞ்சமலை முருகனே போற்றி
19. ஓம் வள்ளிமலை முருகனே போற்றி
20. ஓம் கனகமலை முருகனே போற்றி

21. ஓம் திண்டல்மலை முருகனே போற்றி
22. ஓம் சோலைமலை முருகனே போற்றி
23. ஓம் செங்கோட்டுமலை முருகனே போற்றி
24. ஓம் குமரமலை முருகனே போற்றி
25. ஓம் சுருளிமலை முருகனே போற்றி
26. ஓம் கொழுந்துமாமலை முருகனே போற்றி
27. ஓம் எல்க்மலை முருகனே போற்றி
28. ஓம் வடசென்னிமலை முருகனே போற்றி
29. ஓம் பத்துமலை முருகனே போற்றி
30. ஓம் ஓதிமலை முருகனே போற்றி

31. ஓம் தோரணமலை முருகனே போற்றி
32. ஓம் தேனிமலை முருகனே போற்றி
33. ஓம் வெள்ளைமலை முருகனே போற்றி
34. ஓம் புகழிமலை முருகனே போற்றி
35. ஓம் முத்துமலை முருகனே போற்றி
36. ஓம் ஊத்துமலை முருகனே போற்றி
37. ஓம் திருமலை முருகனே போற்றி
38. ஓம் தாண்டிக்குடிமலை முருகனே போற்றி
39. ஓம் ஜனனமலை முருகனே போற்றி
40. ஓம் திரிகோணமலை முருகனே போற்றி

41. ஓம் உகந்தமலை முருகனே போற்றி
42. ஓம் தபசுமலை முருகனே போற்றி
43. ஓம் சொர்ணமலை முருகனே போற்றி
44. ஓம் பவளமலை முருகனே போற்றி
45. ஓம் ஏழுமலை முருகனே போற்றி
46. ஓம் தாந்தமலை முருகனே போற்றி
47. எலிகல்மலை முருகனே போற்றி
48. ஓம் அலகுமலை முருகனே போற்றி
49. ஓம் காஞ்சாத்துமலை முருகனே போற்றி
50. ஓம் இடும்பன்மலை முருகனே போற்றி

51. ஓம் வேலாயுதமலை முருகனே போற்றி
52. ஓம் சிவகிரி முருகனே போற்றி
53. ஓம் சிரகிரி முருகனே போற்றி
54. ஓம் ரத்னகிரி முருகனே போற்றி
55. ஓம் குமரகிரி முருகனே போற்றி
56. ஓம் கோத்தகிரி முருகனே போற்றி
57. ஓம் தத்தகிரி முருகனே போற்றி
58. ஓம் வயலூர் முருகனே போற்றி
59. ஓம் திருச்செந்தூர் முருகனே போற்றி
60. ஓம் திருப்பரம்குன்றம் முருகனே போற்றி

61. ஓம் குமரன்குன்றம் முருகனே போற்றி
62. ஓம் குன்றத்தூர் முருகனே போற்றி
63. ஓம் சிக்கல் முருகனே போற்றி
64. ஓம் எட்டுக்குடி முருகனே போற்றி
65. ஓம் குன்னக்குடி முருகனே போற்றி
66. ஓம் மயிலம் முருகனே போற்றி
67. ஓம் கந்தகோட்டம் முருகனே போற்றி
68. ஓம் குமரக்கோட்டம் முருகனே போற்றி
69. ஓம் வேல்கோட்டம் முருகனே போற்றி
70. ஓம் வல்லக்கோட்டை முருகனே போற்றி

71. ஓம் வடபழனி முருகனே போற்றி
72. ஓம் செட்டிகுளம் முருகனே போற்றி
73. ஓம் குமரகோவில் முருகனே போற்றி
74. ஓம் திருமலைக்கேணி முருகனே போற்றி
75. ஓம் திருப்போரூர் முருகனே போற்றி
76. ஓம் திருமயிலை முருகனே போற்றி
77. ஓம் வைத்தீஸ்வர முருகனே போற்றி
78. ஓம் மணக்கால் முருகனே போற்றி
79. ஓம் பூந்துறை முருகனே போற்றி
80. ஓம் குறுக்குத்துறை முருகனே போற்றி

81. ஓம் மேலக்கொடுமலூர் முருகனே போற்றி
82. ஓம் அளவாய்ப்பட்டி முருகனே போற்றி
83. ஓம் மலையப்ப முருகனே போற்றி
84. ஓம் உத்திரமேரூர் முருகனே போற்றி
85. ஓம் சிறுவாபுரி முருகனே போற்றி
86. ஓம் எண்கண் முருகனே போற்றி
87. ஓம் மயிலாடுதுறை முருகனே போற்றி
88. ஓம் கதிர்காம முருகனே போற்றி
89. ஓம் இலஞ்சி முருகனே போற்றி
90. ஓம் நல்லூர் முருகனே போற்றி

91. ஓம் மதுராந்தக முருகனே போற்றி
92. ஓம் தலைகார முருகனே போற்றி
93. ஓம் மாவிட்டபுரம் முருகனே போற்றி
94. ஓம் செய்யூர் முருகனே போற்றி
95. ஓம் குக்கி முருகனே போற்றி
96. ஓம் காங்கேயநல்லூர் முருகனே போற்றி
97. ஓம் செங்கம் முருகனே போற்றி
98. ஓம் திருத்தங்கல் முருகனே போற்றி
99. ஓம் மருங்கூர் முருகனே போற்றி
100. ஓம் ஊதியூர் முருகனே போற்றி

101. ஓம் அனுவாவி முருகனே போற்றி
102. ஓம் பொள்ளாச்சி முருகனே போற்றி
103. ஓம் குமாரசாமிபேட்டை முருகனே போற்றி
104. ஓம் மோகனுர் முருகனே போற்றி
105. ஓம் வில்லுடையான்பட்டு முருகனே போற்றி
106. ஓம் வானகரம் முருகனே போற்றி
107. ஓம் மேருமலை முருகனே போற்றி
108. ஓம் கயிலைமலை முருகனே போற்றி

தன்வந்திரி கவசம் தமிழ் வரிகளுடன்| Dhanvantari Kavasam Tamil Lyrical

துதிப்போர்க்கு நோய் பிணி போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு ஆயுள் ஆரோக்கியம் தழைத்தோங்கும்
நினைத்தது நிறைவேறும் மனம் உருகி தன்வந்திரி பகவானே உன் கவசம் தனை பாடிட பாடிட மனம் கனிந்து ரட்சிப்பாயே
பார் கடல்தனிலே அவதரித்தவனே பார் புகழ் தேற்றும் மருத்துவ தெய்வமே
பிணி தீர்த்திடவே வந்துதித்தவனே பணிந்தேன் தன்வந்திரி பகவானே
அமிர்தகலசம் தனை கரங்களில் தாங்கி ஆயுர் வேதம் இடும் மருத்துவம் கொணர்ந்தே
அபயம் அளித்து எமை காத்திட வருவாய் பணிந்தேன் தன்வந்திரி பகவானே
அச்சம் அகற்றிட அருள் கரம் நீட்டிடு அச்சுதனே கருணை தனை பொழிந்திடு
இச்சகம் வாழ வந்தருள் புரிந்திடு பணிந்தேன் தன்வந்திரி பகவானே
ஒளி பிரகாசமாய் திகழ்திடும் ஜோதியே வோய்வின்றி அருளைப் பொழியும் ஸ்ரீ பதியே
ஓங்கி உலகலந்த வளம் பொழி நிதியே பணிந்தேன் தன்வந்திரி பகவானே
மருத்துவ தேய்வமே வரும் பிணி தீர்ப்பாய் மகத்துவத்தால் பிணி வாராது காப்பாய்
உன் மந்திரம் சொல்லிட வந்தெமக்கு அருள்வாய் தன்வந்திரி பகவானே வருவாய்
வையகம் போற்றும் வைத்திய குருவே கை கூப்பி தொழுதோம் விரைவாய் வருவாய்
உய்ய வழிகாட்டி உயிர் காத்திடுவாய் தன்வந்திரி பகவானே வருவாய்
விஷ கிருமிகளை விரட்டியே துரத்திட விரைவாக வந்து எம்மை காத்திட
வினை தீர்த்துதெங்கள் விதிதனை மாற்றிட தன்வந்திரி பகவானே வருவாய்
ஆதிசேஷனே வருவாய் வருவாய் ஆயூர்வேதனே வருவாய் வருவாய்
ஆயுள் பலம் தர வருவாய் வருவாய் தன்வந்திரி பகவானே வருவாய்
சுந்தர வடிவே சுகம் தரும் திருவே சந்தர சகோதர நானச குருவே
சந்ததி காத்தருள் கற்பகத்தருவே தன்வந்திரி பகவானே எனையாளனே
நித்ய அலங்காரனே நித்ய அபிஷேகனே நித்ய மகோத்சவனே நித்ய அனுக்கிரகனே
நித்யா நந்தனே நித்ய கல்யானனே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
நானிலம் போற்றும் உன் திரு நாமமே நான்காயிரம் திவ்ய பிரபந்தமே
நாலாவிதம் மலரே உன் பாதமே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
ஜெயம் தந்தருளும் ஸ்ரீ ஜெகநாதனே ஜகம் நிறைந்தருளும் ஜெக ஜோதியனே
ஜெகத் காரகனே ஜெகத் ரட்சகனே தன்வந்திரி பகவானே எனை ஆண்டனே
ஆகாய தாமரை ஏறியே வருக அமிர்த கலசம் தாங்கியே வருக
ஆயுத கலையின் நிபுனனே வருக தன்வந்திரி பகவானே வருக
சங்கொடு சக்கரம் தாங்கியே வருக எங்கும் நிறைந்தருள் புரிந்திட வருக
செங்க மலர்தாள் பணிந்தோம் வருக தன்வந்திரி பகவானே வருக
அலங்கார பூஷனனே நினி நிதி வருக ஆரா அமுதனானவனே வருக
ஆகம வேத அழகனே வருக தன்வந்திரி பகவானே வருக
மனம் தரும் கற்பக விருட்சமே வருக வரம் தரும் எங்களை காத்திட வருக
வலம்பற சுகங்களை வழங்கியே காக்க தன்வந்திரி பகவானே காக்க
சிரசினை உந்தன் அருட்கரம் காக்க பிறை நெற்றியினை பேரருள் காக்க
செவிகள் இரண்டும் சதுர் கரம் காக்க தன்வந்திரி பகவானே எனை காக்க
விழிகள் இரண்டும் என் திரு விழி காக்க நாசியில் சுவாசம் புரிந்தெம்மை காக்க
பேசிடும் வாய்தனை புண்ணியன் காக்க தன்வந்திரி பகவானே எனை காக்க
நவிலும் நாவினை நலமொடு காக்க பற்கள் யாவும் பல் பூஷனன் காக்க
தொண்டையை அருட்கரம் கொண்டே காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
பிடரியை முதுகை பார்த்தன் காக்க தோள்கள் இரண்டையும் தூயவன் காக்க
கைகளும் விரல்களும் ஸ்ரீகரன் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க,
தண்டத்தை கருணை கரத்தோன் காக்க நுரையீரலை நாராயணன் காக்க
அன்புடன் இதயத்தை எங்கும் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
நாபி வயிற்றை நினதருள் காக்க இடையை உந்தன் இருகரம் காக்க
மறைக்கும் உறுப்பை மறைந்தே காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
தொடைகள் இரண்டும் அமுதரன் காக்க கால்கள் இரண்டும் கவி வரதன் காக்க
அன்புடன் இதயத்தை எங்கும் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
கபம் சளி பிணி ஏதும் தொற்றாமல் காக்க காய்சல் விஷ நோய் பற்றாமல் காக்க
உயிர் மூச்சாகி என் உயிரினை காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
காக்க காக்க கனிவொடு காக்க நோக்க நோக்க நோய்கள் பொடிபட
தாக்க தாக்க தடைகளை தாக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
பிணிகள் யாவுமே பார்வை படபட பகலவனை கண்ட பனிபோல் விலகிட
பயமும் பீதியும் பதரியே ஓடிட தன்வந்திரி பகவான் எனை காக்க
உன் திரு கவசம் ஓதிட ஓதிட பன்னிய பாவங்கள் யாவும் பொடிபட
என் இரு கரமும் மலரடி தொழுதிட தன்வந்திரி பகவான் எனை காக்க
மனச்சுமை யாவும் மறைந்திட மறைந்திட சந்தோஷம் வந்து சேர்ந்திட சேர்ந்திட
இன்பம் வாழ்வில் இனிதே பெருகிட பெருகிட தன்வந்திரி பகவான் எனை காக்க
மச்சாவதாரன் மகிழ்ந்து எனை காக்க கூர்மவதாரன் குளிர்ந்தெனை காக்க
வாராக அவதாரன் வந்து எனை காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
நரசிம்ம அவதாரன் நலம் கண்டு காக்க வாமன அவதாரன் வலம் தந்து காக்க
பரசுராம அவதாரன் பலம் தந்து காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
ராமா அவதாரன் ரகு குணன் காக்க பலராம அவதாரன் புவனம் காக்க
கிருஷ்ண அவதாரன் குவலயம் காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
கல்கி அவதாரன் கரம் தூக்கி காக்க கலகமும் கலக்கமும் வராமல் காக்க
கலியுகம் செழித்திட கருணையோடு காக்க தன்வந்திரி பகவான் எனை காக்க
மலை நின்றருளும் மாதவா போற்றி அலைகடல் உறையும் கேசவா போற்றி
ஆலினில் துயிலும் தூயவா போற்றி Mதன்வந்திரி பகவானே போற்றி
தூணிலும் நிறைந்த பெருமாளே போற்றி துரும்பிலும் நிறைந்த பெருமாளே போற்றி
யாவும் நிறைந்த பேரருளே போற்றி தன்வந்திரி பகவானே போற்றி
கடலலை நடுவே உதித்தாய் போற்றி இடர் களைந்திடவே வருவாய் போற்றி
உடனிருந்து எங்களை காப்பாய் போற்றி தன்வந்திரி பகவானே போற்றி
சரணம் சரணம் நின் திருவடி சரணம் சரணம் சரணம் மலரடி சரணம்
சரணம் தன்வந்திரி பகவானே சரணம் சரணம் சரணம் சரணாகதியே

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...