Tuesday, October 15, 2024

Sathyanarayanan Ashtakam Tamil | சத்யநாராயணா அஷ்டகம் தமிழ்

ஆதிதேவனே ஸ்ரீதரனே அகில இயக்கத்தின் காரணனே! தேவி ஸ்ரீலக்ஷ்மி நாயகனே வேண்டும் வரமளிக்கும் நாரணனே! எங்கும் நிறைந்த மங்கலமே முக்தியை அளிக்கும் மாதவனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்ய நாராயணனே நமஸ்காரம்!

லோகக்ஷேமமே சிந்தனையாய் என்றும் இருக்கின்ற நாரணனே! கோமாதா இயற்கையுடன் சான்றோரை காக்கும் காவலனே! ஏழை எளியோரை அரவணைத்து ஏற்றம் தருகின்ற எழிலோனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

புண்ணிய கங்கையாள் ஒரு புறமும்! மங்கல லக்ஷ்மி மறுபுறமும்! என்றும் சூழ்ந்துன்னை அழகூட்ட அற்புத கோலம் கொண்டவனே மின்னிடும் திருமுக சுந்தரனே! மோகன உருவே நாரணனே ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

சங்கடம் வந்திடும்போதெல்லாம் நினைத்திட வேண்டிய நாரணனே! பொங்கிடும் உள் மனக் கவலைகளே! பொடித்திடும் புண்ணிய பூரணனே! தங்கிடும் முழுமன அமைதியினைத் தந்திடும் தெய்வமே மோகனனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாரயணனே நமஸ்காரம்!

பக்தியை விரும்பிடும் நாரணனே! பக்தரை விரும்பிடும் நாரணனே! நம்பி வாஞ்சையுடன் தொழுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் வேதியனே! பூதகணங்களதன் ஆண்டவனே! அகிலமே ஆடையாய்க் கொண்டவனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

ப்ராமணர் க்ஷத்ரியர் வைசியரும் பெருமை பெற்றதும் உன்னாலே! அகிலம் பெரிதாக விரிந்ததுவும் உந்தன் லீலைகள் அதனாலே! நீக்கம் இல்லாமல் எங்கணுமே நிறைந்து நிற்கின்ற நாரணனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

பச்சை புல்போல் எளியதுவாம் இச்சகம் அதனைப் படைத்தவனே! பாலனம் செய்வதும் நீதானே! பக்தி பாவத்தை ரசிப்பவனே! சான்றோரை காக்கும் காவலனே கருணை என்பதன் சாகரமே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

தேவர் முனியோர்கள் பணிபவனே!வேண்டும் வரமளிக்கும் நாரணனே! என்றும் சத்திய நெறியோர்கள் தொழுது போற்றிடும் தலைமகனே! பிள்ளைச் செல்வமும் நலங்களுமே அள்ளித் தந்திடும் ஸ்ரீதரனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!

சத்திய நாராயணன் அஷ்டகத்தை! நித்தியம் மூன்று வேளையுமே! பக்தி உணர்வோடு படிப்பாரின் பாவங்கள் யாவும் அழிந்திடுமே!

Narayanar 108 Potri Tamil| நாராயணன் 108 போற்றி தமிழ்

ஓம் ஸ்ரீஹரி போற்றி 
ஓம் நரஹரி போற்றி 
ஓம் முரஹரி போற்றி 
ஓம் அம்புஜாக்ஷா போற்றி 
ஓம் அச்சுதா போற்றி 
ஓம் உச்சிதா போற்றி
ஓம் பஞ்சாயுதா போற்றி 
ஓம் பாண்டவதூதா போற்றி 
ஓம் லக்ஷ்மி ஸமேதா போற்றி 
ஓம் லீலாவிநோதா போற்றி 
ஓம் கமலபாதா போற்றி 
ஓம் ஆதிமத்தியாந்த ரஹிதா போற்றி 
ஓம் அநாத ரட்ஷகா போற்றி 
ஓம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா போற்றி
ஓம் பரமானந்த போற்றி 
ஓம் முகுந்தா போற்றி 
ஓம் வைகுந்தா போற்றி 
ஓம் கோவிந்தா போற்றி 
ஓம் பச்சைவண்ணா போற்றி 
ஓம் கார்வண்ணா போற்றி 
ஓம் பன்னகசயனா போற்றி 
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி 
ஓம் கருடவாஹனா போற்றி 
ஓம் ராக்ஷஸ மர்த்தனா போற்றி 
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி 
ஓம் சேஷசயனா போற்றி 
ஓம் நாராயணா போற்றி 
ஓம் பிரமபாராயணா போற்றி 
ஓம் வாமனா போற்றி 
ஓம் நந்த நந்தனா போற்றி 
ஓம் மதுசூதனா போற்றி 
ஓம் பரிபூரணா போற்றி 
ஓம் சர்வகாரணா போற்றி 
ஓம் வெங்கடரமணா போற்றி 
ஓம் சங்கடஹரணா போற்றி 
ஓம் ஸ்ரீதரா போற்றி 
ஓம் துளசீதரா போற்றி 
ஓம் தமோதரா போற்றி 
ஓம் பீதாம்பரா போற்றி 
ஓம் சீதா மனோஹரா போற்றி 
ஓம் மச்சகச்சவராஹவதாரா போற்றி 
ஓம் பலபத்ரா போற்றி 
ஓம் சங்குசக்ரா போற்றி 
ஓம் பரமேஸ்வரா போற்றி 
ஓம் ஸர்வேஸ்வரா போற்றி 
ஓம் கருணாகரா போற்றி 
ஓம் ராதாமனோஹரா போற்றி 
ஓம் ஸ்ரீரங்கா போற்றி 
ஓம் ஹரிரங்கா போற்றி 
ஓம் பாண்டுரங்கா போற்றி 
ஓம் லோகநாயகா போற்றி 
ஓம் பத்மநாபா போற்றி 
ஓம் திவ்ய சொரூபா போற்றி 
ஓம் புண்யபுருஷா போற்றி 
ஓம் புருஷோத்தமா போற்றி 
ஓம் ஸ்ரீராமா போற்றி 
ஓம் ஹரிராமா போற்றி 
ஓம் பரந்தாமா போற்றி 
ஓம் நரசிம்மா போற்றி 
ஓம் திரிவிக்கிரமா போற்றி 
ஓம் பரசுராமா போற்றி 
ஓம் ஸஹஸ்ரநாமா போற்றி 
ஓம் பக்தவத்சலா போற்றி 
ஓம் பரமதயாளா போற்றி 
ஓம் தேவானுகூலா போற்றி 
ஓம் ஆதிமூலா போற்றி 
ஓம் ஸ்ரீலோலா போற்றி 
ஓம் வேணுகோபாலா போற்றி 
ஓம் மாதவா போற்றி 
ஓம் யாதவா போற்றி 
ஓம் ராகவா போற்றி 
ஓம் கேசவா போற்றி 
ஓம் வாசுதேவா போற்றி 
ஓம் ஆதிதேவா போற்றி 
ஓம் ஆபத்பாந்தவா போற்றி 
ஓம் மஹானுபாவா போற்றி 
ஓம் வசுதேவதநயா போற்றி 
ஓம் தசரததநயா போற்றி 
ஓம் மாயா விலாசா போற்றி 
ஓம் வைகுண்டவாசா போற்றி 
ஓம் சுயம் ப்ரகாசா போற்றி 
ஓம் வெங்கடேசா போற்றி 
ஓம் ஹ்ருஷீகேசா போற்றி 
ஓம் சித்தி விலாசா போற்றி 
ஓம் கஜபதி போற்றி 
ஓம் ரகுபதி போற்றி 
ஓம் சீதாபதி போற்றி 
ஓம் வெங்கடாஜலபதி போற்றி 
ஓம் ஆயா மாயா போற்றி 
ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி 
ஓம் உலகமுண்ட வாயா போற்றி 
ஓம் நானா உபாயா போற்றி 
ஓம் பக்தர்கள் சகாயா போற்றி 
ஓம் சதுர்புஜா போற்றி 
ஓம் கருடத்வஜா போற்றி 
ஓம் கோதண்டஹஸ்தா போற்றி 
ஓம் புண்டரீக வரதா போற்றி 
ஓம் விஷ்ணுவே போற்றி 
ஓம் பராத்பரா போற்றி 
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் ஆதி நாராயணா போற்றி 
ஓம் லக்ஷ்மி நாராயணா போற்றி 
ஓம் பத்ரி நாராயணா போற்றி 
ஓம் ஹரி நாராயணா போற்றி 
ஓம் சத்ய நாராயணா போற்றி 
ஓம் சூர்ய நாராயணா போற்றி 
ஓம் ஸ்ரீமதே நாராயணா போற்றிப் போற்றி 

Friday, October 11, 2024

வேண்டல் 108 தமிழ்| Vendal 108 Tamil

ஓம் அகந்தை அழித்து அருளே
ஓம் அச்சம் நீக்கி அருளே
ஓம் அஞ்சலென அருளே
ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே
ஓம் அடைக்கலம் தந்து அருளே
ஓம் அமருலகு சேர்த்து அருளே
ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே
ஓம் அபயம் அருளே
ஓம் அவா அறுத்து அருளே
ஓம் அழுக்காறு நீக்கி அருளே
ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே
ஓம் அறியாமை அகற்றி அருளே
ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே
ஓம் ஆசு நீக்கி அருளே
ஓம் ஆசைகளை அறுத்து அருளே
ஓம் இடர் களைந்து அருளே
ஓம் இம்மை மறுமை அளித்து அருளே
ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே
ஓம் இன்னருள் சுரந்து அருளே
ஓம் இன்னல் தீர்த்து அருளே
ஓம் இன்பம் தழைக்க அருளே
ஓம் இன்மொழி தந்து அருளே
ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே
ஓம் உயர்வு அளித்து அருளே
ஓம் உலோபம் நீக்கி அருளே
ஓம் உறுபசி அழித்து அருளே
ஓம் உறுபிணி ஒழித்து அருளே
ஓம் ஊக்கம் தந்து அருளே
ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே
ஓம் ஊனம் நீக்கி அருளே
ஓம் எப்பிறப்பும் மறவாமை தந்து அருளே
ஓம் எம பயம் நீக்கி அருளே
ஓம் ஏக்கம் தீர்த்து அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஏழைக்கு இறங்கி அருளே
ஓம் ஏற்றம் அருளே
ஓம் ஐம்புலன் அடக்க அருளே
ஓம் ஐயம் தீர்த்து அருளே
ஓம் என்மலம் அறுத்து அருளே
ஓம் என்னாவி காத்து அருளே
ஓம் என்றும் இன்பம் தழைக்க அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஓவாபிணி ஒழித்து அருளே
ஓம் குரோதம் ஒழித்து அருளே
ஓம் குலம் காத்து அருளே
ஓம் குறளை களைந்து அருளே
ஓம் குறைகள் களைந்து அருளே
ஓம் கேடுகள் களைந்து அருளே
ஓம் கொடுமை அழித்து அருளே
ஓம் கொடையுள்ளம் கொண்டு அருளே
ஓம் சிக்கல் தீர்த்து அருளே
ஓம் சித்தத்தே நடம் ஆடி அருளே
ஓம் சித்தி தந்து அருளே
ஓம் சிந்தை தெளியவைத்து அருளே
ஓம் சிவகதி தந்து அருளே
ஓம் சினத்தை வேறுடன் அறுத்து அருளே
ஓம் சீர் அருளே
ஓம் சூலை தீர்த்து அருளே
ஓம் செருக்கு அழித்து அருளே
ஓம் செல்வம் அருளே
ஓம் சேவடி சிந்தையில் வைக்க அருளே
ஓம் சோர்வு அகற்றி அருளே
ஓம் ஞானம் தந்து அருளே
ஓம் தத்துவ ஞானம் தந்து அருளே
ஓம் தவநெறி சேர்த்து அருளே
ஓம் தளரா மனம் தந்து அருளே
ஓம் தனமும் கல்வியும் தந்து அருளே
ஓம் தன்னையறியும் வழிகாட்டி அருளே
ஓம் தீவினை தீர்த்து அருளே
ஓம் துதிப்போர்க்கு அருளே
ஓம் துயர் எல்லாம் துடைத்து அருளே
ஓம் நலமெலாம் நல்கி அருளே
ஓம் நித்திரை நீக்கி அருளே
ஓம் பகை போக்கி அருளே
ஓம் பணிந்தோர்க்குப் பங்குடன் அருளே
ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்த்து அருளே
ஓம் பந்தபாசம் களைந்து அருளே
ஓம் பரகதி அருளே
ஓம் பழி தீர்த்து அருளே
ஓம் பற்றிலா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பற்றியவினைகள் போக்கி அருளே
ஓம் பாவம் அழித்து அருளே
ஓம் பிணி தீர்த்த்து அருளே
ஓம் பிணியிலா வாழ்வு தந்து அருளே
ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பிறப்பு இறப்பு அறுத்து அருளே
ஓம் மதம் நீக்கி அருளே
ஓம் மதிநலம் தந்து அருளே
ஓம் மயக்கம் தீர்த்து அருளே
ஓம் மறவா நினைவைத் தந்து அருளே
ஓம் மன மருட்சி நீக்கி அருளே
ஓம் மாண்புடைய நெறி தந்து அருளே
ஓம் முத்தி தந்து அருளே
ஓம் மும்மலம் அழித்து அருளே
ஓம் மேன்மை தந்து அருளே
ஓம் மோனத்தே ஒளி காட்டி அருளே
ஓம் வஞ்சம் நீக்கி அருளே
ஓம் வரங்கள் தந்து அருளே
ஓம் வல்வினை தீர்த்து அருளே
ஓம் வளமெலாம் தந்து அருளே
ஓம் வறுமை ஒழித்து அருளே
ஓம் வார்வினை தீர்த்து அருளே
ஓம் விடாமுயற்சி தந்து அருளே
ஓம் விரும்பியன எல்லாம் தந்து அருளே
ஓம் வெம்பவம் நீக்கி அருளே
ஓம் வெம்மைகள் நீக்கி அருளே
ஓம் வெகுளி அறுத்து அருளே
ஓம் வெற்றி தந்து அருளே!

Tuesday, October 8, 2024

காத்தாயி அஷ்டகம் தமிழ் | Kathayee Ashtagam Tamil

கரம் குவித்துக் காத்தாயி கும்பிட்டேன்
பரம் எனக்கு வேறில்லை நீயே
வரம்மிக அருளி வாழ்த்து வாயம்மா
சிரம் தாழ்த்திச் சேவித்தேன் சித்தாடியம்மா

ஆவன செய்திட அமர்ந்தாய் சித்தாடி
போவென செய்திடு புண்ணியம் அற்றவை
பாவனம் ஆக்கிடு பார்வதியுடன் அமர்ந்தாய்
ஜீவனைக் காத்திடு சேவித்தேன் சித்தாடியம்மா

எங்கும் உள்ளவளே எப்போதும் உள்ளவளே
பொங்கும் ஆனந்தம் பொழிந்திடு புவனேஸ்வரி
வங்கும் நோயும் வாராதவரம் அருளம்மா
சிங்கமேருமம்மா சேவித்தேன் சித்தாடியம்மா

எந்த நோயும் எதிர்படும் ஆபிசமும்
வந்தெனை வளைத்திடா வரமருள் வாலையே
பந்தாடும் மந்திரம் பட்டிடாமல் பார்த்தருளம்மா
சிந்தனை உன்பால் சேவித்தேன் சித்தாடியம்மா

எதிரிகள் எனக்கிலாது எடுத்திடு என்னம்மா
சதி எனக்கெதிர் செய்வோரை சாடிடம்மா
விதியால் வந்திடும் வினைதமை விலக்கிடம்மா
கதிநீயே கழலடி காட்டியருள் காத்தாயியம்மா

அனைத்துயிரு மெனக்கடங்கிட அருள்செயம்மா
மனையில் மக்களின் மங்கலமோங்க அருளம்மா
நினையே நாடினேன் நினதடி கதியென
உனையே உரைப்பேன் உகந்தருள் காத்தாயி

ஆகாதவை யானறியேன் ஆகாதவை எனக்கு
ஆகாதென அப்புறப் படுத்திநீ அருள்ம்மா
ஆகாசம் பூமி அனைத்துயிர் நீயே எனும்
ஏகாந்த நிலையருள் என்னம்மா காத்தாயி

எப்பிசகு செய்தாலும் என்னம்மா நீஇரங்கி
அப்பிசகு மன்னித்து அருள் புரிந்திடம்மா
ஒப்பிலா மணியே ஒதினேன் உனதடிமை
கப்பிய பிறவி கடையாக்கியருள் காத்தாயி

எட்டையும் ஒதிட எட்டியோடுமாம் வினை
தொட்ட ஞானம் தொடர்ந்து தழைக்கும்
அட்டமா சித்திகள் அனைத்து மடைந்து
கட்டவும் கைகூடும் காத்தாயி கருணையால்

Monday, October 7, 2024

அகிலாண்டேஸ்வரியே 108 போற்றி| Akilandeshwari 108 Potri Tamil

ஓம் அன்னையே அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் அன்னத்தைப் பழிக்கும் நடையுடைய ஹம்ஸத்வனியே போற்றி
ஓம் அறிவிலா மூடன் எனக் கனுகி ரகிப்பாய் போற்றி
ஓம் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதியே போற்றி
ஓம் அபயமளிக்கும் அபயாம்பிகையே போற்றி
ஓம் அழகுக் கடலான அங்கயற்கண்ணி போற்றி
ஓம் அழகிய ஸ்தன பாரங்களையுடைய அம்பிகே போற்றி
ஓம் அக்கினியாய் அருள் செய்யும் ஆவுடையே போற்றி
ஓம் ஆதி சக்தியானவளே ஆதரிப்பாய் போற்றி
ஓம் ஆதியந்த மற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆழமான பார்வையையுடைய அபிராமி போற்றி
ஓம் இன்பங்களெல்லாம் தந்தருள்வாய் ஈஸ்வரியே போற்றி
ஓம் இருளைப் போக்கி ஒளியைத் தரும் ஜோதியே போற்றி
ஓம் இரத்த பீஜனை சம்கரித்த பத்ரகாளி போற்றி
ஓம் இரவை ஏற்படுத்தும் சௌகந்திகா போற்றி
ஓம் ஈசனின் இடப்பக்கம் அமர்ந்தவளே போற்றி
ஓம் உம்பர்களுக்கு உவப்பளித்த உலகமாதா போற்றி
ஓம் ஊசிமேல் தவமிருந்த உலகநாயகியே போற்றி
ஓம் ஊனிலும் உயிரிலும் கலந்த உமையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே ஏகாட்சரி போற்றி
ஓம் என் இதயமே கோவிலாய் கொள்ளுவாய் போற்றி
ஓம் எல்லையற்ற குணநிதியே! ஏகாம்பரி போற்றி
ஓம் என்றும் பதினாறாய் விளங்கும் ஏலங்குழலி போற்றி
ஓம் ஏது செய்வேன் ஆதரிக்கும் நாயகியே போற்றி
ஓம் ஏழேழு பிறவியிலும் எனைக் காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரனைப் பெற்ற அன்ன பூரணியே போற்றி
ஓம் ஐசுவரியத்தை அள்ளித்தரும் சோமசுந்தரியே போற்றி
ஓம் ஒன்றே பலவான ஓங்காரி போற்றி
ஓம் என்னும் எழுத்திலே உறைந்தவளே போற்றி
ஓம் ஔடதமாய் அங்கிருந்து ஆதரிப்பாய் போற்றி
ஓம் கயிலையில் வாழும் கற்பகமே போற்றி
ஓம் கரும்பு வில்லைக் கையில்கொண்ட கல்யாணி போற்றி
ஓம் கங்கா நதிக்கரை வாழும் விசாலாட்சி போற்றி
ஓம் காமேச்வரன் மகிழும் காமேச்வரி போற்றி
ஓம் காமத்தை ஜெயித்தக் காமாட்சி போற்றி
ஓம் கிளியைக் கையில் கொண்ட கின்னரரூபி போற்றி
ஓம் குதர்க்கமில்லா மனம்தருவாய் கோலவிழி போற்றி
ஓம் குவலயத்தை ரட்சிக்கும் கோமதி போற்றி
ஓம் குங்குமப்பூ நிறத்தாளே குமரியே போற்றி
ஓம் குகனைப் பெற்ற உமாதேவி போற்றி
ஓம் கேசவனின் தங்கையான ராஜ ராஜேஸ்வரி போற்றி
ஓம் கேட்டவர்க்கு வரமளிக்கும் காந்திமதியே போற்றி
ஓம் கோடி சூர்யப்ரகாச வதனி போற்றி
ஓம் சண்டமுண்டனை சம்கரித்த சாமுண்டி போற்றி
ஓம் சப்த,ஸ்பரிச,ரூப,ரஸ,கந்தங்களைப் பாணங்களாய் தரித்தவளே போற்றி
ஓம் சத்துருக்களை ஒடுக்கும் சாரதையே போற்றி
ஓம் சங்கரன் பாதம் பணியம் சமயாம்பா போற்றி
ஓம் சபேசனோடு நடமிடும் சிவகாமி போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி போற்றி
ஓம் சிந்தித்ததை அளிக்கவல்ல சிந்தாமணியே போற்றி
ஓம் சிரித்துப் புரமெரித்த சிவப்பிரியே போற்றி
ஓம் சிவனையே சோதித்த சாம்பவி போற்றி
ஓம் சீர்காழியில் உறையும் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் கம்ப நிசும்பரை வதைத்த துர்க்காதேவி போற்றி
ஓம் சூதறியா பாலகன் நான் துணையிருப்பாய் போற்றி
ஓம் சூரிய சந்திரர்களை தாடங்கமாய் அணிந்த அகிலாண்டேஸ்வரி போற்றி
ஓம் செல்வமே வடிவான சௌந்தரி போற்றி
ஓம் சொக்கருக்கு மாலையிட்ட மீனாம்பிகே போற்றி
ஓம் சௌபாக்கியத்தைத் தரும் சௌதாமினி போற்றி
ஓம் சௌந்தர்யத்தின் பிறப்பிடமாம் சியாமளையே போற்றி
ஓம் ஞான சம்பந்தருக்கு அருளிய சிவசங்கரி போற்றி
ஓம் ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகே போற்றி
ஓம் தட்சனுக்காக வாதிட்ட தாட்சாயிணி போற்றி
ஓம் தனங்களை அள்ளித்தரும் தயாமித்ரையே போற்றி
ஓம் திக்விஜயம் செய்த தடாதகை தேவியே போற்றி
ஓம் தில்லையில் தாண்டவமிடும் சபேசினி போற்றி
ஓம் தீராவினை தீர்க்கும் தியாகேஸ்வரி போற்றி
ஓம் துஷ்டர்களுக்கு அச்சத்தை தருபவளே போற்றி
ஓம் தூய என் நெஞ்சிலே துணையிருப்பாய் போற்றி
ஓம் தேன்போன்ற குரலுடைய தர்மாம்பிகா போற்றி
ஓம் தேவாதி தேவர்களின் ஸேவிதையே போற்றி
ஓம் தேடிவந்து ரட்சிக்கும் கிருபாகரி போற்றி
ஓம் தை வெள்ளியிலே ஊஞ்சலிலே ஆடிடுவாய் போற்றி
ஓம் தொண்டர்களின் உள்ளமெல்லாம் குடியிருப்பாய் போற்றி
ஓம் தோகையே! தூயமணி மரகதமே போற்றி
ஓம் நவநிதிகளின் இருப்பிடமான நவாட்சரி போற்றி
ஓம் நாடெல்லாம் நயந்து அன்பு காட்டும் நிமலையே போற்றி
ஓம் நாத வடிவானவளே நிரஞ்சனியே போற்றி
ஓம் நிரந்தரமாய் ஆனந்தத்தைத்தரும் நிர்குணமே போற்றி
ஓம் பண்டாசுரனை வதைத்த பாலாம்பிகே போற்றி
ஓம் பர்வத ராஜன் மகளான பார்வதியே போற்றி
ஓம் பகலை உண்டாக்கிய பஞ்சாட்சரி போற்றி
ஓம் பதினாறு பேறுகளையும் அளிக்கவல்ல பதிவிரதே போற்றி
ஓம் பாபம் தொலைப்பவளே பராத்பரி போற்றி
ஓம் பிறப்பறுக்க வந்த புவனேஸ்வரி போற்றி
ஓம் பிணி தீர்க்கும் நாயகி பரமேஸ்வரி போற்றி
ஓம் பிரளய காலத்திலும் பிரகாசிக்கும் பைரவி போற்றி
ஓம் பீஜாட்சரத்தில் உறையும் பத்ராயை போற்றி
ஓம் பூதப்ரேத பைசாசங்களிடமிருந்து காப்பாற்றும் வாராஹி போற்றி
ஓம் பை நாகங்களை ஆபரணமாய் அணிந்தவளே போற்றி
ஓம் மஹிஷாசுரனை வதைத்த மர்த்தனியே போற்றி
ஓம் மலையாள தேசம் வாழும் மஹேஸ்வரி போற்றி
ஓம் மலையத்துவஜன் யாகத்தில் தோன்றிய அங்கயற்கண்ணி போற்றி
ஓம் மதுரமான சிரிப்பை உடைய மதுரகாளி போற்றி
ஓம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத மதனசுந்தரி போற்றி
ஓம் மலைவாழையை தோற்கடிக்கும் துடையையுடைய மகாராக்ஞி போற்றி
ஓம் மங்களத்தைக் கொடுக்கும் மங்களாம்பிகா போற்றி
ஓம் மன்மதனை ஆளும் மகா மாயா போற்றி
ஓம் மதங்க முனிவரின் தவப்பலனாகப் பிறந்த மாதங்கி போற்றி
ஓம் மந்தகாச முகமுடைய மலர் வதனி போற்றி
ஓம் மாரியாய் அருள் புரியும் கருமாரி போற்றி
ஓம் மின்னல் கொடி போன்ற மனோன்மணியே போற்றி
ஓம் மீனைப் போன்ற கண் படைத்த மீனாட்சி போற்றி
ஓம் மூன்று குணங்களை உடைய மூகாம்பிகை போற்றி
ஓம் மேகம் போன்ற கூந்தலை உடைய மதுமதியே போற்றி
ஓம் மோகத்தை வெல்ல வைக்கும் மாயாதேவி போற்றி
ஓம் ஜலமயமான அம்ருதேஸ்வரி போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரத்தில் வாழும் ஸ்ரீ லலிதாம்பா போற்றி

நாராயணா கவசம் தமிழ்| Narayana Kavasam Tamil

தன்னுடைய தாமரைப் பாதங்கள் கருடன் மேல் நிலைத்திருக்க, சங்கு, சக்கரம், கேடயம், வாள், கதை, அம்புகள், வில் மற்றும் பாசான் (பாசக் கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களில் ஏந்தியவராகவும், எட்டு சக்திகள் முழுமையாகப் பொருந்தியவராகவும், விளங்கும் அந்த பகவான் ஹரி எனக்கு அருள் புரிவாராக, சகல விதங்களிலும் அவர் என்னைக் காக்கட்டும்.

நீர் வாழ் உயிரினங்களிடம் இருந்தும், வருணனின் பாசக் கயிற்றில் இருந்தும், மத்ஸ்ய மூர்த்தி என்னைக் காக்கட்டும்.

நிலத்தில், குள்ள வடிவமெடுத்த வாமனர் என்னைக் காக்கட்டும். வானில், விஸ்வரூப வடிவமெடுத்த திரிவிக்கிரமர் என்னைக் காக்கட்டும்.

பயணிக்க கடினமான இடங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் போர் முனை போன்ற இடங்களில், அசுர பத்தினிகளின் கர்ப்பம் கலையும் படியாகவும், சகல திசைகளிலும் எதிரொலிக்கும் படியாகவும், மகா அட்டகாசமாக சிரித்த, அசுரத் தலைவனின் (ஹிரண்யகசிபுவின்) எதிரியான பகவான் நரசிம்மர் என்னைக் காக்கட்டும்.

வீதிகளில், தன்னுடைய சொந்த தந்தங்களால் பூமியை நீரிலிருந்து உயர்த்திய யக்ஞ கல்பராகிய பகவான் வராஹர் என்னை காக்கட்டும். மலைச் சிகரங்களில், பரசுராமர் என்னைக் காக்கட்டும். அன்னிய தேசங்களில், பரதனின் மூத்த சகோதரரான பகவான் ராமர், அவருடைய சகோதரர் லஷ்மணனுடன் என்னைக் காக்கட்டும்.

உக்ர-தர்மத்தாலும் மதிமயக்கத்தாலும் நான் செய்த அனைத்து தவறுகளில் இருந்தும், பகவான் நாராயணர் என்னைக் காக்கட்டும். தற்பெருமையில் இருந்து, நரர் என்னைக் காக்கட்டும். யோகப் பாதையில் இருந்து நான் தவறி விடாமல், யோக நாதராகிய தத்தாத்ரேயர் என்னைக் காக்கட்டும். கர்ம பந்தத்தில் இருந்து, குண ஈசராகிய கபிலர் என்னைக் காக்கட்டும்.

காம தேவனிடம் இருந்து, சனத் குமாரர் என்னைக் காக்கட்டும். தெய்வ குற்றங்களில் இருந்து, ஹயக்ரீவர் என்னைக் காக்கட்டும். புருஷ அர்ச்சனக் குற்றங்களில் இருந்து, தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும்.

எல்லையற்ற நரகங்களில் வீழ்வதில் இருந்து, கூர்ம பகவான் என்னைக் காக்கட்டும்.

பத்தியமற்ற உணவு வகைகளால் உண்டாகும் துன்பங்களில் இருந்து, பகவான் தன்வந்தரி என்னைக் காக்கட்டும். இருமைகளினால் உண்டாகும் பயத்தில் இருந்து, முற்றிலும் ஜிதாத்மாவான ரிஷபதேவர் என்னை விடுவிக்கட்டும். ஜனங்களால் உருவாக்கப்படும் இகழ்ச்சி மற்றும் உலக துயரங்களில் இருந்து, பகவான் யக்ஞர் என்னைக் காப்பாற்றட்டும். குரோதம் மிகுந்த பாம்புகளிடம் இருந்து, பகவான் பலராமர் சேஷனாக என்னைக் காப்பாற்றட்டும்.

சாஸ்திர அறியாமையில் இருந்து, பகவான் துவைபாயன வியாசர் என்னைக் காக்கட்டும். பாஷண்டிகளால் உருவாக்கப்படும் புத்தி மயக்கத்தில் இருந்து, புத்த பகவான் என்னைக் காக்கட்டும். கலியுக களங்கங்களில் இருந்து, தர்மத்தை நிலை நிறுத்த வரும் கலியுக அவதாரமான கல்கி பகவான் என்னைக் காக்கட்டும்.

நாளின் முதல் பகுதியான அதிகாலையில், பகவான் கேசவன் தன்னுடைய கதையால் என்னைக் காக்கட்டும்.

நாளின் இரண்டாம் பகுதியில், வேணு காணம் இசைக்கும் பகவான் கோவிந்தன் என்னைக் காக்கட்டும்.

நாளின் மூன்றாம் பகுதியில், சகல சக்திகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகவான் நாராயணன் என்னைக் காக்கட்டும். நாளின் நான்காம் பகுதியான மத்தியானத்தில், பகைவர்களை வெல்ல சக்ராயுத பாணியாக விளங்கும் பகவான் விஷ்ணு என்னைக் காக்கட்டும்.

நாளின் ஐந்தாம் பகுதியில், உக்கிரமான சாரங்க வில்லை ஏந்தி இருக்கும் பகவான் மதுசூதனன் என்னைக் காக்கட்டும். நாளின் ஆறாம் பகுதியான சாயந்தரத்தில், பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரானகத் தோன்றும் பகவான் மாதவன் என்னைக் காக்கட்டும்.

இரவின் முதல் பகுதியில், பகவான் ஹிருஷிகேசர் என்னைக் காக்கட்டும். இரவின் இரண்டாம் பகுதியான அர்த்த- ராத்திரியிலும் இரவின் மூன்றாம் பகுதியான நசீதத்திலும், பத்மநாபர் மட்டும் என்னைக் காக்கட்டும்.

இரவின் நான்காம் பகுதியான அபர ராத்திரியில், ஸ்ரீவத்சத்தை தன் மார்பில் தாங்கிய அந்த ஈசன் என்னைக் காக்கட்டும்.

இரவின் ஐந்தாம் பகுதியான ப்ரதியூசாவில், வாளை கையில் ஏந்திய ஜனார்தனன் என்னைக் காக்கட்டும்.

இரவின் ஆறாம் பகுதியான அதிகாலையில், தாமோதரன் என்னைக் காக்கட்டும்.

சந்தியா நேரங்களில், கால மூர்த்தியான விஸ்வேஸ்வர பகவான் என்னைக் காக்கட்டும்.

காற்றின் சகாவான அக்கினி எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்து அழிகின்றதோ, அது போல, பகவானால் இயக்கப்படும் கூர்மையான விளிம்புகளைக் கொண்ட பகவானின் சுதர்சன சக்கரம், யுக முடிவில் உண்டாகும் ஊழிக் கால நெருப்பு போல, எல்லா திசைகளிலும் பரவி எதிரிகளின் சைன்யத்தை உடனே எரித்து அழிக்கட்டும். எரித்து அழிக்கட்டும்.

பட்டாலே இடி போல் தீப்பொறி பறக்க வைப்பதும், வெற்றி கொள்ள முடியாதவரான பகவானுக்கு பிரியமானதும் ஆகிய கதாயுதம், எதிரிகளான குஸ்மான்ட, வைனகாயக, யக்ஷ, ராக்ஷ, பூத, மற்றும் கிரகங்கள் ஆகியவற்றின் தீய சக்திகளை கண்டந் துண்டமாக வெட்டிப் போடு. அவர்களை எல்லாம் தூள் தூளாக்கி விடு.

பகவான் கிருஷ்ணரின் சுவாசக் காற்றினால் முற்றிலும் நிரப்பப்பட்டு, அவர் கைகளில் திகழும் பாஞ்சஜன்யமே, மிகப் பயங்கரமான ஓசையை நீ எழுப்பி, எதிரிகளான ராக்ஷஸர்கள், பிரமதர்கள், பிரேதங்கள், மாத்ருக்கள், பிசாசுகள், கோர திருஷ்டி கொண்ட பிரம்ம ராக்ஷசர்கள் ஆகியவர்களின் இதயங்களை நடுங்கச் செய்து அவர்களை விரட்டி அடிப்பாயாக.

பகவானால் பயன்படுத்தப்படும் கூரிய விளிம்புகளை உடைய வாளே, நீ என்னுடைய எதிரிகளின் சைன்யத்தை கண்டந்துண்டங்களாக வெட்டு, கண்டந்துண்டங்களாக வெட்டு.

ஓ நிலவை ஒத்த நூற்றுக் கணக்கான வளையங்களைக் கொண்டிருக்கும் கேடயமே. தயவு செய்து பொறாமை கொண்ட எதிரிகளின் பார்வையை மறைத்து விடு; பாபகரமான அவர்களின் பார்வையை எடுத்து விடு.

தீயகிரகங்கள் மற்றும் எரிநட்சத்திரங்கள் இவற்றின் தாக்கத்தில் இருந்தும், பொறாமை கொண்ட மனிதர்களிடம் இருந்தும், கொடிய விஷம் கொண்ட பாம்பு, தேள் போன்றவைகளிடம் இருந்தும், கொடூரமான பற்களைக் கொண்ட சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்தும், பூதகனங்கள் மற்றும் பஞ்ச பூதங்களிடம் இருந்தும், பாவச் செயல்களில் இருந்தும், பகவானின் நாம, ரூப அனுகீர்த்தனமே எங்களைப் பாதுகாத்து எங்களுடைய நல்வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ள இவை அனைத்தையும் உடனடியாக முற்றிலும் அழிந்து போகச் செய்.

ஸ்தோத்திரங்களால் துதிக்கப்படுபவரும், வேதம் உருவெடுத்தவருமான, கருட பகவானும், தன்னுடைய சுய நாம மகிமையால் விஷ்வக்ஷேனரும், எல்லையற்ற ஆபத்துக்களில் இருந்து எங்களைக் காக்கட்டும்.

பகவான் ஹரியின் அந்தரங்க சகாக்களாக இருந்து கொண்டு அவரை அலங்கரிக்கும் அவருடைய நாமம், ரூபம், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் இவை அனைத்தும் எங்களுடைய புத்தி, இந்திரியங்கள், மனம் மற்றும் பிராணன் ஆகியவைகளை சர்வ ஆபத்துக்களில் இருந்தும் காக்கட்டும்.

தோன்றிய மற்றும் தோன்றாத அனைத்திற்கும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் மூல காரணமாக பகவான் இருப்பதால், அவற்றிலிருந்து வேறுபடாத அந்த பகவான் அவற்றால் உருவாக்கப்படும் சர்வ உபத்திரவங்களையும் நாசம் செய்து அழிக்கட்டும்.

பகவானே பலவித வெளிப்பாடுகளாக தோன்றியிருப்பதை உணர்பவர்கள், பகவானுக்கும் அவருடைய சுய மாயையின் சக்திகளான அவருடைய அலங்காரங்கள், ஆயுதங்கள், அவரைக் குறிக்கும் அடையாளங்களான நாம, ரூப, குணங்கள் அனைத்திற்கும் இடையில் வேறுபாடு ஏதும் காண்பதில்லை. ஆதலால் எங்கும் ஊடுருவி இருக்கும் சர்வக்ஞ பகவான் ஹரி அவருடைய அனைத்து சுய ரூபங்களாலும் எங்களை எப்போதும், எங்கும் காக்கட்டும்.

எல்லா மூலைகளிலும், எல்லா திசைகளிலும், மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும், உள்ளும், புறமும் தன்னுடைய கர்ஜிப்பால், தன்னுடைய சுய தேஜஸால், மற்ற எல்லா தேஜஸ்களையும் ஒடுக்கி லோக பயத்தை முற்றிலும் நீக்கும் பகவான் நரசிம்மர் எங்களைக் காக்கட்டும்.

காத்யாயனி 108 போற்றி தமிழ்| Kathyayani 108 Potri Tamil

ஓம் அகரத்தில் அமர்ந்திடும் அம்மா போற்றி
ஓம் அவன் அவள் அதுவும் ஆனோய் போற்றி
ஓம் அந்தணனுக்கு அன்னம் அளித்தோய் போற்றி
ஓம் ஆவணம் சித்தாடி அமர்ந்தோய் போற்றி
ஓம் ஆடி வெள்ளியில் ஆடிவரும் வல்லியே போற்றி
ஓம் ஆற்றைக் கடக்க ஆளாய் வந்தோய் போற்றி
ஓம் இதயத்தி லிருந்து இசைப்போய் போற்றி
ஓம் இகத்திலும் இன்பம் இடுவோய் போற்றி
ஓம் இன்னல்கள் அழித்திடும் எந்தாய் போற்றி
ஓம் ஈடிலா இரக்கம் ஈந்திடுத் தாயே போற்றி

ஓம் ஈரிரு சமயங்களின் ஈவே போற்றி
ஓம் உகரத்தின் உள்ளொளி ஆனோய் போற்றி
ஓம் உளமதில் உறையும் உருவே போற்றி
ஓம் உடுக்கின் ஒலியில் ஊதியமே போற்றி
ஓம் ஊமை எழுத்தில் ஊதியமே போற்றி
ஓம் ஊசலாடும் உளமதை ஊக்குவிப்போய் போற்றி
ஓம் எழுத்தின் வடிவில் எழுவோய் போற்றி
ஓம் எழுநிலை தந்திடும் எந்தாய் போற்றி
ஓம் ஏரிய பரண்மீது இருப்போய் போற்றி
ஓம் ஏவல் சூன்யம் எடுப்போய் போற்றி

ஓம் ஐய்யன் மானின் ஐயை போற்றி
ஓம் ஐந்திழுத்தும் நீயே ஆனோய் போற்றி
ஓம் ஒன்பது முனிகள் ஒன்றாய்த் துதிக்கிறார் போற்றி
ஓம் ஒன்றிய மனதில் உறைவோய் போற்றி
ஓம் ஒட்யாண பீடத்தில் உயர்வோய் போற்றி
ஓம் ஓங்காரத்தின் உள் இருப்போய் போற்றி
ஓம் ஓங்கியே உயரும் ஓங்காரியே போற்றி
ஓம் ஔவும் ஒவ்விட ஆனோய் போற்றி
ஓம் க எனும் எழுத்தின் கனியே போற்றி
ஓம் கன்னித் தெய்வக் கருணைக் கடலே போற்றி

ஓம் காவல் காக்கும் காத்தாயி அம்மா போற்றி
ஓம் கால் சிலம்பு கலீரென வருவோய் போற்றி
ஓம் கிடக்கும் தவமது கிட்டிட அருள்வோய் போற்றி
ஓம் கீழ்முகம் காண மேல்முகம் காட்டுவாய் போற்றி
ஓம் குங்கும அர்ச்சனை கொள்வோய் போற்றி
ஓம் குண்டலினி கூட்டும் குல தேவியே போற்றி
ஓம் குறுநகை புரிந்து குலத்தைக் காப்போய் போற்றி
ஓம் கூட்டும் ஐம்புலன் கூட்டுந் தாயே போற்றி
ஓம் கெட்டதகற்றி கேட்ட தருளுந் தாயே போற்றி
ஓம் கேள்வியில் ஞானம் கிளைத்திட அருள்வோய் போற்றி

ஓம் கைவல்யம் தந்திடுங் கருணைத் தாயே போற்றி
ஓம் கொடும் மாயையைக் குலைப்போய் போற்றி
ஓம் கோவிலாம் மனதில் குடி இருப்போய் போற்றி
ஓம் சண்டியுங் காளியும் சகலமும் ஆனோய் போற்றி
ஓம் சாமவேத சாரமாய்ச் சார்ந்தோய் போற்றி
ஓம் சித்தாடி காத்தாயி எனச் சிறந்தோய் போற்றி
ஓம் சிறுமி உருவில் சித்தத்தில் சேர்வோய் போற்றி
ஓம் சிலம்பொலி கேட்க செவி தந்தோய் போற்றி
ஓம் சீலமுள்ளவர் சீவனைக் காப்போய் போற்றி
ஓம் கழுமுனை காட்டிச் சுகந் தருவோய் போற்றி

ஓம் சூரிய சந்திர சூக்கும நாடிகள் ஆனோய் போற்றி
ஓம் செபமாலை தந்திடும் செல்வ மணியே போற்றி
ஓம் சேவகம் செய்வோர் செழிக்கச் செய்வோய் போற்றி
ஓம் சைவம் சேர்க்கச் செய்வினை அழிப்போய் போற்றி
ஓம் சொர்ணத் தகட்டில் சோபிக்குந் தாயே போற்றி
ஓம் சோதனை உற்றவர் வேதனைக் களைவோய் போற்றி
ஓம் தனை மறந்தவர்க்கு உந்தனைக் காட்டுந்தாயே போற்றி
ஓம் தானே எங்குமாய் தழைத்தோய் போற்றி
ஓம் தினை காத்தத் திரு மூவெழுத்தே போற்றி
ஓம் தீவினை அகற்றுந் தீஞ்சுடரே போற்றி


ஓம் துடியாய் வந்திடும் அடியார் துணையே போற்றி
ஓம் தூவெளி காட்டுந் தூய தாயே போற்றி
ஓம் தெளிந்திட மனதைத் தேற்றுந் தாயே போற்றி
ஓம் தேடுவோரிடம் தேடியே வருவோய் போற்றி
ஓம் தை வெள்ளியில் துள்ளி வரும் வல்லியே போற்றி
ஓம் தொலைவிலும் மன அலைவு அறிவோய் போற்றி
ஓம் தோரணங் கட்டித் தொழுவோர் துணையே போற்றி
ஓம் நயன ஒளியில் நலந் தரும் நங்காய் போற்றி
ஓம் நாசி யோத்தில் நான் என்ப தழிப் போய் போற்றி
ஓம் நீதியாம் உன் ஸந்நிதி நிழலளிப்போய் போற்றி

ஓம் நீயுண்டு நானுண்டு எனும் நீதி ஆனோய் போற்றி
ஓம் நுணுக்க மறியும் நுண்ணறிவே போற்றி
ஓம் நூறாய் ஒன்றாய் நுன் அணுவானோய் போற்றி
ஓம் நெடிலாய்க் குறிலாய் நின்றோய் போற்றி
ஓம் நேர்ந்திடும் ஆயுதமும் ஆனோய் போற்றி
ஓம் நைந்த மனதில் நர்த்தன மிடுவோய் போற்றி
ஓம் நொடியி லிருவினை நொறுக்குந் தாயே போற்றி
ஓம் நோன்பில் கடைக்கண் நோக்களிப்போய் போற்றி
ஓம் பரண் மீதேறி பறவைகளை ஓட்டினோய் போற்றி
ஓம் பணங் காத்துன் குணங் காட்டினோய் போற்றி

ஓம் பணிந்தவர் தலையில் பாதம் பதிப்போய் போற்றி
ஓம் பாதம் பதித்துப் பரம பதமே அருள்வோய் போற்றி
ஓம் பிறப்பிறப்பு அழிக்கும் பிறை மதியே போற்றி
ஓம் பீடமாம் மேருவில் பீடுடைய அம்மா போற்றி
ஓம் புலனடைக்கப் புத்துயிர் அளிக்கும் புனிதையே போற்றி
ஓம் பூசையி லோங்கார ஓசையு மாவோய் போற்றி
ஓம் பெண்ணாய் ஆணாய் பலவாய் நின்றோய் போற்றி
ஓம் பேசா அநுபூதி பேணிடத் தருவோய் போற்றி
ஓம் பைந்தமிழ் முருகன் பக்கலில் வரக் கண்டோய் போற்றி
ஓம் பொய்யான வாழ்வை மெய்யாக்கும் அன்னையே போற்றி

ஓம் போற்றும் அடியார் துயர் ஆற்றும் அம்மா போற்றி
ஓம் மகரத்தில் மலர்ந்த மான் விழி மங்கையே போற்றி
ஓம் மாறிடா மனதில் மாரியம்மை ஆவோய் போற்றி
ஓம் மின்னி ஒளி காட்டி மிளிரும் மகுடத் தாயே போற்றி
ஓம் மீளா அன்புக்கு ஆளாக்கும் அன்னையே போற்றி
ஓம் மும்மலங் கழிக்க முன் வந்தருள்வோய் போற்றி
ஓம் மூலமும் நடுவும் முடிவு மானோய் போற்றி
ஓம் மெய் ஞானந் தந்திடும் மீன் விழி அம்மா போற்றி
ஓம் மேலே ஆயிரத்தெட்டில் மேவிடுங் காத்தாயி போற்றி
ஓம் மை வழி வரும் வினை கைவழி கழிக்கும் காத்தாயி போற்றி

ஓம் மொழி வழி துதிக்க குழிவழி அகற்றும் காத்தாயி போற்றி
ஓம் மோனம் தந்து வானத்தில் வைக்கும் காத்தாயி போற்றி
ஓம் வீரனோடு லாடன் விளங்கிட வைத்த காத்தாயி போற்றி
ஓம் அரனொடு ஐங்கரனை அழைத்து வைத்த காத்தாயி போற்றி
ஓம் பக்கத்திப் பச்சைவாழி பார்த்து மகிழும் காத்தாயி போற்றி
ஓம் பக்திக் கிரங்கி பர பயம் அகற்றும் காத்தாயி போற்றி
ஓம் சக்தியாய் நின்று சகலமும் தானாகிய காத்தாயி போற்றி
ஓம் முக்தி தந்து முடித் தருளுந் தாயாம் காத்தாயி போற்றி

Sunday, October 6, 2024

ஸ்ரீ புவனேஸ்வரி மாலை | Shri Bhuvaneshwari Malai

மந்திர ஒலியே மங்கள இசையே மன்மத பாணியளே
சந்திர சேகரி ஷண்முகன் தாயே சங்கரி செளந்தரியே :
இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே :
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

பந்தணை விரலி பர்வத தேவி பவபய ஹாரிணியே
சுந்தர ஈசன் சுருதியும் நீயே சுக சுப ரூபிணியே
சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன் சித்தியின் ஒருவடிவே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

சத்திய வடிவே சற்குண உருவே சதுர்மறை சந்நிதியே
நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நிலைத்திட வருபவளே
வைத்திய மணியே வறுமைகள் போக்க வையகம் வாழ்பவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வழிபடுவோர்க்கு வரம் தரும் தாயே வந்தருள் வேணியளே
பழிபடு துயரம் பகைதரும் தீமை பகைகளைப் புதைத்தவளே
விழிகளின் அருளால் வினைகளை விரட்ட விளக்கொளி யானவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

அறுபத்து நான்கு கலைகளும் ஆனாய் அன்னையும் நீயானாய்
கருவிடு அரக்கர் கண் பகைகடிந்த கனிமொழி நீ யானாய்
குறுகலர் தம்மை குறுந்தடிப் பாய்ச்சும் குணமணி நீ யானாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வல்லவள் நீத வஞ்சியும் நீ தான் வசந்தமும் நீயே தான்
நல்லவள் நீதான் நன்னிதி நீதான் நற்சுனை நீயே தான்
சொல்பவள் நீ தான் சொர்ணமும் நீ தான் சொர்க்கமும் நீயேதான்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

நாற்பத்தி மூன்று கோணத்தின் நடுவில் நான்மறை நீ நவின்றாய்
நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய் நோய்களை நீ தீர்ப்பாய்
கார்மழை ஆனாய் காவலும் ஆனாய் காத்திட நீ வந்தாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே ஜெய ஜெய ஸ்ரீங்காரீ
ஜெய ஜெய மாயா மங்கள ரூபி ஜெய ஜெய ஹ்ரீங்காரி
ஜெய ஜெய துர்க்கா சண்டிகை காளி ஜெய ஜெய க்லிங்காரீ
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

தீன தயாபரீ பூர்ண கடாக்ஷி காஞ்சி காமாக்ஷி நமோ நமோ
மாதங்க கன்யா மதர மீனாக்ஷி பாண்டியராஜ புத்ரீ
சுந்தர ஹிருதயே சோம சேகரி ஜனனீ மனோன்மணி
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே


Saturday, October 5, 2024

Sri Kaliamman Kavacham Tamil ஸ்ரீ காளியம்மன் கவசம் தமிழ்

காப்பு
மங்களத்தைப் பெருக்கிடவே மலரேறி வந்தவளின்
செங்கமலச் சேவடியைச் சேர்
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிகொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிவிதியும் ஓடிவிடும் பலவலிமை கூடிவரும்
மதிமலர்ந்த வாக்குவரும் மங்களமே மிக்குவரும்

கவச நூல்
அருள்வீச அம்பிகையே அன்பர்மன இன்னமுதே
இருள் நீக்கு இளவெயிலே இனியசுவை வானமுதே
பொருள்கூட்டு பொன்மணியே பொங்குவரு கங்கையளே
மருள்போக்கு மங்கையளே மங்கையளே காளியம்மா 1

வாழ்வருளும் தேவியளே வானவர்க்கும் தாயவளே
கூழ்விரும்பும் கூளியுடன் கூடிவரும் கூர்மதியே
பாழ்படுத்தும் வைப்பொழித்துப் பாடிவரும் பார்மகளே
வீழ்த்தவரு ஏவலதை: வீசிமிதி வீரியளே .2.

என்மனதில் பீடமிட்டு என்னாளும் நின்றிடவே
பொன்னிமயம் விட்டு இன்று பொலிவோடு வந்தவளே
இன்முகத்து எம்மணியே இனியுன்னை விட்டுவிட்டு
பொன்தேடப் போவதிலும் பொருளுண்டோ காளியம்மா 3

காரமிகும் மிளகாயும் காய்ந்த உப்பும் சேர்ந்தபொதி
கால்வழியில் ஒளிந்திருக்க காணாமல் மிதித்துவிட்டேன்
வீரமிகும் காளியம்மா வீதிவழி காத்திடவே
பூரமெனும் ஓரையிலே பூரணையே வந்திடுவாய் 4

இடையூறு போவதற்கே இன்முகத்துக் காளியம்மா
எழுஎட்டுத் திதிவந்து எங்களையே காத்திடுவாய்
கடைபோட்ட மந்திரத்தார் கன்மனத்து ஓதலினால்
உடைபட்டுப் போகாமல் எம்கதியைக் காத்திடுவாய் 5

பதினெட்டுக் கரமுடைய பகவதியே பகவதியே
நிதிசொட்டத் தாமரையில் நிற்கின்ற நித்தியளே
பதிகாக்கச் சிவயநம பலநாளும் செபிப்பவளே
சதிரிட்ட சங்கரியே சண்முகனின் தாயாரே 6

தாயுடனே மக்களையும் தாரமுடன் கணவனையும்
நேயமுடன் ஒன்றாக்கி நேர்வழியில் செல்பவளே
காயாகி கனியாகிக் கானகத்தே நின்றவளே
மாயாவ தாரியென மாநிலத்தில் வந்தவளே 7

வந்திருக்கும் உன்னடியில் வளமான பூவுமிட்டு
சந்தனமும் பூசிடுவேன் சந்தமொடு பாடிடுவேன்
சொந்தமென நீயிருக்க சொக்கிவரும் மூவுலகம்
பந்தமிட்ட தீயொலிகள் பயந்தெங்கோ ஓடிவிடும் 8

ஓடிவிடும் ஓடிவிடும் ஓதிவைத்த மாயமதும்
பாடிவரும் இக்கவசம் பார்முழுதும் காத்திருக்கும்
சூடிவரும் கவசமிதால் சுந்தரியே சொக்கியேன
நாடிநிதம் ஏத்திடுவேன் நாகினியே நாரணியே 9

நாரணனார் முன்னவளே நானேயாய் நின்றவளே
காரணத்தைக் கேளாமல் காத்திடவே வந்தவளே
மாரணமாம் மந்திரத்தால் மாயமிடும் சாம்பல‌தை
வாரணையாய் கைநீட்டி வையத்தில் சிரிப்பவளே 10

சிரிப்பவருக்கு எரிதீயாய்ச் சினத்தோடு நிற்பவளே
கரிக்கின்ற பேர்களுக்கு கடுகுவெடி முகத்தாளே
தரிக்கின்ற இதயமலர் தங்குகின்ற குணத்தாளே
நரிநகத்துக் குடமாயம் நசியவென நகைப்பவளே 11

நகையாகிப் பாம்பணிந்து நடுவானில் நிற்பவளே
பகைகாண விழிசுற்றிப் பலஉலகம் பார்ப்பவளே
புகைவண்ண மேனியளே புண்ணியமாம் ஞானியளே
தொகைகாண தனமளித்துத் தொழுமுன்னே காப்பவளே 12

காப்பவளும் நீயேதான் கார்த்திகையில் பரணியளே
மாப்பண்டப் படையலுக்கு மாநிதியம் தருபவளே
காப்பணிந்த மஞ்சளொடு காண்பதற்கு வருபவளே
நாப்பணிந்து ஏத்துதற்கு நான்மறையே தந்தவளே 13

கிலிங்கார வித்தெடுத்துக் கிழக்குவயல் விதைத்தவர்க்கு
நலிநீக்கி நல்விளைவை நன்மொழியே தந்திடுவாய்
சௌபாக்ய பீஜத்தில் சௌந்தரத்து நாயகியே
ஸௌஎழுக என எழுப்பும் சௌரியளே சூலியளே 14

துர்க்கையென நிற்பவளே துந்துபியில் மகிழ்பவளே
துயரத்தைத் துடைப்பவளே துணைமகளே ஸ்ரீங்காரி
அர்ச்சனையில் அகமகிழும் அரியவளே ஐம்தேவி
பர்வதத்துப் பனிமகளே பயமோட்டும் கீலீங்காரி 15

கால்வலியும் தலைவலியும் காலத்தின் நோய்வலியும்
மார்வலியும் மாபிணியும் மாயாத தரித்திரமும்
பால்காட்டிப் பாம்புவிடும் பாவையதின் கூத்தடிப்பும்
சேல்விழியே நீவந்தால் சீக்கிரத்தில் ஓடிவிடும் 16

எமைநோக்கித் தீங்கிழைக்க எய்தஒலி கால்நடுங்க
தமைவிட்ட தரித்திரத்தான் தனிவில்லை ஒடித்துவிடும்
உமையென்றும் மறவாத உத்தமர்க்கு மங்களத்தை
உள்ளபடி வட்டியிட்டு உயர்வாக்கி நீ தருவாய் 17

நீ தருவாய் செல்வாக்கு நீள்நிதியம் ஆயுளதை
நீ தருவாய் பெரும்வெற்றி நீங்காத நல்திலகம்
நீ தருவாய் மனவுறுதி நீலிஎழு மந்திரமும்
நீ தருவாய் மஞ்சளுமே நீள்சூலக் காளியம்மா 18

காளியம்மன் கவசத்தைக் காலையில் சொல்லிவரின்
காலபயம் ஏதுமில்லைக் காவலென நின்றிடுவாள்
தூளியெனும் நீறெடுத்து தூபத்தில் அகலுமிட்டு
தூதாக கவசமிட்டால் தூரத்துப் பகையோடும் 19

அட்டமியாம் மாலையில் அவளுக்குப் பூமுடித்து
கட்டத்தைச் சொல்லிவிடின் கருணைக்குப் பஞ்சமில்லை
நட்டவிதை விளைவாக நல்லபதி னொன்றினிலே
தட்டின்றிப் பாடிவரின் தயவுக்கும் பஞ்சமில்லை 20

மங்களத்து வாரமதில் மங்கையர்கள் ஒளியேற்றி
மங்களையைப் பாடிவரின் மங்கல்யம் கூடிவிடும்
செங்கயலின் பூவெடுத்து சென்மஓரை நாளதினில்
நங்கையளின் அடிபணிய நன்மைவரும் தன்மைவரும் 21

பூரணையாம் நாளதனில் பூத்திருக்கும் மல்லியினைக்
காரணிக்குப் போட்டுவரின் காலமெலாம் மணமாகும்
சூரமிகு சூரியனே சூளுரைக்கும் சூலியளே
சாரதையே சாமியளே சாம்பலணி சாம்பவியே 22

மூலமுறை ராசியினில் மூவேளை பாடியிதை
மூலமாம் மந்திரமே முன்பின்னும் ஜெபித்துவரின்
காலத்தால் பஞ்சமது காத்திருந்து சேராது
கோலமாம் குதிரையிலே கோலோச்சி வருபவளே 23

தரிசனத்துத் தேவியளே தருமநிதி தருபவளே
பரிக்கிழத்தி வசியவசி பார்முழுதும் வசியவசி
கரிசேறும் கனகையளே கண்ணான கண்மணியே
கரிகைமண நெற்றியளே கனதனமே தருமகளே 24

காளியம்மா காளியம்மா காணவரும் காளியம்மா
காளியம்மா காளியம்மா காலமெல்லாம் காருமம்மா
காளியம்மா காளியம்மா காளியம்மா வாருமம்மா
காளியம்மா எம்தாயே காளியம்மா காளியம்மா 25

பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிசொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிகிட்டும் வலிகிட்டும் பதிவிதியும் விலகிவிடும்
மதிகிட்டும் மணத்துடனே மங்களமே கூடிவரும் 26

மங்களத்துக் காளியளே மன்னவளே என்நிதியே
மங்களத்துக் காளியளே மணமலரே என்புகழே
மங்களத்துக் காளியளே மங்கலியக் குங்குமமே
மங்களத்துக் காளியளே மதுரமது காளியளே 27

திரௌபதி அம்மன் 108 போற்றி| Draupadi Amman 108 Potri in Tamil

1. ஒம் அகிலாண்ட நாயகியே போற்றி
2. ஒம் அக்னிக் கொழுந்தே போற்றி
3. ஒம் அஜாதசத்ரு நாயகியே போற்றி
4. ஒம் அஸ்வமேத யாகம் கண்டவளே போற்றி
5. ஒம் அஞ்ஞான வாசம் செய்தவளே போற்றி
6. ஒம் அக்ஷய பாத்திரம் அடைந்தவளே போற்றி
7. ஒம் அந்தரத்தில் அலகே போற்றி
8. ஒம் அம்பாலிகைக் குலச் சுடரே போற்றி
9. ஒம் அம்பிகையே போற்றி
10. ஒம் அரவான் அன்னையே போற்றி
11. ஒம் அருந்தவ நாயகியே போற்றி
12. ஒம் அலகின் அழகே போற்றி
13. ஒம் அலகு பானையில் அற்புதமே போற்றி
14. ஒம் அற்புத வடிவழகே போற்றி
15. ஒம் அன்னை வடிவானவளே போற்றி
16. ஒம் ஆரா அமுதே போற்றி
17. ஒம் ஆழியில் அமர்ந்தவளே போற்றி
18. ஒம் ஆழியில் ஆடும் கரகமேபோற்றி
19. ஒம் இச்சா சக்தியே போற்றி
20. ஒம் இந்திராபதி அரசியே போற்றி
21. ஒம் இளவஞ்சிக்கொடியே போற்றி
22. ஒம் ஈடில்லா நாயகியே போற்றி
23. ஒம் உலக நாயகியே போற்றி
24. ஒம் ஊழ்வினை களைபவளே போற்றி
25. ஒம் எங்கள் குல தெய்வமே போற்றி
26. ஒம் எத்திராஜன் சோதரியே போற்றி
27. ஒம் ஐவர்க்கரசியே போற்றி
28. ஒம் ஒளிரும் மணி விளக்கே போற்றி
29. ஒம் ஓதாது உணர்ந்தவளே போற்றி
30. ஒம் கங்கா தேவியே போற்றி
31. ஒம் கங்கா புத்திரன் போற்றுபவளே போற்றி
32. ஒம் கதாயுதன் நாயகியே போற்றி
33. ஒம் கமலமுக திருவடிவே போற்றி
34. ஒம் கல்யாணியே போற்றி
35. ஒம் காடுறையும் கண்மணியே போற்றி
36. ஒம் காண்டீபன் நாயகியே போற்றி
37. ஒம் காம்யாவன வாசியே போற்றி
38. ஒம் காவியக் கண்மணியே போற்றி
39. ஒம் கிரியாசக்தியே போற்றி
40. ஒம் கிருஷ்னணயே போற்றி
41. ஒம் கீசகனை வதைத்தவளே போற்றி
42. ஒம் குந்தியின் குலவிளக்கே போற்றி
43. ஒம் குமார மக்களைக் காப்பவளே போற்றி
44. ஒம் குருஷேத்திரம் கண்டவளே போற்றி
45. ஒம் குற்றம் பொறுப்பவளே போற்றி
46. ஒம் கூந்தல் முடிந்தவளே போற்றி
47. ஒம் கோலப்பசுங்கிளியே போற்றி
48. ஒம் சஹாதேவன் நாயகியே போற்றி
49. ஒம் சக்தி ஆயுதன் நாயகியே போற்றி
50. ஒம் சக்தி ஸ்வரூபினியே போற்றி
51. ஒம் சங்குல யுத்தம் கண்டவளே போற்றி
52. ஒம் ஷத்திரிய குல மாதே போற்றி
53. ஒம் சத்தியவதியே போற்றி
54. ஒம் சத்திய விரதன் நாயகியே போற்றி
55. ஒம் சபதம் முடித்தவளே போற்றி
56. ஒம் சல்லியவதன் நாயகியே போற்றி
57. ஒம் சாட்டையடி தருபவளே போற்றி
58. ஒம் சிந்தையில் உறைபவளே போற்றி
59. ஒம் ஷ்யாமளவண்ணன் நாயகியே போற்றி
60. ஒம் சௌந்தர்ய வல்லியே போற்றி
61. ஒம் ஞானப் பூங்கோதையே போற்றி
62. ஒம் ஞானாம்பிகையே போற்றி
63. ஒம் தர்மராஜன் நாயகியே போற்றி
64. ஒம் தழலில் குளிப்பவளே போற்றி
65. ஒம் தனு வென்றான் நாயகியே போற்றி
66. ஒம் திரிபுவனச் செல்வியே போற்றி
67. ஒம் தினகரன் சுடர் வடிவே போற்றி
68. ஒம் தீயினில் பாய்பவளே போற்றி
69. ஒம் துருபதன் மகளே போற்றி
70. ஒம் தேவேந்திரன் மகன் நாயகியே போற்றி
71. ஒம் நவமணியே போற்றி
72. ஒம் நான்கெழுத்து நாயகியே போற்றி
73. ஒம் நிருபதி மகளே போற்றி
74. ஒம் நெருப்பு பிழம்பினளே போற்றி
75. ஒம் படுகளம் காண்பவளே போற்றி
76. ஒம் பட்டத்தரசியே போற்றி
77. ஒம் பாரத வம்ச விளக்கே போற்றி
78. ஒம் பல்குணன் பத்தினியே போற்றி
79. ஒம் பாசுபதம் பெற்றான் நாயகியே போற்றி
80. ஒம் பாஞ்சாலித் தாயே போற்றி
81. ஒம் பாண்டு மைந்தரை மணந்தவளே போற்றி
82. ஒம் பாரதப் போர் கண்டவளே போற்றி
83. ஒம் பார்த்தனின் நாயகியே போற்றி
84. ஒம் பால் அபிஷேகியே போற்றி
85. ஒம் ப்ருதையின் மகளே போற்றி
86. ஒம் பிள்ளைக்கனி தருபவளே போற்றி
87. ஒம் புரந்தரியே போற்றி
88. ஒம் பொன் அரங்கமே போற்றி
89. ஒம் போஜராஜன் தொழுபவளே போற்றி
90. ஒம் மங்கள நாயகியே போற்றி
91. ஒம் மஞ்சள் நீராடுபவளே போற்றி
92. ஒம் மரகதவல்லியே போற்றி
93. ஒம் மரவுரி அணிந்தவளே போற்றி
94. ஒம் மாசிலாமணியே போற்றி
95. ஒம் மாணிக்கவல்லியே போற்றி
96. ஒம் மாதரி புத்திரன் மனையாளே போற்றி
97. ஒம் மாயோன் தங்கையே போற்றி
98. ஒம் முகுந்தன் சோதரியே போற்றி
99. ஒம் முரசகேது நாயகியே போற்றி
100. ஒம் ராஜசூயம் கண்டவளே போற்றி
101. ஒம் வனவாசம் புரிந்தவளே போற்றி
102. ஒம் வாயு மைந்தனின் நாயகியே போற்றி
103. ஒம் விஜயன் நாயகியே போற்றி
104. ஒம் வியாச காவிய நாயகியே போற்றி
105. ஒம் விருகோதரன் விறலியே போற்றி
106. ஒம் வினைகள் களைபவளே போற்றி
107. ஒம் ராஜலக்ஷ்மியே போற்றி போற்றி
108. ஒம் அருள்மிகு திரௌபதியம்மன் சமேத தர்மராஜவே போற்றி

Thursday, October 3, 2024

பச்சைவாழி அம்மன் 108 போற்றி தமிழ்| Pachai vazhi Amman 108 potri tamil


1. ஓம் அன்னையே போற்றி!
2. ஓம் அகிலமெல்லாம் ஆள்பவளே போற்றி!
3. ஓம் அன்புருவானவளே போற்றி!
4. ஓம் அருந்தவக்கோலம் கொண்டாய் போற்றி!
5. ஓம் அரக்கர்களை வென்றவளே போற்றி!
6. ஓம் ஆதிபராசக்தியே போற்றி!
7. ஓம் ஆட்கொண்டு அருள்பவளே போற்றி!
8. ஓம் அண்டசரா சரங்களின் மூலமே போற்றி!
9. ஓம் அறுபத்துநான்கு கோடி யோகினிகள் புடைசூழ பூலோகம் வந்தாய் போற்றி!
10. ஓம் அருளோடு பொருள் தந்து காப்பவளே போற்றி!
11. ஓம் அஷ்டமா சித்திகள் அளிப்பவளே போற்றி!
12. ஓம் ஆரோக்கிய வாழ்வு அளிப்பவளே போற்றி!
13. ஓம் இகபர சுகமெல்லாம் தருபவளே போற்றி!
14. ஓம் இன்ப வாழ்வின் அடித்தளமே போற்றி!
15. ஓம் ஈசனின் இடபாகம் கொண்டாய் போற்றி!
16. ஓம் ஈடில்லா பெருமை உடையாய் போற்றி!
17. ஓம் உயிர்களின் இயக்கம் ஆனாய் போற்றி!
18. ஓம் உலக நாயகியே போற்றி!
19. ஓம் உண்மை பரம்பொருளே போற்றி!
20. ஓம் உயிரில் உறைபவளே போற்றி!
21. ஓம் உமை அம்மையே போற்றி!
22. ஓம் ஊண் உடம்பை வளர்ப்பவளே போற்றி!
23. ஓம் ஊரெல்லாம் கோயில் கொண்டவளே போற்றி!
24. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
25. ஓம் எங்கும் எதிலும் நிலைத்திருப்பவளே போற்றி!
26. ஓம் எப்போதும் என்னுள்ளே இருப்பவளே போற்றி!
27. ஓம் என்குல தெய்வமே போற்றி!
28. ஓம் ஏழுமுனிகளை காவலராய் கொண்டாய் போற்றி!
29. ஓம் ஏற்றமிகு வாழ்வை அளிப்பவளே போற்றி!
30. ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி!
31. ஓம் ஐம்பூதங்களை ஆள்பவளே போற்றி!
32. ஓம் ஐயந்தீர்த்து அருள்பவளே போற்றி!
33. ஓம் ஒற்றுமையாய் வாழவைக்கும் தேவி போற்றி!
34. ஓம் ஓங்கார நாயகியே போற்றி!
35. ஓம் ஒளடதம் ஆனாய் போற்றி!
36. ஓம் அஃதே அனைத்தும் ஆனவளே போற்றி!
37. ஓம் கருணைக்கடலே கற்பகமே போற்றி!
38. ஓம் கடைக்கண் பார்வையால் காப்பவளே போற்றி!
39. ஓம் கணபதி முருகன் அன்னையே போற்றி!
40. ஓம் கன்னியர்க்கும் காளையர்க்கும் விரைந்து மணம் முடிப்பவளே போற்றி!
41. ஓம் கலியை நீக்கும் கனலே போற்றி!
42. ஓம் காரண காரியம் கடந்தாய் போற்றி!
43. ஓம் குணங்கள் அற்றவளே போற்றி! 
44. ஓம் குபேரவாழ்வு அளிப்பவளே போற்றி!
45. ஓம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவளே போற்றி!
46. ஓம் கோல விழியாளே போற்றி!
47. ஓம் கோடி சுகம் தருபவளே போற்றி!
48. ஓம் சத்தியமானவளே போற்றி!
49. ஓம் சதாசிவனின் சரிபாதி போற்றி!
50. ஓம் சத்தியத்தை உணர்த்துவாய் போற்றி!
51. ஓம் சந்திரமண்டலத்தின் நடுவில் இருப்பவளே போற்றி!
52. ஓம் சக்திபீடங்களில் குடிகொண்டாய் போற்றி!
53. ஓம் சாத்திரங்கள் சரித்திரங்கள் படைத்தாய் போற்றி!     
54. ஓம் சிறப்பான சித்திகள் அருள்பவளே போற்றி!
55. ஓம் சிந்தாமணி மண்டபத்தில் கொலுவிருப்பவளே போற்றி!
56. ஓம் சிவனுடன் இணைந்த சக்தியே போற்றி!
57. ஓம் சினம் தவிர்க்க செய்பவளே போற்றி!
58. ஓம் சீரும் சிறப்புமாய் வாழச்செய்பவளே போற்றி!
59. ஓம் சுற்றம் சூழ வந்துன்னை வணங்கச் செய்பவளே போற்றி!
60. ஓம் சுகானந்த வாழ்வை அளிப்பவளே போற்றி!
61. ஓம் ஞாலம் செய்த மாயவளே போற்றி!
62. ஓம் ஞான வடிவானவளே போற்றி!
63. ஓம் வேற்றுமை அற்றவளே போற்றி!
64. ஓம் வேண்டும் வரம் தருபவளே போற்றி!
65. ஓம் வினைதீர்க்கும் வித்தகியே போற்றி!
66. ஓம் தந்திர மந்திர யந்திரமானாய் போற்றி!
67. ஓம் தவங்கள் செய்த தயாபரியே போற்றி!
68. ஓம் தாமரைமலர் பாதத்தாளே போற்றி!
69. ஓம் திக்கெட்டும் புகழப்படுபவளே போற்றி!
70. ஓம் திக்கற்றவர்க்கும் துணையாய் வருபவளே போற்றி!
71. ஓம் பக்திக்கு வித்தானவளே போற்றி!
72. ஓம் பச்சைவாழிப் பந்தல் அமைத்தாய் போற்றி!
73. ஓம் பாங்குடனே அதில் தவம் புரிந்தாய் போற்றி!
74. ஓம் பசுமையாய் எங்கும் படர்ந்தாய் போற்றி!
75. ஓம் பலப்பல வேடம் பூண்டவளே போற்றி!
76. ஓம் பல்லுயிர் காக்க வந்தாய் போற்றி!
77. ஓம் பணிவுடனே உனை வணங்க செய்பவளே போற்றி!
78. ஓம் பற்றறுக்கும் பராசக்தி தாயே போற்றி!
79. ஓம் பார்த்தசாரதியின் தங்கையே போற்றி!
80. ஓம் பாரெங்கும் பவனி வருபவளே போற்றி!
81. ஓம் பாவம் போக்கும் பவானி போற்றி!
82. ஓம் பாசாங்குச அபயவரத கரத்தாளே போற்றி!
83. ஓம் பாசமுள்ள என் தாயே போற்றி!
84. ஓம் பிணியேதும் அண்டாமல் காப்பவளே போற்றி!
85. ஓம் பிரவா முக்தி அளிப்பவளே போற்றி!
86. ஓம் பெருவெளியாய் இருப்பவளே போற்றி!
87. ஓம் பேரின்ப பெரு வெள்ளமே போற்றி!
88. ஓம் நற்கதி நல்கும் நாயகியே போற்றி!
89. ஓம் நாதவடிவான நல் இசையே போற்றி!
90. ஓம் நாமவழிபாட்டில் மகிழ்பவளே போற்றி!
91. ஓம் நாற்கரங்கள் கொண்ட புவனேஸ்வரி போற்றி!
92. ஓம் நிமலயே நின் நாமம் போற்றி!
93. ஓம் நித்யம் நின் திருப்பாத துகள்கள் போற்றி!
94. ஓம் நீண்ட ஆயுள் தருபவளே போற்றி!
95. ஓம் மங்களமானவளே போற்றி!
96. ஓம் மன்னாதீஸ்வரன் பத்தினி போற்றி!
97. ஓம் மங்கல வாழ்வளிப்பாய் போற்றி!
98. ஓம் மங்கையர்க்கு அரசியே போற்றி!
99. ஓம் மழலைச் செல்வம் அருள்பவளே போற்றி!
100. ஓம் மனதில் அமைதி தருபவளே போற்றி!
101. ஓம் மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவளே போற்றி!
102. ஓம் மூலவராலும் தேவராலும் துதிக்கப்படுபவளே போற்றி!
103. ஓம் மும்மலம் அகற்றுவாய் போற்றி!
104. ஓம் முப்பெருந் தேவியரில் முதல்வி போற்றி!
105. ஓம் யோகிகளால் உணரப்படுபவளே போற்றி! 
106. ஓம் ஸ்ரீ புரத்தை இருப்பிடமாய் கொண்டாய் போற்றி!
107. ஓம் ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரியே போற்றி!
108. ஓம் ஸ்ரீ பச்சை வாழி அம்மா போற்றி! போற்றி!

Wednesday, October 2, 2024

ஏழுமலை வாசா துதி தமிழ்| Ezhumalai Vasa Thuthi Tamil

நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 

அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் 

ஏழுமலை வாசா எங்கள் 
இதயமதில் வாழும் நேசா
இலக்குமியின் தாசா 
நெஞ்சம் இரங்குவாய் சீனிவாசா

வாழும் உயிர் அத்தனைக்கும் 
வாழ்வளித்து காக்கும் ஈசா
வருகிறோம் உன்னை நோக்கி 
வரம்வேண்டும் வரதராசா

பாழும் இந்த உலகின் 
பாவம் போக்கிடும் பாப நாசா
 பாதங்கள் பணிந்தோம் உந்தன் 
பார்வையைக் காட்டு இலேசா

சூழுகின்ற துயரம் எல்லாம் 
சுக்கு நூறாக்கி தூசாய்
சுகமாக்கு எங்கள் வாழ்வை 
திருமலை வெங்க டேசா !

பன்னிரு ஆழ்வார் போல 
பாடிடும் புலமை இல்லை
ஆயிரம் கீர்த்தனை சொல்லி 
பணிந்திடும் பொறுமை இல்லை!

உன்னையும் பங்கில் சேர்க்க 
ஓகோவென தொழிலும் இல்லை
உண்டியல் தன்னில் கொட்ட 
ஒன்றுமே கையில் இல்லை.

என்னிடம் வாங்கிக் கொள்ள 
நீயொன்றும் ஏழை இல்லை!
எனக்கீந்தால் உந்தன் செல்வம் 
எள்ளளவும் குறைவதில்லை.

மன்னிய செல்வம் எல்லாம் 
மட்காதோ சேர்த்து வைத்தால்?
மகிழாதோ மண்ணுயிர் எல்லாம் 
மாலவா மனது வைத்தால்!

அனுதினம் உன்னைப் பாட 
அடியேனும் ஆண்டாள் இல்லை
அவல்தந்து செல்வம் வாங்க 
அட நானும் குசேலன் இல்லை!

கனவிலும் உன்னைக் கொஞ்ச 
கண்ணாநான் கோபியர் இல்லை
கடமைசெய் பலனில்லை என்றால் 
கேட்கநான் அர்ச்சுனன் இல்லை!

தினமுந்தன் நாமம் சொல்லித் 
திரியநான் நாரதன் இல்லை
திறந்து என் நெஞ்சில் உன்னைக் 
காட்ட நான் அனுமனும் இல்லை.

மனதிலே ஒருநொடி எண்ணி 
மறுவேலை பார்க்கப் போகும்
மனிதன்நான் என்துயர் போக்க 
மாதவா மனமா இல்லை?

போதுமெனச் சொல்லும் வரையில் 
பொன்பொருள் சேர்க்க வேண்டும்
போதாது வாழ்வோர்க் குதவி 
புண்ணியம் சேர்க்க வேண்டும்.

பாதையில் இடறும் கற்கள் 
படிக்கற்கள் ஆக வேண்டும் 
பாதையில் தடம் பதித்து 
பயணத்தை முடிக்க வேண்டும்.

மோதுவது மலையே எனினும் 
மோதி நான் பார்க்க வேண்டும்
முயல்கிற செயல்கள் எல்லாம் 
முடித்து நான் காட்ட வேண்டும்!

வேதனை ஏதுமின்றி 
விண்ணகம் ஏக வேண்டும்
வேறொரு கருவில் மீண்டும் 
வாராது போக வேண்டும்.

மாதவா கண்ணா போற்றி!
மாலவா கிருஷ்ணா போற்றி!
மார்பிலே திருமகள் உறையும் 
மலரவா போற்றி போற்றி!

கோதண்ட ராமா போற்றி!
கோவிந்த ராஜா போற்றி!
கோகுல வாசா போற்றி!
கோபாலா போற்றி போற்றி!

சீதை மண வாளா போற்றி! 
ஸ்ரீரங்கா நாதா போற்றி!
ஸ்ரீதேவி கடைக்கண் காட்ட 
திருவருள் புரிவாய் போற்றி!

வேதத்தின் தலைவா போற்றி!
வேதனை தீர்ப்பாய் போற்றி!
வேண்டியது எல்லாம் தருவாய்
வேங்கடா போற்றி போற்றி!

Tuesday, October 1, 2024

பித்ரு ஸ்துதி தமிழ்| Pitru Stuti Tamil

பிரம்ம தேவர் கூறினார் - ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் சுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்மாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் சுக வடிவானவரும் சுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய தரிசனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்திரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அஸ்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்திரத்தை எந்த மனிதன் முயற்சியோடு பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்திரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து சுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...