Monday, August 26, 2024

ஸ்ரீகிருஷ்ணா பள்ளி எழுச்சி | Shri Krishna Palli Ezhuchi

யசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்!
யமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்!
கோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்!
கோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்!

அகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்!
ஆநிரை மேய்த்த கண்ணனே எழுந்தருள்வாய்!
இன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்!
ஈசனும் வணங்கும் தேவா எழுந்தருள்வாய்!

உலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்!
ஊனுக்குள் உயிராய் நிறைந்தவனே எழுந்தருள்வாய்!
எங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்!
ஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய்!

ஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அரங்கனே ! எழுந்தருள்வாய் !
ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்
ஒன்றாகி நின்ற சுடரோனே ! ஒப்பிலி அப்பனே பரம்பொருளே ! எழுந்தருள்வாய் !

ஓங்காரப் பொருளதனை உணர்த்திடுவான் எழுந்தருள்வாய்!
ஓங்கி உலகளந்த உத்தமனே ! வேதம் போற்றும் மன்னா ! எழுந்தருள்வாய் !
ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய்
ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்!

வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா எழுந்தருள்வாய்!
மையல் செய்யும் மைவண்ணா ! வையம் கொண்ட வாமனா எழுந்தருள்வாய் !
தளர்ச்சி இன்றி மலையை தூக்கி சொக்க வைத்த வித்தகா எழுந்தருள்வாய்!
போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க எழுந்தருள்வாய் !

சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் !
மால்வண்ணா மழை போலொளி வண்ணா எழுந்தருள்வாய்!
பாகவதர் பலருன்னைப் போற்றிடவே எழுந்தருள்வாய்!
பையவே எழுந்தென்னைப் பார்த்திடவே எழுந்தருள்வாய்!


Santhoshi Matha Song Tamil | சந்தோஷி மாதா பாடல் தமிழ்

ஜய ஜய சந்தோஷிமாதா! 
ஜய ஜய சந்தோஷிமாதா! 
செல்வங்கள் அனைத்தையும் எங்களுக்களித் திடும்!
ஜய ஜய சந்தோஷிமாதா!

அழகிய ஆடையும் ஆபரணங்களும் அன்புடன் அணிவாய் மாதா நீயே! 
இரத்தின ஒளிதான் உன் உடல் தாயே!
இரக்கம் மிகக் கொண்டு அருள் செய்வாயே!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

தாமரை மலர் போல் சிவந்த உன் முகமும்! 
மங்களமான உன் மந்தகாசமும் கண்டு! 
மூவு லகத்தார் மனமும் மோகிக்கும் தாயே! 
பூவுலகெங்கும் உனக்கிணை நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

சுவர்ண சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருக்க! 
சுந்தரி உனக்கு வீசுவேன் சாமரம்! 
தூபமும் தீபமும் தேனும் பழமும்! 
துதித்து நான் உனக்குச் செய்வேன் நிவேதனம்!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

வெள்ளிக் கிழமையே விரதத் திருநாள்!
உன் வீரக்கதை கேட்கவும் அதுவே நன்னாள்!
வெல்லமும் கடலையும் பிடித்தவை உனக்கே! 
வெற்றியைத் தருவதால் சந்தோஷி நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

கோயில் எங்கும் பளிச்சென ஒளிவீச! 
மங்கள வாத்தியம் எங்கும் முழங்கும்! 
சிறுவர் சிறுமியர் உன்னடி பணிவார்! 
சிறப்புகள் தருவாய் ஐகன்மாதா நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

பக்திமிக்க எங்கள் பூஜையை ஏற்பாய்! 
பக்தர்கள் எங்கள் எண்ணத்திற்கு அருள்வாய்!
ஏழை எளியோர் துயர்தனைத் துடைப்பாய்! 
இல்லங்கள் தோறும் தானியம் தருவாய்!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

தியானத்தால் பெரும் பலன்கள் நேரும்! 
உன் திருக்கதை கேட்டாலே நினைத்தது கைகூடும்! 
ஸ்ரீ சந்தோஷிமாதா உனக்கு ஆரத்தி எடுப்போம்!
சகல சம்பத்தும் பெறுவோம் உறுதியம்மா!
ஜய ஜய சந்தோஷிமாதா! 

Monday, August 19, 2024

சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம் | Sani Bhagavan Kavsam Tamil

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்



அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்! - (1)


ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! - (2)

பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே! - (3)

கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! - (4)

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்! - (5)

குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! - (6)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! - (7)

மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! - (8)

ஸ்ரீ ஹனுமன் பஞ்சரத்னம் தமிழில் |Shri Hanuman Pancharathnam Tamil

1. ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் எல்லா விதமான ஆசைகளையும் தவிர்த்தவரும், பக்திப் பரவசத்தால் உண்டாகும் ஆனந்தத்தால் கண்ணீர்-மயிர்க்கூச்சல் முதலியவற்றை உடையவரும், மிகவும் தூய மனம் படைத்தவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், வாயு புத்திரருமாகிய ஹனுமாரை இப்போது தியானம் செய்கிறேன்.




2.உதயசூரியனுக்கு நிகரான சிவந்த தாமரை போன்ற முகத்தை உடையவரும், கருணையால் கண்ணீர் வழியும் கண் பார்வையை உடையவரும், சஞ்சீவி மலையைக்கொண்டு வந்து போரில் இறந்த வானரர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தவரும், மனதை ஈர்க்கும் மகிமை படைத்தவரும், அஞ்சனாதேவியின் புண்ணியத்தின் பலனாகத் தோன்றியவருமாகிய ஹனுமாரை தரிசிக்க விரும்புகிறேன்.

3. காமத்தை வென்றவரும், தாமரை இதழ்போன்ற பரந்த கண்களால் அழகு வாய்ந்தவரும், சங்கு போன்ற கழுத்தை உடையவரும், கோவைப்பழம் போல் சிவந்து பிரகாசிக்கும் உதடு உடையவரும், வாயு புத்திரருமாகிய ஹனுமாரை ஒரே ஆதாரம் என்று சரணடைகிறேன்.

4. சீதையின் துன்பத்தைப் போக்கியவரும், ஸ்ரீராமபிரானின் புகழைப் பிரகாசிக்கச் செய்தவரும், ராவணனுடைய புகழை அழித்தவருமாகிய ஹனுமாரின் உருவம் என் முன்னால் தோன்றட்டும்.

5.வானரக் கூட்டத்தின் தலைவரும், அசுர வம்சமாகிய ஆம்பல் மலரை சூரியகிரணம் போல்இருந்து அழித்தவரும், எளியவர்களைக் காப்பாற்றுவது என்ற உறுதியாக சித்தம் கொண்டவரும், வாயு பகவான் செய்த தவத்தின் வடிவமாக இருப்பவருமாகிய ஹனுமாரை நான் நேரில் கண்டேன்.

பஞ்சரத்தினம் என்று பெயர் பெற்ற ஹனுமாரின் இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறாரோ, அவர் இந்த உலகில் நீண்ட காலம் எல்லா இன்பங்களையும் அனுபவித்து ஸ்ரீராமபக்தனாகவும் விளங்குவார்.

Sunday, August 18, 2024

சந்தோஷி மாதா துதி | Santhoshi Matha Thuthi

1.தேவிவந்தாள் தேவி வந்தாள் சந்தோஷம் தந்திட தேவி வந்தாள் தேடிவந்தாள் என்னைத் தேடி வந்தாள் ஸ்ரீதேவி என்னைத் தேடி வந்தாள்

2.ஆவணி மாதத்து பௌர்ணமியில் அன்புடன் தேவி அவதரித்தாள் தூமணி தீபமாய் அவதரித்தாள்
துன்பங்கள் ஓட்டிட அவதரித்தாள்


3.கணேச புத்திரர் தங்களுக்கே ரட்சை அணிவிக்க தேவி வந்தாள் லக்ஷ்மி வாணி பார்வதியின் அருள்தனைப்பெற்று அவதரித்தாள்

4.சித்தி புத்தியின் புதல்வியாக சித்தத்தை மகிழ்விக்க அவதரித்தாள் நித்தியம் அவளை நினைத்திடவே சக்திதேவியாய் அவதரித்தாள்.

5. வெள்ளி கிழமையில் தேவி வந்தாள் வேதனை தீர்க்க தேவி வந்தாள் கொள்ளை அழகுடன் விளங்குகின்றாள் குழந்தைகள் மனதைக் குளிர்விப்பாள்.

6. உணவினில் புளிப்பை நீக்குகின்றாள் மனதினில் களிப்பை வழங்குகிறாள் கணவனைப் பிரிந்த காரிகைக்கே கஷ்டத்தை நீக்கி கூட்டுவிப்பாள்

7. கொடுமைகள் நடப்பதை தடுத்திடவே கும்பிடுவோரைக் காத்திடவே கடுமையுடன் விரதம் செய்வோர் கஷ்டம் நீக்க வருகின்றாள்

8. மனைவியை மறந்த மனம் அதனை மாற்றி நினைவில் வரவழைப்பாள் வினைகளை நீக்கி தம்பதிகள் சுகமாய் வாழ அருள் செய்வாள்.

9.செல்வத்தை நாடும் எளியோருக்கு சிந்தை குளிர பணம் அளிப்பாள் கல்வியைத் தேடும் இளையோருக்கு கண்ணாய் கல்வியைத் தருகின்றாள்

10. பகைதனை அழிக்க வீரம் கொண்டு பதிவிரதைகளைக் காக்கின்றாள். நகையுடன் நல்ல உடையளித்து சுமங்கலியாக வாழவைப்பாள்.

11.உதாரணம் சொல்ல முடியாத - அழகைக் கொண்டாள் சந்தோஷி அவமானம் தன்னையும் நீக்குகின்றாள் அவளை அன்புடன் நீ நேசி

12.இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கவே அருள்வாள் அன்னை சந்தோஷி சொல்லினில் இனிமை ஏற்றுகின்றாள் அன்புடன் அவளை நீ நேசி

13.வாணியும் லக்ஷ்மியும் பார்வதியும் வியக்கும் வகையில் விளங்குகின்றாள் நானிலம் அவளே வணங்குவதால் மூவரின் அருளே அடைந்திடலாம்

14. பிரிந்த கணவரைக் கூட்டுவிப்பாள் மனதில் இன்பம் ஊட்டிவிடுவாள் சரிந்த வாழ்க்கை இனிதல்ல என்றே சொல்லி சிரித்திடுவாள்

15. இரக்கம் கொண்டவள் இவளே தான் இன்பம் தருவாள் இவளேதான் சுரக்கும் அன்பினில் துணை இருப்பாள் தீபத்தின் ஒளியில் குடியிருப்பாள்

16. கடன்களைத் தீர்த்து கருணை செய்வாள் கற்புடை மாந்தரைக் காத்திடுவாள் உடன் பிறந்தோரை மகிழ்விப்பாள் உண்மை அன்பாய் விளங்குகின்றாள்

17. வறுத்த கடலை வெல்லத்துடன் பிரியமாய் படைத்தால் மகிழ்ந்திடுவாள் பெருத்த செல்வச் சீமானாய் வணங்குவோரை வாழவைப்பாள்.

18. இச்சையுடன் தன்னை நாடி வந்தால் இன்பம் தருவாள் ஸ்ரீதேவி அச்சத்தைத் தருவாள் பகைவருக்கே அன்புடை தெய்வம் ஸ்ரீதேவி

19. இத்தரை மீதிலே அவதரித்தே இன்பம் தருவாள் ஸ்ரீதேவி புத்திர பாக்கியம் தருகின்றாள் புண்ணிய தெய்வம் சந்தோஷி

20. மருமகள் மாமியார் ஒற்றுமையை தந்திடுவாளே ஸ்ரீதேவி திருமகள் அவளைச் சரணடைவோம் திவ்ய ஜோதி சந்தோஷி

21. பதைத்திடும் மனதில் பரிவுடனே ஆறுதலிப்பாள் சந்தோஷி கதைகளைக் கேட்பவர் வாழ்த்திடுவார் நாரத முனிவரே தான் சாட்சி 

22. கூடிவாழும் குடும்பத்திலே குத்துவிளக்காய் ஒளிர்ந்திடுவாள் வாடிடும் நிலையில்லை என்றிடுவாள் வாசம் செய்வாள் சந்தோஷி

23. காலதேசம் கடந்தவளாம் கற்புடை அணிகலன் அவளேதான் காலப்பயத்தையும் நீக்கிடுவாள் கஷ்டங்கள் யாவையும் போக்கிடுவாள்

24. மங்கையர் கும்பிடும் சந்தோஷி மாமணி தீபமே சந்தோஷி நங்கையர் நாயகி ஸ்ரீதேவி நானிலம் போற்றும் சந்தோஷி

25. சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாய் திவ்ய ரூபமே சந்தோஷி அம்மா உன்னை வணங்குகின்றேன் அன்புடனே காத்திடுவாயே ஸ்ரீதேவி.

26. பாரினில் ஆட்சி செய்கின்றாய் கருணை கண்களால் பார்க்கின்றாய் ஆரத்தி ஏற்பாய் சந்தோஷி மாதா நீயே சரணம் என்பேன்

27.ஜெய்ஜெய் மாதா சந்தோஷி ஜெகத்தினை நீயே காத்திடுவாய் ஜெய்ஜெய் மாதா சந்தோஷி சிறப்புடன் ஆரத்தி ஏற்றிடுவாய்

Friday, August 16, 2024

Sani Bhagwan Kavasam | பக்தரைக் காக்கும் பகலவன் மகனே

பக்தரைக் காக்கும் பகலவன் மகனே நித்தமும் உன்னை நான் துதிப்பேனே காகம் ஏறும் கரியவன் நீயே சோகம் நீக்கி அருளிடுவாயே

மையென்னும் நிறத்தை உடையவன் நீயே தைரியம் நெஞ்சில் கொண்டவன் நீயே சரசரவென்று சடுதியில் வருக சங்கடம் தீர்க்க நீயே வருக 

உன்னருள் பெறவே உலகோர் முனைய எண்ணில்லாத நலமே விளைய ஈசன் பட்டம் சூடிய உன்னை என்றும் வணங்க நீயருள்வாயே

யோகம் பலதந்து காப்பவன் நீயே பாவம் விலக உனைப்பணிவோமே கருணை காட்ட காரி வருக கைத்தொழுவோமே சனியே வருக

அசுப கிரகம் என்றிருந்தாலும் முயற்சியும் பக்தியும் ஒருங்கே கொண்டு காசியில் நீயும் லிங்கம் அமைத்து ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாய்

அருந்தவம் அறிந்து சிவனும் தோன்றி விரும்புவதென்ன என்றே கேட்க மகிழ்வுடன் நீயும் ஈசனை பணிந்து மனதினில் இருப்பதை எடுத்துரைத்தாயே

ஒன்பது கோளில் உயர்ந்தவன் நான் என உலகம் உணர்ந்திட வேண்டும் என்று ஈஸ்வரன் என்ற பெயரும் தன்னுடன் இணைந்திட வேண்டும் என்றுரைத்தாயே

பரமனும் உந்தன் கோரிக்கையேற்று அருள்புரிந்தார் அகம்மகிழ்ந்தாரே அதுமுதல் நீயும் சனீஸ்வரன் என்று அகிலம் அழைக்க உயர்வடைந்தாயே

வாழ்வில் உன்னை வணங்குவதாலே வரும் இடர் குறைந்து வளம்பெறுவோமே ஏழ்மை விலக ஏற்றம் தொடர என்றும் எமக்கு நீயருள்வாயே

தீராத நோயும் தீமை பலவும் காரி உன் அருளால் கரைந்தே போகும் அல்லலை அகற்றும் அற்புதன் நீயே அதனால் உன்னை வணங்கிடுவோமே

துர்கையை வணங்கும் தூயவன் நீயே.. எமதர்மராஜனின் சோதரன் நீயே எள்ளு தீபம் ஏற்றியே உந்தன் இணையடி வணங்கி நலம்பெறுவோமே

கருநிற ஆடை அணிந்தவன் நீயே கருநீல மலரை சூடிடுவாயே இரும்பு உலோக அதிபதி நீயே எங்களை காக்க உளம்கனிவாயே

மகரம் கும்பம் ஆட்சி வீடு ரிஷபம் மிதுனம் நடு வீடு கடகம் சிம்மம் பகையல் கொண்டு கைத்தொழுதோரை காப்பவன் நீயே

குருவின் சிறிதாய் தோன்றிய போதும் உதவியில் பெரிதாய் உயர்த்திடுவோனே திருநள்ளாறில் தலமுடையோனே திருவடிபணிந்தேன் காத்திடு நீயே

சன்னதி தனியே கொண்டவன் நீயே சங்கடம் தீர்க்கும் மன்னவன் நீயே வாராய் வாராய் வரம் தர வாராய் தாராய் தாராய் நலமே தாராய்

நிடதநாட்டு நளமகாராஜன் இடர் பல அடைந்து தோஷம் நீக்க உன்னிடம் வந்து உனைத்தொழுதானே இன்னலை விடுத்து நிலை உயர்ந்தானே

உன்னிடம் வந்து குறைகளைச் சொன்னால் உதவிடும் நல்ல உயர்குணத்தோனே பண்ணிய பாவம் பனியென மாற தந்திடுவாயே நீ உன் அருளே

தோஷம் கண்ட பலரும் உந்தன் ஆலயம் வந்து நிவர்த்தி கண்டார் க்ஷேமம் தந்து சிறப்புகள் தந்து ஜகமதில் நீயே வாழ வைப்பாயே

அவந்தி மன்னன் குருசீராஜன் ஒருமுறை மனதில் மையம் கொண்டான் தானத்தில் உயர்ந்த தானம் எதுவென பரத்வாஜ முனிவரை பணிவுடன் கேட்டான்

தானம் யாவிலும் உயர்ந்தது என்றும் அன்ன தானம் என்றவர் சொன்னார் காலம் அறிந்து அதனை செய்வது சாலச்சிறந்தது என்றுரைத்தாரே

திருநள்ளாறு திருத்தலம் சென்று அங்கே செய்யும் அன்ன தானமே உலகில் பெரிதும் சிறந்தது என்று மாமுனி சொல்ல மன்னன் மகிழ்ந்தான்

ரிஷியின் வாக்கை சிரமேல்கொண்டு உன் தலம் வந்து அறமே புரிந்தான் அதனால் அரசன் ஆயிரமாயிரம் நன்மை அடைந்து நலமுற்றானே

வாழ்க வாழ்க சனைச்சரன் வாழ்க 
வாட்டம் போக்கும் காரி வாழ்க சூழும் இடரை கலைவோன் வாழ்க சூத்திரதாரி நீயே வாழ்க

உன்பதம் பணியும் அடியார் வாழ்க உன்னருள் வேண்டும் அன்பர்கள் வாழ்க துன்பம் தீர்க்கும் தூயோன் வாழ்க துணிவை அதிகம் கொண்டோன் வாழ்க

திருச்செங்கோடில் அருள்வோன் வாழ்க திருவையாற்றில் இருப்பான் வாழ்க ஓமாம்புலியூர் சனியே வாழ்க உன்புகழ் சொல்லும் உத்தமர் வாழ்க.

கணிந்தருள் செய்யும் கதியோன் வாழ்க கைத்தொழுதோரை காப்போன் வாழ்க கடும்பிணி நீக்கி அருள்வோன் வாழ்க

மேற்கு திசையை உடையவன் நீயே மேன்மைகள் வாழ்வில் தருபவன் நீயே தங்கக்கவசம் ஒன்பது கொண்டு தாழ்பணிந்தோரை காப்பது நன்று

கேட்கும் வரங்களை தருபவன் நீயே கேடுகள் களைந்து காப்பதும் நீயே உன்னைப்போல் கொடுப்பாரில்லை உனக்கொரு ஈடு எங்கும் இல்லை.

தவறுகள் செய்தால் தண்டிப்பவனே தருணம் பார்த்து நலம் புரிபவனே அவதிகள் விலக அருள்பவன் நீயே அனைவரும் வாழ வரம்கொடு நீயே

கெடுபலன் குறைத்து நற்பலன் தருக நடுநிலையோடு நீதி தருக கொடுமைகள் அழிய காற்றாய் வருக குவலயம் செழிக்க நீயருள் புரிக

இந்திரன் முதலாய் அனைவரும் உந்தன் பார்வையில் படவே நடுங்கிடுவாரே அன்பரைக் காக்க அருள் கரம் தருக வந்திடும் பேர்க்கு அபயம் தருக

நற்றுணையாக வருபவன் நீயே நலமே நாளும் தருபவன் நீயே பற்றிட வந்தேன் உன்திருப்பதமே பரிவுடன் நீயும் பார்த்திடுவாயே

வேலனை வேங்கை மரமெனச் செய்தாய் விறகினை சிவனாய் விற்கவும் செய்தாய் பாலனை உரலுடன் கட்டிட வைத்தாய் ஈசனை காலனால் உதைபட வைத்தாய்

யாவும் உந்தனின் திருவிளையாடல் போதும் போதும் நீ தரும் ஆடல் வாழ்வில் என்றும் வளமை தரவே வணங்கிடுவேனே நின்திருவடியே

யாரும் உந்தன் பார்வையில் இருந்து விலகுதல் அரிது என்பது நியதி வேதம் இன்றி அவரவர் புரிய வினையின் பலனை தருபவன் நீயே

தலைமுதல் கால்வரை உடலின் உறுப்பை தடையற என்றும் நீயே காக்க நரம்பும் சதையும் நலமுடன் விளங்க நல்லருள் தந்து எந்தனை காக்க

இருவிழிதன்னை இதமாய் காக்க இருதயம் சிறந்த இயந்திட காக்க இருகை கால்களை திடமுடன் காக்க எல்லா திசுவும் செயல்பட காக்க

செவிகள் இரண்டை சிறப்புடன் காக்க செப்பும் வாயினை சீருடன் காக்க நறுமணம் நுகரும் நாசியை காக்க நலிவடையாமல் நீயே காக்க

வலியுடை தோள்களை வளமுடன் காக்க
இரு தொடை முழங்கால் இதனுடன் காக்க 
ஆண் பெண் குறிகளை அன்புடன் காக்க 
பேரிடர் இன்றி பரிவுடன் காக்க

தீவினை எதுவும் தீண்டாமல் காக்க தெய்வம் போலெ நீயே காக்க பாவம் யாவும் பொடிபட காக்க பலவித இடரை தடுத்தெனை காக்க

மழையினில் இருந்து மக்களை காக்க புயலில் இருந்து உயிர்களை காக்க நெருப்பினில் இருந்து நித்தம் காக்க நிலநடுக்கம் எதும் நேராமல் காக்க

கோள்களின் இயக்கம் குறைவற காக்க இயற்க்கை சீற்றம் நிகழாது காக்க
போர்குணம் நெஞ்சில் பொசுங்கிட காக்க புவிவாழ் மக்களை பொறுப்புடன் காக்க

வாகன விபத்து வருவதை தடுத்து வாஞ்சையுடனே பக்தரை காக்க ஞாபக சக்தி நாளும் கூட்டி நலமே பெறுக எங்களை காக்க

திதியின் பிடிகள் தளர்ந்திட காக்க வேற்றுமை நினைவை விரட்டியே காக்க மதியின் கூர்மை மலையென பெறுக மலரடி நானும் பணிந்திடுவேனே

வாழ்க வாழ்க நின்புகழ் வாழ்க! வரும் வினை போக்கும் வல்லோன் வாழ்க காரியென்னும் சனீச்சரன் வாழ்க காக்கும் கரங்கள் உடையோன் வாழ்க

சாயாதேவியின் மைந்தன் வாழ்க சமநிலையுடையோன் குணத்தோன் வாழ்க தேவரை மூவரை மானிட இனத்தை நியாய தராசில் இடுவோன் வாழ்க

அஞ்சா நெஞ்சம் உடையவன் வாழ்க அண்டங்கள் நடுங்கச் செய்பவன் வாழ்க நெஞ்சார துதித்தால் நன்மைகள் வழங்கும் நீதியின் அரசன் நித்தம் வாழ்க

பிணிகளை நீக்கும் பெரியவன் வாழ்க! பிழைகளை பொறுக்கும் நல்லவன் வாழ்க இணையில்லாத ஈஸ்வர பட்டம் ஏந்திய எங்கள் இறையே வாழ்க

திருநள்ளாறு தலமே வந்து தீர்த்தம் தனிலே நீராடி உன்னை இருக்கரம் குவித்து பணிந்தவர்க்கெல்லாம் இன்பம் ஒன்றே நீதருவாயே

அடியவர் வாழ்வில் தோஷம் நீக்கி தடைகளை அகற்றி தருவாய் பலனே விடியலை வழங்கும் வேந்தனும் நீயே வெற்றிகள் தந்து காத்திடுவாயே

கருந்துணியெடுத்து எள்ளினை முடிந்து நல்லெணெய் தீபம் நாளும் ஏற்ற வழிபடும் அன்பரை வளமுறச் செய்து வையகத்தோரை உயர்த்திடுவாயே

எல்லாக் குறையும் எல்லா இடரும் நில்லாதோட நீயருள் புரிக பொல்லா பில்லி சூனியம் விலக்கி பொங்கும் மகிழ்வை நீயே தருக

திருவுளம் கொண்டு தீமைகள் அகற்றி திருவருள் தந்து காத்திடு நீயே சிவனை வணங்கும் அடியவர் தம்மை சீக்கிரம் நீயே பெற்றிடுவாயே

அனுமனை நினைக்கும் அன்பரையெல்லாம் அழகாக நீயும் அரவணைப்பாயே ஐங்கரன் பாதம் தொழுதிடுவோரை ஆபத்திலிருந்து காத்திடுவாயே

கரியவன் உந்தன் பாதம் போற்றி காக்கை வாகனன் சனியே போற்றி உருவினில் சிறிய வடிவே போற்றி உதவியே அருளும் உத்தமா போற்றி

சரணம் சரணம் உன்தாழ் சரணம் சரணம் சரணம் உன்னருள் சரணம் சரணம் சரணம் சனீஸ்வரா சரணம் சரணம் சரணம் சனீஸ்வரா சரணம்

Thursday, August 15, 2024

துளசி அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் தமிழ்| Shri Tulasi Ashtothra Sathanama Sthothram Tamil

தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.


தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது  மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள். தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை, ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.

 ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.

ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், கறுப்பு, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.

ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள். துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி ஆன மூன்று சக்திகளின் திருவடிவானவள்.

ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.

ஸ்ரீ துளசி தேவி, விருப்பங்களை நிறைவேற்றுபவள். மேதைத் தன்மை மற்றும் நுண்ணறிவு அவற்றின் வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள்,  தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.

மோட்சத்தைத் தருபவள், கரும்பச்சை வர்ணம் உள்ளவள், என்றும் இனிமையானவள், மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.

பொன்னிறமானவள், கண்டகி நதி உண்டாகக் காரணமானவள், ஆயுள் விருத்தியைத் தருபவள், வன ரூபமானவள், துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.

கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணுவின் மூலிகையாக உள்ளவள். நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.

மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.

சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள்.  சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள். சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.

கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள், பார்வதி தேவிக்குப் பிரியமானவள், துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது, ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.

வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.

சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள், சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.

காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்.

ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள், சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.

அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.

தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.

Wednesday, August 14, 2024

துளசி லக்ஷ்மி 108 போற்றி | Tulasi Lakshmi 108 Potri Tamil

ஓம் பொன் மகளாகிய பூந்தளிரே போற்றி
ஓம் பூமிதேவியாய் உதித்தவளே போற்றி
ஓம் மன்னவன் மாலவன் மார்பினளே போற்றி
ஓம் மகாதேவியாய் மணப்பவளே போற்றி


ஓம் செந்நிறம் பூத்த செந்திருவே போற்றி
ஓம் செல்வ அதிபதி ஆனவளே போற்றி
ஓம் அன்னையே மாடம் எழுபவளே போற்றி
ஓம் அருமருந்தாக ஆனவளே போற்றி
ஓம் மின்னிடும் ப்ரகாசம் கொண்டவளே போற்றி
ஓம் மேனியில் பசுமை சுடர்பவளே போற்றி
ஓம் பன்னெடுங்காலம் வளர்ந்தவளே போற்றி
ஓம் பாக்கியம் எல்லாம் தருபவளே போற்றி
ஓம் கரும் பச்சையாய் நிறம் கொண்டாய் போற்றி
ஓம் க்ருஷ்ண துளசியாய் பெயர் கொண்டாய் போற்றி
ஓம் பெரும் சுடர் என ஒளிர்பவளே போற்றி
ஓம் பெயரில் ராமனைக் கொண்டவளே போற்றி
ஓம் திருத்துழாய் என பூத்தவளே போற்றி
ஓம் திருமாலை தினம் துதிப்பவளே போற்றி
ஓம் பெரும் செல்வமே பேரருளே போற்றி
ஓம் பேராயிரமும் கொண்டவளே போற்றி
ஓம் விருந்தாவனம் இருந்தவளே போற்றி
ஓம் வேத நூல்களை ஏற்றவளே போற்றி
ஓம் திருவெனும் நிதியாய் உதித்தவளே போற்றி
ஓம் தேவ அமுதமுடன் வந்தவளே போற்றி
ஓம் கார்த்திகை மாதம் உதித்தவளே போற்றி
ஓம் கனக பைந்தளிர் நிறத்தவளே போற்றி
ஓம் பூத்த பௌர்ணமி போன்றவளே போற்றி
ஓம் புண்ய தளமாக ஜனித்தவளே போற்றி
ஓம் ஆர்த்த பாற்கடல் எழுந்தவளே போற்றி
ஓம் அமரர் அமுதுபெறச் செய்தவளே போற்றி
ஓம் சேர்த்த நெல்லியுடன் இணைப்பவளே போற்றி
ஓம் சேவித்தார்க்கு அருள்பவளே போற்றி
ஓம் வார்த்த சிறுமரம் ஆனவளே போற்றி
ஓம் வன விருட்சமாய் உயர்ந்தவளே போற்றி
ஓம் பார்த்த இடமெல்லாம் மணப்பவளே போற்றி
ஓம் பரந்தாமனின் மாலையளே போற்றி
ஓம் கல்யாணியே திருமகளே போற்றி
ஓம் கவலை யாவும் தீர்ப்பவளே போற்றி
ஓம் இல்லம் எங்கும் இருப்பவளே போற்றி
ஓம் இனிய பூஜைகள் ஏற்பவளே போற்றி
ஓம் அல்லும் பகலும் கடந்தவளே போற்றி
ஓம் ஹரிப்ரியையாய் ஒலிப்பவளே போற்றி
ஓம் செல்வம் தந்திடும் பச்சையளே போற்றி
ஓம் செவ்வாய் பூஜை ஏற்பவளே போற்றி
ஓம் வெல்லும் பகையைச் சொல்பவளே போற்றி
ஓம் வெள்ளியில் பூஜை ஏற்பவளே போற்றி
ஓம் விஷ்ணு வல்லபையே போற்றி
ஓம் வரமனைத்தையும் தருபவளே போற்றி
ஓம் மாடம்தோறும் அமைபவளே போற்றி
ஓம் மங்களமெல்லாம் தருபவளே போற்றி
ஓம் கூடம் தெருவில் அமைபவளே போற்றி
ஓம் குண்டலினி என்னும் சித்தி தரும் போற்றி
ஓம் பீடம் ஏறிய தரிசனமே போற்றி
ஓம் பேறு பதினாறு தருபவளே போற்றி
ஓம் ஆடகப் பொன்னாம் அருமருந்தே போற்றி
ஓம் அமுத தண்ணீரில் பிறந்தவளே போற்றி
ஓம் காடாளுகின்ற மாமகளே போற்றி
ஓம் கார்த்திகை வளர்பிறை மணமகளே போற்றி
ஓம் வீடாளும் நிலை தருபவளே போற்றி
ஓம் வீடுகள் தோறும் மணப்பவளே போற்றி
ஓம் துளசிச் செடியாய் விளைந்தவளே போற்றி
ஓம் துளசித் தளிராய் ஒளிர்ந்தவளே போற்றி
ஓம் துளசித் தளமாய் விரிந்தவளே போற்றி
ஓம் துளசித் தருவாய் வளர்ந்தவளே போற்றி
ஓம் துளசி வனமாக மணப்பவளே போற்றி
ஓம் துளசி பூஜையில் மகிழ்பவளே போற்றி
ஓம் துளசி அர்ச்சனையில் களிப்பவளே போற்றி
ஓம் துளசி மாலையென சுடர்பவளே போற்றி
ஓம் துளசி வேரென நிலைப்பவளே போற்றி
ஓம் துளசி மணி மாலை தருபவளே போற்றி
ஓம் துளசித் துகள் மருந்தானவளே போற்றி
ஓம் துளசி என்னும் பசுங் கற்பகமே போற்றி
ஓம் நுனியில் ப்ரஹ்மனைப் படைத்தவளே போற்றி
ஓம் இடையில் விஷ்ணுவைக் கொண்டவளே போற்றி
ஓம் அடியில் சிவனை அணிந்தவளே போற்றி
ஓம் தளங்களில் அமரரைக் கொண்டவளே போற்றி
ஓம் பன்னிரு சூரியர் வடிவினளே போற்றி
ஓம் அஷ்ட வசுக்கள் அமைந்தவளே போற்றி
ஓம் அஸ்வினி தேவர்கள் இழைந்தவளே போற்றி
ஓம் வேரினில் தலங்களைக் கொண்டவளே போற்றி
ஓம் தண்டினில் தெய்வங்கள் சுமப்பவளே போற்றி
ஓம் வானம் பூமியை இணைப்பவளே போற்றி
ஓம் மறைகளை மேனியில் கொண்டவளே போற்றி
ஓம் மாருதிக்குகந்த இலைமகளே போற்றி
ஓம் பங்கஜ தாரிணி பேரழகே போற்றி
ஓம் பரம கல்யாணி சுபதையே போற்றி
ஓம் மங்கல புண்ணிய தள மகளே போற்றி
ஓம் மணம் பரப்பிடும் சுகந்தையே போற்றி
ஓம் கங்கை நீரின் சமம் ஆனவளே போற்றி
ஓம் கவச தேவியே காமினியே போற்றி
ஓம் தங்க நிறத்தொளி தாரகையே போற்றி
ஓம் ஜனனி என்னும் பெயர் கொண்டவளே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திடும் எழில் வதனி போற்றி
ஓம் எல்லாவற்றையும் காப்பவளே போற்றி
ஓம் பொங்கும் புனல் எனும் அருள் வடிவே போற்றி
ஓம் பூதேவியே நாரணியே போற்றி
ஓம் வண்ணம் ஏற்கும் ஒளியழகே போற்றி
ஓம் வைஷ்ணவியாகிய துளிர் அழகே போற்றி
ஓம் விண்ணில் இருந்து வந்தவளே போற்றி
ஓம் விவாஹம் கொள்ளும் பேரழகே போற்றி
ஓம் பெண் தெய்வம் ஆனவளே போற்றி
ஓம் பெரும் ஆயுளைத் தருபவளே போற்றி
ஓம் கண்ணில் தெரியும் கற்பகமே போற்றி
ஓம் கலை அருளும் வித்யாமயியே போற்றி 
ஓம் பண்ணில் மயங்கும் பார்கவியே போற்றி 
ஓம் பலமும் புகழும் தருபவளே போற்றி 
ஓம் மண்ணில் மலரும் திருவழகே போற்றி 
ஓம் மாநிதி செல்வம் தருபவளே போற்றிப் போற்றி!


Tuesday, August 13, 2024

வாராஹி கவசம் தமிழ்| Varahi Kavasam Tamil

முழுமுதற் கடவுளே மூஷிக வாஹனனே முன்வந்து காப்பவனே மூலாதாரனே விநாயகனே வாராஹிகவசத்தை உனதருளால் நான் பாட உன்னத வாழ்வு தந்து உடனிருந்தே காத்தருள்வாய்.


வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், வராஹ முகம் கொண்ட வையகம் காக்க வந்தவளே சரணம்.
ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.
நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.

பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
மஹா வாராஹியே ஸ்வப்ன வாராஹியே ஆதி வாராஹியே லகு வாராஹியே வா வா வா. 
சிம்ஹா ரூடா வாராஹியே, மகிஷா ரூடா வாராஹியே, அஷ்வா ரூடா வாராஹியே, உன்மத்த வாராஹியே வா வா வா.

திருமாலின் அவதார அம்சமாய் வராஹ முகம் கொண்டாள் வாராஹி.
த்ரீலோகேஷன் அம்சமாய் த்ரிநேத்திரங்கள் கொண்டாள் வாராஹி.
இரவில் பூஜை ஏற்று இன்னல்களை களை வாள் வாராஹி.
எட்டு பஞ்சமி நாளில் பூஜை ஏற்று எண்ணியதை முடிப்பாள் வாராஹி.

தேய்பிறை பஞ்சமி பூஜையில் வளர்பிறையாய் வாழ்வளிப்பாள் வாராஹி.
தேனில் ஊறிய மாதுளை ஏற்று தனமழை பொழிவாள் வாராஹி.
ஐம் க்லௌம் எனும் மூல மந்திரத்தில் ஐஸ்வர்யங்களை அருள்வாள் வாராஹி.
நித்தம் இதனை ஜெபித்து வர சகல சித்திகளும் தருவாள் வாராஹி.

ஞானத்துள் சிறந்த சிவஞானத்தை அருள்வாள் வாராஹி.
ஞாலம் போற்றும் கீர்த்தியும் செல்வாக்கும் அருள்வாள் வாராஹி.
விரளி மஞ்சள் மாலை சாற்ற வேண்டியதை தந்து அருள்வாள் வாராஹி.
செவ்வரளி மலர் அர்ச்சனையில் அள்ளிவளம் பொழிந்தருள்வாள் வாராஹி.

செண்பக மலர் பூஜை ஏற்று கண் மலர்ந்தே காத்தருள்வாள் வாராஹி.
மரிக்கொழுந்தில் மனம் மகிழ்ந்து மகிமைகள் புரிந்து அருள்வாள் வாராஹி.
தேங்காயில் நெய்தீபம் ஏற்ற தீங்கினை தகர்த்தெரிவாள் வாராஹி. லலிதா நவரத்தின மாலையில் குளிர்ந்து நவநிதியை தந்தருள்வாள் வாராஹி.

அகிலாண்டேஸ்வரி அருள் உருவாய் ஆனவள் வாராஹி.
அபராஜிதா மீதேறி அண்டம் அதிர வைத்தவள் வாராஹி.
போர்கோல தேவதையாய் படை தளபதி ஆனவள் வாராஹி.
பைரவ பத்தினியாய் படை நடுங்க செய்தவள் வாராஹி.

கோரப் பல்லும் கூர் நகங்களும் கொண்டவள் வாராஹி.
கருத்த ஆடை அணிந்து கோபக் கனலாய் காட்சி தருபவள் வாராஹி.
அஹங்காரியாய் ஆவேசமாய் அசுரரை மாய்த்து சாய்த்தவள் வாராஹி.
அன்னையாய் அன்புருவாய் என்றும் தன் அடியவரை காத்து ரக்ஷிப்பாள் வாராஹி.

பராசக்தியின் வடிவம் என புராணங்கள் போ ற்றிடும் வாராஹி. பெயர்கள் பன்னிரெண்டு கொண்டு புவி ஆள வந்தவளே வாராஹி. பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரீ, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, சிவா, வார்த்தாளி, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்நீ எனும் 12 நாமங்கள் கொண்டவளே வாராஹி.

நாளும் இதனை ஓதி துதித்தால் நலம் யாவும் தந்தருள்வாள் வாராஹி.
அன்னையின் அருள் பார்வையில் அகிலத்தையை நம்வசம் ஆக்கிடுவாள் வாராஹி.
மந்திர சாஸ்திரத்தின் மஹாராணியே வாராஹி மங்கை காளி வாராஹி மங்கள வாழ்வு தந்தருள்வாள் வாராஹி.

மண் செழிக்க விண்நின்று வாராஹியே வந்துதித்தாள்.
நீர் செழிக்க நிலம் செழிக்க மழை பொழிய வைத்திடுவாள்.
மழை பொழிய மண் செழிக்க பயிர்கள் விளைய செய்திடுவாள்.
பயிர் விளைந்து வயிற் நிறைந்து பசி பிணியை போக்கிடுவாள்.
பசி பிணியை போக்கி அவள் உய்ய வழி காட்டிடுவாள்.

உய்ய வழி காட்டி அவள் உயர்வுகளை தந்தருள்வாள்.
உயர்வுகளை தந்து அவள் சுகபோக வாழ்வளிப்பாள்.
வீடு மனை சொத்து சுகம் யாவும் பெற செய்திடுவாள்.
வாராஹியை சரணடைந்தால் வளம் யாவும் பெற்றிடலாம்.

கரும வினைகள் யாவும் களைந்திடுவாள் வாராஹி.
வறுமை என்ற சொல்லை வளமை ஆக்கிடுவாள் வாராஹி. வாராஹி பக்தரிடம் வாதாடாதே என்பர், வாய்மையும் வல்லமையும் தந்து வழக்கில் வென்றிட செய்வாள் வாராஹி. 
விண்ணதிர மண் அதிர வந்துதித்தாள் வாராஹி.

உக்ரகியாய் தன்மதியாய் உளம்குளிர்ந்து காத்தருள்வாள் தயாபரியாய் வாராஹி.
சரணம் சரணம் பஞ்சமி நாயகியே சரணம் பைரவ பத்தினியே சரணம் சேனா நாயகியே சரணம் ஜெகத் ஜோதி ஆனவளே சரணம்.
சரணம் சரணம் உக்ரஹமானவளே சரணம் உயர் பதவிகள் அருள்பவளே சரணம்.

அஞ்சுதல் களைபவளே சரணம் அஞ்சாமை அருள்பவளே சரணம்.
சரணம் சரணம் சுகபோகம் தருபவளே சரணம் நவயோகம் அருள்பவளே சரணம் குலம் தழைக்க செய்பவளே சரணம் தனம் செழிக்க அருள்பவளே சரணம்.
சரணம் சரணம் ஜெகத் ரக்ஷகியே சரணம் ஜெகம் போற்ற செய்பவளே சரணம் வராஹ முகியே சரணம் ஜூவாலாமுகியே சரணம்.

ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், ஆங்காரி சரணம், சரணம் சரணம். வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், சரணம் சரணம் தாயே சரணம் அம்மா.
ஆதி வாராஹி போற்றி அனுக்கிரஹம் புரிவாய் போற்றி அண்ட பேரண்டமே போற்றி ஆரோக்கியம் அளிப்பாய் போற்றி பஞ்சமி நாயகியே போற்றி பிரபஞ்ச ஜோதியே போற்றி

எங்கும் நிறைந்தாய் போற்றி எதிலும் உறைவாய் போற்றி எல்லாமும் ஆனாய் போற்றி எங்களை காப்பாய் வாராஹி தாயே போற்றி.
அஷ்ட புஜங்களை கொண்டவளாய் வீறுகொண்ட பார்வையுடன் அமர்ந்திருக்கும் வாராஹியின் கவசமிதை கேட்டிட அவள் அருள் கிடைக்கும்.

Monday, August 12, 2024

அன்னை பராசக்தி பாடல்| Annai Parasakthi Padal

அன்பே சிவமாய் அமர்வாள் அன்னை பராசக்தி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதி பராசக்தி!
இப்புவி இன்பம் யாவும் அளிப்பாள் அன்னை பராசக்தி!
உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி!


எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி!
ஏகாட்சரமாய் அவனியிலே வந்தாள் ஆதி பராசக்தி!
ஐங்கர நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி!
பொன் சிங்க பீடத்தில் அமர்வாளே அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே உருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
அன்னை பராசக்தி! ஜெய ஜெய மாதா ஆதி பராசக்தி!

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!

Saturday, August 10, 2024

Kaliyaiyum Balikollum Tamil Lyrical

1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும் ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும் கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும் கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும் அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும் குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம் யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும் பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம் உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

15. இருந்த இடத்தில் இருந்த படியே வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும் பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

சரஸ்வதி கவசம் வரிகளுடன்|Saraswati Kavasam Tamil lyrical

கல்வியை வழங்கும் கலைமகள் நீயே கற்றவர் போற்றும் எங்களின் தாயே எண்ணாய் எழுத்தாய் இருப்பவள் நீயே எல்லை இல்லா அழகுடை யாளே
வெள்ளைத் தாமரை வீற்றிருப் பவளே வீணை கையில் வைத்திருப் பவளே கள்ளவர் எவரும் கவர்ந்திட முடியா அறிவுச் செல்வம் அளிப்பவள் நீயே
மனஇருள் நீக்கும் மகத்துவம் நீயே மண்ணும் விண்ணும் போற்றும் தாயே அறிவொளி பரப்பும் அன்னையும் நீயே அகிலம் தழைக்க செய்திடு வாயே
கரங்கள் நான்கு உடையவள் நீயே ஏடும் ஜெப மாலையும் கொண்டு அருளை வழங்கும் அம்பிகை நீயே அபயம் தருவாய் சரஸ்வதி தாயே



அமைதியின் வடிவாய் இருப்பவள் நீயே அடக்கம் பொறுமை கொடுப்பவள் நீயே இமையென எம்மை காப்பவள் நீயே எல்லாம் அறிந்த தேவியும் நீயே
நான்முகன் பிரம்மன் நாயகி நீயே நலமுடன் வளமும் தருபவள் நீயே வேண்டிய வரங்களை வழங்கிடும் தாயே வெற்றிகள் வாழ்வில் நீதரு வாயே
நாவினில் நர்த்தனம் புரிபவள் நீயே நல்லிசை யாக ஒளிப்பவள் நீயே தேவியர் மூவரில் இருப்பவள் நீயே தெள்ளிய ஞானம் தருபவள் நீயே
பாமரன் தன்னை பண்டித னாக்கும் வித்யா வதியே கலகலா வல்லி நாமம் சொல்லி நாளும் பணிய நல்லருள் நீயே புரிந்திடு வாயே
கூத்த னூரில் கொலுவிருப் பவளே கோரிக்கை விரைந்து ஏற்பவன் நீயே மாற்றம் வாழ்வில் தருபவள் நீயே மலரடி பணிவோம் அருளிடு தாயே
அம்பாள் புரிஎனும் அழகிய நாமம் உடையது உந்தன் திருத்தல மாகும் ஹரிநா கேஸ்வரம் என்றொரு பெயரும் உந்தன் ஆலய மற்றொரு பெயரே
உன்னருள் பெற்ற ஒத்தக் கூத்தனை அரசவை புலவனாய் அமர்த்தி மகிழ்ந்த இரண்டாம் ராஜ ராஜன் மன்னன் ஆலயம் தன்னை அளித்தான் பரிசாய்
கூத்தன் தனக்கு பரிசாய் கிடைத்த காரணத் தாலே இந்த ஊருக்கு ஏற்றம் கொடுக்கும் இப்பெயர் நிலைத்து இதயம் குளிரச் செய்வது நிஜமே
கம்பருக் காக நேரில் வந்து கவலை நீக்கிய தாயும் நீயே பிறகும் போதே பேசா திருந்த

பக்தருக் கருளிய தேவியும் நீயே
உந்தன் திருவாய் தனிலே ஊறிய தாம்பூல எச்சிலை உன்னடி யாராம் புருஷோத் தமனின் வாயில் இட்டு பண்டித னாக மாற்றிய தாயே
தேர்வுகள் எழுதும் மாணவ மாணவியர் தத்தம் எழுதுகோலை உன்னடி வைத்து வேண்டுதல் செய்து வணங்கும் போது வெற்றிகள் காண செய்பவள் நீயே
பௌர்ணமி நாளில் அன்னை உனக்கு தேனாபி ஷேகம் செய்திடு வோமே உன்னை நினைத்து மோதிர விரலால் நாவினில் வைக்க அறிவே பெருகும்
ஞானத்தின் உருவாய் நீயிங்கு உறைவதை குறிக்கும் வகையில் ஐந்து எண்ணிக்கையில் விமானக் கலசம் இருப்பது சிறப்பு உன்னருள் இருந்தால் வருமே மதிப்பு
தமிழகம் தனிலே தனியொரு கோயில்

உனக்கென உண்டு உலகோர் தொழவே அமிழ்தாய் இனிக்கும் அருந்தமி ழாலே அம்மா உன்னை வணங்கிடு வோமே
நலம்தரும் நவராத் திரியில் உன்னை நாடே மகிழ்ந்து வணங்கிடும் தாயே குலம்செழித் திடவே குறைவில் லாமல் கொடுப்பாய் நீயே கூரிய அறிவை
வாகீஸ் வரியே வருக வருக

வாழ்வில் நீயே மங்கலம் தருக
சித்ரேஸ் வரியே சீக்கிரம் வருக செய்யும் தொழிலில் உயர்வை தருக
துலஜா தேவி துரிதமாய் வருக துணையாய் இருந்து நல்லருள் புரிக கீர்த்தீஸ் வரியே கேட்டதை தருக கேள்வி ஞானம் பெருகிட செய்க
கடசரஸ் வதியே கடாட்சம் தருக நீல சரஸ்வதி நிதானம் தருக கிளிசரஸ் வதியே கேட்டதை தருக அந்தரிட்ச சரஸ்வதி அருளே புரிக
அறிவுக் கண்ணை திறப்பவள் வருக அமைதி தவழும் முகத்தவள் வருக எதிரியை வீழ்த்தும் ஆற்றல் தருக இணைக்கையில் லாத தேவி வருக
படிக்கும் புத்தகம் உன்திரு வடியில் வைத்தே நாங்கள் வணங்கிடு வோமே மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு நெஞ்சம் உருகிட வேண்டிடு வோமே
கோலம் போட்டு திருவிளக் கேற்றி கோகில வாணி உன்னை பணிவோம் காலம் அறிந்து கருத்தினை உணர்ந்து கருணை காட்டிட நாங்கள் மகிழ்வோம்
ஏழாம் நாளில் எழிலவள் வருக எட்டாம் நாளில் இறைவி வருக ஒன்பதாம் நாளில் நீயே வருக உலகோர் மகிழ உன்னருள் தருக
இல்லம் தோறும் கொலுவைப் போமே இன்னிசை பாடி மகிழ்ந்திடு வோமே சின்னக் குழந்தைகள் பலரும் வரவே அன்னம் சுண்டல் அன்பாய் தருவோம்
ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்து தேவியர் மூவரை வணங்கிடு வோமே திவ்ய தரிசனம் அனைவரும் காண தீபம் ஏற்றி வழிபடு வோமே
வித விதமாக நிவேதனம் செய்து மூன்று சக்தியை போற்றிடு வோமே துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்று தொழுதிடு வோமே துயர்விடுப் போமே
கல்வியி னாலே செல்வம் பெறலாம் செல்வத் தினாலே வீரம் பெறலாம் வீரத்தி னாலே வெற்றியும் பெறலாம்

வாழும் மனிதன் படிப்படி யாக வாழ்வில் உயர உன்பதம் பணிவான் ஓரறி வான செடிகொடி தாவரம் ஒண்ணாம் படியில் இடம்பெற் றிடுமே
ஈரறி வான நத்தை சங்கு இரண்டாம் படியை அலங்கரித் திடுமே மூவறி வான கரையான் எறும்பு மூன்றாம் படியில் முகம்காட் டிடுமே
நாலறி வான நண்டும் வண்டும் நான்காம் படியில் இருந்திடக் காண்போம் ஐந்தறி வான கால்நடை யாவும் ஐந்தாம் படியில் அமர்த்திவைப் போமே
ஆறறி வான மனிதர்கள் உருவை ஆறாம் படியில் வைத்திடு வோமே ஏழாம் படியில் முனிகளும் ரிஷிகளும்
இடம்பெற் றிடுவார் என்பதை அறிவோம்
எட்டாம் படியில் தேவர்கள் உருவில்

பொம்மைகள் வைத்து வணங்கிடு வோமே ஒன்பதாம் படியில் தெய்வ சொரூபம் சிறப்புடன் வைத்து வழிபடு வோமே
நித்தம் உந்தன் நிழலே காக்க நினைத்திருப் போரை நின்னருள் காக்க புத்தக வடிவே புகழினை காக்க பொன்னும் பொருளும் வழங்கியே காக்க
அன்னத்தின் மீது அமர்ந்தே காக்க அம்ச வல்லியே எங்களை காக்க எண்ணம் முழுதும் நீயே காக்க ஏழ்மை விரட்டி என்றும் காக்க
ஞான சரஸ்வதி தாயே காக்க நல்லருள் நீயும் புரிந்தே காக்க கான சரஸ்வதி கல்யாணி காக்க கைதொழு வோரை கலைவாணி காக்க
வெண்பட் டாடை தரித்தவள் காக்க வேதம் நான்கும் அறிந்தவள் காக்க எண்திசை வணங்கும் தேவி காக்க இம்மையும் மறுமையும் இனிதே காக்க
கல்லா தொருவன் இல்லா திருக்க கலைமகள் நீயே அருளிடு வாயே எல்லா புகழும் உனக்கே என்று எங்கள் இதயம் சொல்லிடும் தாயே
கம்பனைத் தந்து காப்பியம் தந்து கன்னித் தமிழை உயரவைத் தாயே எம்பெரு மானாம் இராமன் புகழை வையகம் அறிய வரமளித் தாயே
வள்ளுவன் படைத்த திருக்குறள் மூலம் வாழ்வின் நெறிமுறை அறிய வைத்தாயே தெள்ளு தமிழிலே தெளிந்த நடையிலே உள்ளம் உணர பாடவைத் தாரே
இளங்கோ வடிகளின் சிலப்பதி காரம் பன்னூ றாண்டு நிலைத்தே வாழும் பாரதி என்றொரு மாகவி படைத்த பிரம்ம தேவியே உன்தாள் சரணம்
கலைமகள் பலவும் பயின்றிட நீயும் கடைக்கண் ணாலே அருளிடு வாயே இயலிசை நாடகம் என்றும் வளர இனிதாய் நீயே வரம்தரு வாயே
கவிதை ஓவியம் நடனம் சமையல் மேடை பேச்சும் இன்னிசை பாட்டும் தோட்டம் அமைத்தல் வண்ணப் பூச்சு நெசவு நீச்சல் இன்னும் பலவும்
வித்தைகள் அறிந்து வெற்றியை அடைந்து உத்தமனாக உலகில் வாழ்ந்து இனியதை பேசி இதயம் கவர்ந்து என்றும் வாழ்ந்திட நீயருள் வாயே
கற்றவர் சொல்லும் நல்லுரை கேட்டு களங்கம் இல்லா வாழ்க்கை ஏற்று மற்றவர் நம்மை மதித்திடும் வண்ணம் மானுடம் வாழ வரமருள் தாயே
இருளும் ஒளியும் இருக்கும் உலகில் எதன்வழி செல்வது என்பதை அறிந்து கருணை இரக்கம் அணிகலன் புனைந்து தினம்தினம் வாழ திருவருள் வேண்டும்
போர்க்களம் தனிலே போரிடும் வீரனின் உயிரைக் காக்கும் கவசம் போலே தேகம் நலமுடன் நாளும் திகழ தேவி நீயும் அருள்வாய் எமக்கு
தலைமுதல் கால்வரை எல்லா உறுப்பும் தடையற செயல்பட நீயே பொறுப்பு பிணிகள் எம்மை தொடரா திருக்க பேரருள் நீயே செய்வாய் தாயே
அலைமகள் கலைமகள் மலைமகள் என்று ஆயிரம் வடிவில் திகழும் சக்தி பிழைகளை பொறுத்து நேர்வழி காட்டி பிறந்ததின் பலனை தருவாய் நீயே
உன்புகழ் பாடும் அடியார்க் கெல்லாம் உள்ளம் மகிழ நலம்புரி வாயே வந்தனம் சொல்லி வாழ்த்துக்கள் பாடி வளமுடன் வாழ உனையே பணிவோம்
வாசலில் மாவிலை தோரணம் கட்டி கோலம் போட்டு தீபம் ஏற்றி வாழை இலையில் படையல் போட்டு வணங்கிடு வோமே தாயே உன்னை
தொழில்துறை சாதனம் எதுவா னாலும் தூய்மை செய்து திலகம் இட்டு

உன்னெதிர் வைத்து இருகரம் குவித்து உள்ளன் போடு வணங்கிடு வோமே
சர்க்கரை பொங்கல் புளியோ தரையும் எலுமிச்சை சாதம் சுண்டலும் வைத்து அக்கறை யுடனே எங்களை காக்க அன்னை உன்னை வேண்டிடு வோமே
வெண்தா மரையும் ரோஜா மலரும் செம்பருத்தி பூவும் தொடுத்து மாலை அன்பாய் உனக்கு சூட்டிடு வோமே
அருள்மழை பொழிய வேண்டிடு வோமே
எல்லா உயிரும் இன்புற் றிருக்க

நல்லோர் துணையும் நாளும் கிடைக்க வல்லமை யான விதியினை தகர்க்க வரமருள் வாயே சரஸ்வதி தாயே
இசையது மீட்கும் இறைவி போற்றி இகபர சுகம்தரும் தேவி போற்றி அசைவதை அறியும் ஆற்றலை கொடுத்து அரவணைப் பாயே அனுதினம் நீயே
தெளிவுடன் திகழும் நதியே வாழ்க திருவடி பணிந்தோம் தேவி வாழ்க குலமது செழிக்க அருள்வாய் வாழ்க திறமைகள் வளர செய்வாய் வாழ்க
சரஸ்வதி தேவி பாதமே சரணம் சகலகலா வல்லியே என்றும் சரணம் சரணம் சரணம் நீயே சரணம்
அலைமகள் அனுதினம் அருள்வாய் சரணம்

நாராயணீயம் (தமிழ் அர்த்தம் வரிகளுடன்)| Narayaneeyam (Tamil Translation Lyrical )

1.நாராயண நாராயண நாராயண பாஹிமாம் நாராயணீயத்தின் வளர் நாயகனே ரக்ஷமாம். 
2. குவலயத்தோர் உய்யவே குருவாதபுரத்திலே
குருவும் வாயுவும் தேட குழந்தையாய் வந்தவா. 


3. பதும கல்ப யுகத்திலே பரசுராம ஸ்தலத்திலே பாங்குமிகு சித்திகளை பக்தர்களுக்களித்தவா.
4. பூவில் உறை பிரமனின் புண்ணிய தவத்தினால் ஏழு இரு உலகமாய் இறை உருவைக் காட்டினாய். 
5. சனகமுனி சாபம் தீர ஜய விஜய பக்தரை, அனுக்ரஹம் செய்திடவே அவதாரம் எடுத்தவா.
6. பூபாரம் குறைந்திட, பூமகளைக் காத்திட, இரண்யாட்சகன் ஜெயனைக் கொன்ற ஸ்ரீவராக மூர்த்தியே.
7. ஆத்மபோதம் சொல்லியே அன்னைதுயர் தீர்த்தவா, தேவகி மைந்தனே கபில முனித்தெய்வமே. 
8. பால் வடியும் வயதிலே, பக்தியுடன் அழைக்கவே, பாலன்அந்தத் துருவனை பாய்ந்து ஓடிக் காத்தவா. 
9.நரனே, நாராயணா ப்ருகு முனியாய் தோன்றினாய் ப்ராசேத மைந்தர்களால் ருத்ர கீதம் அருளினாய்.
10. ரிஷப தேவனாய்த் தோன்றி பருவமழை பெய்தனை, ரிஷிகள் ஒன்பவர் மூலம் பக்தி நிலை தந்தனை.
11.பரத மைந்தனின் பேரில் பாரதமும் தோன்றவே, இளவரத நாடிதிலே எல்லைத் தெய்வமாகினாய்.
12.நரக வேதனை தீர மூன்று காலத் தியானத்தை, நல்மக்கள் அறிந்திடவே மகரமாய்த் தோன்றினாய்.
13. அந்திமத்தில் அழைத்த அந்த அஜாமிளனுக்கு அருளினாய் ஐய நிந்தன் நாமமே உய்யும் வழி சேர்க்குமே. 
14. தக்ஷனவர் பேரனாம் விஸ்வரூபன் மூலமாய், நாராயணக் கவசமீந்து தேவலோகம் காத்தவா. 
15. சித்ரகேது புத்ரனால் ஆத்மபோதம் தந்தவா, மித்ரபாவம் காட்டியே மருட்கணத்தைப் பெற்றவா.
16. இரண்யாட்சகன் இளவலாம் கசிபுவின் இடம்பம் தன்னை கிழித்தெறிந்த நரசிம்ம மூர்த்தியே.
17. ஸ்ரவணத்தோடு கீர்த்தனம், ஸ்மரணமோடு சேவனம், தாஸ்யமோடு ஸக்யமும் ஜீவனின் சமர்ப்பணம். 
18. முக்தி தரும் குணமெலாம் முழுமையாகப் பெற்றதால்,பக்தி செய்த ப்ரஹலாதனைப் பாதுகாத்து நின்றவா.
19. ஆதிமூலம் என்றழைத்த கஜேந்திரனைக்
காத்தவா,கட்டுப்பட்டாய், பக்திக்கென்று பலச்ருதிகள் சொன்னவா.
20.பலப்பரீட்க்ஷை செய்த பாழும் அசுரர்களும் மாயவே, கடையும்போது பாற்கடலில் கூர்ம வடிவம் எடுத்தனை.
21. திரவியங்கள் வந்ததெல்லாம் தேவர்களுக்களித்தனை, திருமகளை மணந்து நீயும் திவ்யஜோதி ஆகினை.
22 போகமதுவை பங்கிடவே மோகமாது ஆகினாய், மோனத்தவமுனிவன் அந்த சிவன் மனத்தை மயக்கினாய். 
23. விண்ணும் மண்ணும் அளக்கவே வாமனனாய்த்
தோன்றினாய், பண்புமிகு பலியைக் காத்த பரந்தாமன் ஆகினாய்.
24. வேதமதைக் காக்கவே மீன் வடிவமாகினாய், வேதமகன் சத்தியனை வைஸ்வதனாக் கினாய். 
25. துவாதசியாம் நாளதிலே துர்வாச முனிவரைத் துரத்தியே கை ஆயுதத்தால் அம்பரீக்ஷைக் காத்தவா.
26. தேவர் குறை தீரவே, தந்தை சொல்லும் காக்கவே, தேவி மூலம் ராமா நீ ராவணனை அழித்தனை.
27. அருமைத் தந்தை மகிழவே, பரசுராமன் ஆகினாய், அன்னைப்பழியைத் தீர்த்தனை, அரசகுலம் மாய்த்தனை.
28. கம்ஸனை வதைக்க வந்த தேவகியின் மைந்தனே, கர்கமுனி ஆசியினால் பெற்ற பெயர் கிருஷ்ணனே.
29. யசோதையின் மைந்தனாய் கோகுலத்தில் வளர்ந்தனை, பாலலீலை பல புரிந்த நந்தகோப கண்ணனே.
30. வெண்ணையோடு ஐய எங்கள் உள்ளமதைத் திருடினாய், மண்ணைத்தின்று சிறுவாயில் பேருலகம் காட்டினாய். 
31. தாயும் உன்னை உரலில் கட்ட தாமோதரன் ஆகினை, தன்னையொத்த சிறுவரொடு வனபோஜனம் செய்தனை.
32. பிரமனின் தலைக்கனத்தை சிலகணத்தில் போக்கினாய், காளிங்கன்தனை அடக்கி தாண்டவமே ஆடினாய். 
33. பாலருந்தும் வேளையிலே பூதனையை மாய்த்தனை பலராமனாக நின்று ப்ராலம்பனை வதைத்தனை.
34. கோபியர் மனம் மகிழ வேணுகானம் இசைத்தவா, கோகுலத்தில் செய்ததெல்லாம் ராச லீலை அல்லவா.
35. வருணமழை பெய்த அந்த இந்திரனும் அடங்கவே வைத்துக் கொண்டாய் சிறு விரலில் கோவர்த்தன கிரியதை.
36. கோபம் தீர்ந்து இந்திரனார் கூவி நின்ற நாமமே கோகுலத்து குறை தீர்க்கும் கோவிந்தன் நாமமே.
37. அக்ரூரர் அழைத்து வர அன்னை ஊரைக் கண்டனை, அம்மானை வதைத்து நீயும் அதர்மத்தை அழித்தனை. 
38. உருகி நிற்கும் கோபியர்தம் உயர்பக்தி காட்டவே,
உத்தவரை தூதுவிட்ட உத்தமனாய் நின்றனை.
39. ஆயக்கலை அறியச் செய்த அருமுனியும் மகிழவே, அவர் மகனை உயிர்மீட்டு குரு வணக்கம் செய்தனை
40. பல தடவை படையெடுத்த ஜராசந்தன் ஒடுங்கவே பாங்குடைய பட்டினமாம் துவாரகையைத் தோற்றினாய்.
41. புவன சுந்தரா நீயும் புரிந்துகொண்ட காதலால், சிறையெடுத்து ருக்மிணியை சீக்கிரமாய் மணந்தனை.
42. சத்ராஜித்தில் மணியைப் பெற சாகசமும் செய்தனை, நித்யஜோதி நீயும் கூட உலகப் பழி உண்டனை. 
43. பாமாவுடன் தேவி பலரை பாந்தமுடன் மணந்தனை, பேதைமகள் ராதையை நீ பரிதவிக்க செய்தனை.
44. பலியின் பேரனாம் அந்த பாணனை அழிக்கவே, கிலிபிடிக்கச் செய்துவிட்டாய் சிவபெருமான் தன்னையே. 
45. பாண்டவர்கள் ஐவருக்கு பாந்தமுள்ள தோழனே பாஞ்சாலி மானம் காக்க துகில் கொடுத்த தெய்வமே. 
46. ராஜசூய யாகமதில் கடிய மொழி கேட்டு நீ, சிசுபாலன் சிரமரிந்த சீர்பெருமாள் அல்லவோ.
47. போர்க்களத்தில் பார்த்தனுக்கு ஊக்கநிலை தந்தவா, கீதையென்ற சாகரத்தின் தத்துவத்தை சொன்னவா. 
48. கர்மயோகம், ஞானயோகம், பக்தியோக நிலைகளாய், விஸ்வரூபம் காட்டி நின்ற தேவயோகி அல்லவா.
49. உன்னிடத்தில் அன்பு வைத்தால் உன் மனவை தானவள், உடன் வருவாள் என்றறிய குசேலரைக் காட்டினாய்.
50. அந்தணசிசுக்களை அர்ச்சுனருக்கு மறைத்து நீ, அவனகந்தை அடக்கிவிட்ட சந்தான கிருஷ்ணனே.
51. மாயப்பிடியில் சிக்கிவிட்ட மார்க்கண்டன் உணரவே மாலவனே உன்னுருவை ஆலிலையில் காட்டினாய்.
52. பக்தியென்ற கயிற்றினால் பக்தன் உன்னைக் கட்டினால முக்திநிலை தந்துநிற்கும் மூலவனே முகுந்தனே.
53. எட்டுவித நிலைகளால் உனை நினைக்கும்போதிலே, ஏற்படாது கலியில் துயர் என்று அருளி நின்றவா.
54. பிறப்பு, இறப்பு பிடிப்பிலே பரிதவிக்கும் உயிர்களை பிறவாமல் செய்திட பக்தி ஒன்று போதுமே. 
55. பாகவத சாரத்தை பாக்களில் அருளவே, பட்டத்ரியின் ரோகம் நீக்கி பரஉருவைக் காட்டினாய்.
56. மயில்பீலி அழகுடன் மணிரத்ன மகுடமும், ஒயில் கொஞ்சும் வதனமும், அணி செய்யும் திலகமும்
57. சுருள் கொண்ட கேசமும், சொக்க வைக்கும் நாசியும், மருண்ட விழிக்கருணையும், மகரத்தினால் குண்டலமும்
58. பவழ இதழின் உட்புறம் மின்னலெனப் பற்களும், பதுமராக சிலையென பளபளக்கும் கன்னமும்
59. கரமதிலே கோதண்டம், கமலத்தோடு மறுகரம் பாஞ்சசங்கம், சக்கரம் பாந்தமாக இருபுறம் 
60. தோள்வளையும், ஹாரமும், தொங்கும் கழுத்தில் கெளஸ்துபம், தோன்றிவிட்ட உயிர்களைத் தாங்கும் உந்தன் தேகமும்.
61. அகிலமனைத்தும் அடக்கிய சிறுவயிறும், நாபியும், அம்பரமோ மஞ்சளாம், நீலவண்ணம் உன் நிறம். 
62. தேவர்களும், தானவரும் துதிக்கும் உந்தன் கால்களும், மாதவத்தார் பணிந்திடவே கூர்ம வடிவபாதமும் 
63. வக்ஷஸ்தல வாசினியாம் லட்சுமியும் மகிழவே, இச்சையுடன் எங்கள் முன்னே எழுந்தருள வேண்டுமே. 
64. பல தடவை கூறினார் பட்டத்ரியும் பாக்களில், பகவானின் பாதமே மோட்ச நிலை சேர்க்குமே. 
65. யோகியர் மனம் கூட மோகம் கொள்ளும் பாதமே போகநிலை வேண்டுவோர்க்கு கல்பக விருட்சமே. 
66. சித்திபெற்ற முனிவர்கட்கு முக்திதரும் பாதமே, பக்தி செய்த பட்டத்ரியின் இதயவீடு ஆகுமே.
67. அறியாமை காரணத்தால் பிழைகள் செய்யும் எங்களை, அன்னையாக அரவணைத்து ஆட்கொள்ளும் பாதமே
68. நாராயண நின்நாமம் பாராயணம் செய்யவே, நாராயண கவி அளித்த நல்லமுதம் வாழ்கவே.

நாராயண நாராயண நாராயண பாஹிமாம்,
நாராயணீயத்தின் வளர் நாயகனே ரக்ஷமாம்.

மகாலட்சுமி கவசம் வரிகளுடன்|Mahalakshmi Kavasam Tamil

செல்வம் வழங்கி இல்லம் தழைக்க செய்யும் எங்கள் லக்ஷ்மி தேவி நல்லோர் கையில் நாளும் சேர்ந்து நன்மை அளிக்கும் தாயும் நீயே



அளவிட முடியா அழகுடையாளே அடியவர்க்கென்றும் அருள்வாய் நீயே வளமுடன் நாங்கள் வாழ்ந்திட நீயே வரம் தர வேண்டும் அலைமகள் தாயே
தேவர்கள் அடைந்த இன்னல் விலக பாற்கடல் தன்னில் அவதரித்தாயே தூயவர் நெஞ்சில் குடியிருப்பவளே தொழுதிடுவோமே உன் மலர் பதமே
அல்லும் பகலும் உழைப்பவர் உயர ஆனந்த வாழ்வு பூமியில் மலர
தொல்லை துயரம் இருளென விலக திருமகள் தாயே நீயே அருள்க
குறுநகை பூக்கும் குடும்பத்தின் விளக்கே குறையில்லாத குன்றா அழகே நறுமலர் சூடிய நாயகி நீயே நலம் தரும் உன்னை வணங்கிடுவோமே
செந்நிறத் தாமரை பூவினில் அமர்ந்து செழிப்புடன் ஜகத்தை வைத்திருப்பவளே உன் தாள் பணிந்தால் ஊழ்வினை இல்லை உன்திருவருளே உயர்வின் எல்லை
அழகிய திருமால் மார்பினில் உறையும் அன்னையும் நீயே அருள் புரிவாயே மெழுகாய் உருகும் மனமுடையாளே மேன்மைகள் யாவும் நீயருள்வாயே
கரங்கள் நான்கு உடையவள் நீயே கருணை இதயம் கொண்டவள் நீயே வறுமை நீக்கும் வள்ளலும் நீயே வழிபடுவோமே அனுதினம் உன்னை
ராஜலக்ஷ்மி வடிவம் கொண்டு ராஜ்யம் எமக்கு அருள்பவள் நீயே தீபலக்ஷ்மி கோலம் கொண்டு தீவினை போக்கும் தெய்வமும் நீயே
சாந்தலக்ஷ்மி உருவினில் நீயே சாந்தி தந்து அருள் செய்வாயே ஆதிலக்ஷ்மி தோற்றம் கொண்டு அகிலம் ஏழும் காப்பவள் நீயே
வீரலக்ஷ்மி தரிசனம் தந்து வெற்றிக்கு வழியைக் காட்டிடுவாயே கிரகலக்ஷ்மி பெயரினைத் தாங்கி மனைகள் தோறும் தங்கிடுவாயே
வித்யாலக்ஷ்மி நீயே அன்றோ வித்தைகள் பயில செய்திடுவாயே விஜயலக்ஷ்மி வடிவாய் வந்து எதிலும் ஜெயமே விளைந்திடச் செய்வாய்
தான்யலக்ஷ்மி வடிவாய் நின்று பஞ்சம் பசியைப் போக்கிடும் தாயே தனம் தரும் லக்ஷ்மி வடிவம் நீயே தரணியை செழிக்க வைத்திடுவாயே
சௌந்தர்யலக்ஷ்மி உருவினில் நீயே பேரழகுடனே ஜொலிப்பவள் நீயே சௌபாக்யவதியாய் என்றும் எமக்கு சகல நலன்களும் நீ தருவாயே
நரசிம்மரோடு ஒன்றாய் இணைந்து லக்ஷ்மி நரசிம்மர் நாமம் பெற்றாய் திருவடி பணியும் பக்தருக்கெல்லாம் குறையா செல்வம் தருகின்றாயே
திரு எனும் நாமம் உனக்கே பொருந்தும் உன்னுடன் மாலவன் ஒன்றாய் சேர திருமால் என்றே அழைத்தடலானார் நிறைவுடன் வாழ நீயருள்வாயே
அழகுடன் தைரியம் அமைந்திடும் இடத்தில்

அம்மா நீயும் ஆட்சி செய்வாயே அடக்கமும் பக்தியும் நிறைந்தவர் நெஞ்சில் நீங்காதென்றும் நீயிருப்பாயே
காலம் தன்னை கண்ணாய் நினைப்போர் கடமை செய்வதை பொன்னாய் மதிப்போர் ஞாலம் தனிலே சிறப்புகள் காண நாளும் நீயே வரமருள்வாயே
ஐம்புலன் தன்னை அடக்கிடுவோரை அன்னை நீயும் அரவணைப்பாயே த்யானம் செய்வோர் வேதம் படிப்போர் யாவரும் மகிழ ஆதரிப்பாயே
கணவனை மதிக்கும் குலமகள் வாழும் குடிசையில் நீயும் கொலுவிருப்பாயே பெரியவர் தம்மை துதிக்கும் நெஞ்சில் பிரியாதென்றும் நிறைந்திருப்பாயே
சந்தனம் குங்குமம் இவற்றுடன் நீயே ஒன்றென கலந்து உறைந்திருப்பாயே வந்தனம் செய்து வழிபடுவோரை வழி வழியாக வாழவைப்பாயே
வாசனை மிகுந்த மலர்களை சூடி தலைமுடி கலையாதிருப்போர் இடத்தும் நேசம் கொண்டு நீயிருப்பாயே நெஞ்சம் மகிழ்ந்து நீயருள்வாயே
திருமகள் உந்தன் அருளினை பெறவே தினமும் உன்னை வணங்கிடுவோமே எங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிலையாய் இருக்க வேண்டிடுவோமே
ஸ்ரீ சூக்தம் என்னும் வேள்வி செய்து அன்னை உன்னை மகிழ்விப்போமே கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி கனிந்தருள் செய்ய கைதொழுவோமே
வில்வ மரத்தின் கீழே அமர்ந்து ஹயக்ரீவ மந்த்ரம் உச்சரிப்போமே செல்வம் செழிக்க எம் குலம் தழைக்க திருவடி பணிந்து வணங்கிடுவோமே
சம்பத் கௌரி விரதம் இருந்து சௌபாக்யம் உன்னால் பெற்றிடுவோமே மங்கள கௌரி விரதமிருந்து மலைபோல் நவநிதி அடைந்திடுவோமே
விருத்த கௌரி விரதம் இருந்து வேண்டிய செல்வம் பெற்றிடுவோமே கஜ கௌரி விரதம் கடைபிடித்தாலே கவலை நீக்கி நீயருள்வாயே
லலிதா கௌரி விரதம் இருந்து கோரிக்கை பலவும் உன்னிடம் வைப்போம் துளசி கௌரி விரதம் இருந்து துயரம் விலகி வளம் பெறுவோமே
கேதாரி விரதம் இருந்தால் நீயும் கேட்டதை எமக்கு அன்புடன் தருவாய் பத்ரி கௌரி விரதம் இருந்தால் பக்தரைத் தேடி நீயே வருவாய்
சௌபாக்ய கௌரி லாவண்ய கௌரி சம்பா கௌரி விரதம் இருப்போம் சகல நலன்களும் உன்னால் அடைவோம்
வரலக்ஷ்மி விரதம் நாங்கள் இருந்து உன்னை வணங்கி வளமை பெறுவோம் நிரந்தரமாக எங்கள் நெஞ்சில் நீயும் தங்கிட உன்னைப் பணிவோம்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமை தோறும் உன் பெயர் சொல்லி விரதமிருந்தால் ஒப்பில்லாத செல்வம் தந்து உலகில் எம்மை உயர்த்திடுவாயே
காலையில் எழுந்து வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு உந்தன் நாமம் சொல்லிய படியே திருவிளக்கேற்றி கை குவிப்போமே
புத்தம் புதிய பூக்களினாலே அம்மா உன்னை பூஜிப்போமே சித்தம் குளிர்ந்து நீயும் மகிழ்ந்து சேயாம் எமக்கு அருள்புரிவாயே
சர்க்கரை பொங்கல் வடையுடன் உனக்கு பாயசம் வைத்து படையல் போட்டு அக்கறையுடனே எங்களை காக்க அன்னலக்ஷ்மி உனை வணங்கிடுவோமே
கிழக்கினை பார்த்து உணவு உண்ணும் வழக்கம் இருந்தால் உனக்கது பிடிக்கும் மஞ்சள் பூசி குங்குமம் இட்ட மங்கையர் வடிவாய் நீயே இருப்பாய்
பூவும் போட்டும் சூடிய மாதர் புன்னகை தவழ வலம்வரும் வீட்டில் கேட்கும் வரங்கள் எளிதாய் கிடைக்கும் திருமகள் உந்தன் அருளே நிலைக்கும்
நயமுடன் பேசும் நல்லோர் வாக்கில் நாயகி நீயே குடியிருப்பாயே வன்சொல் விடுத்து இன்சொல் பேச வாழ்வில் ஆயிரம் வளம் தருவாயே
அன்றாடம் தனது கடமை தன்னை குறையில்லாமல் செய்பவர் இடத்தில் அன்போடு நீயும் தங்கிடுவாயே வேண்டிய செல்வம் வழங்கிடும் தாயே
மனிதனுக்குரிய வாழ்நாள் கடமை பற்பல உண்டு என்பதை அறிவோம் இன்றியமையா ஐந்தினை இங்கே நெஞ்சினில் நிறுத்தி நினைவினில் கொள்வோம்
இறைவன் திருவடி சேர்ந்தவர் தம்மை மறவாது தினமும் வணங்குதல் வேண்டும் இஷ்ட தெய்வம் மகிழ்ந்திடும் வண்ணம் பூஜைகள் செய்து பணிந்திட வேண்டும்
உறவுகள் தம்மை அரவணைத்திடவும் உளம் கோணாமல் உரையாடிடவும் மறவாதிருக்கும் அடியார் வீட்டில் மஹாலக்ஷ்மி தான் தங்கிடுவாளே
சுற்றம் தன்னை பேணிடவேண்டும் நெறிதவறாமல் தன்னையும் காத்து பற்றுதலோடு இருப்பவர் தன்னை பாக்யலக்ஷ்மி தான் விரும்பிடுவாளே
பூமியில் நீயும் தங்கிட தானே திருத்தலம் ஒன்றை தேர்ந்தெடுத்தாயே திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உண்டு உந்தன் கோவில்
திருவெள்ளறை எனும் நாமம் கொண்டு வருவோர்க்கெல்லாம் அருள்வாய் நீயே மூலவர் இங்கே செந்தாமரைக் கண்ணன் முகமலர்ந்திங்கே வீற்றிருப்பாரே
செண்பகவல்லி பங்கஜவல்லி தாயார் இருவர் தயை புரிவாரே அன்பரின் வாழ்வில் அல்லல் விலக ஆலயம் வந்து உன்னை தொழுவார்
கோவில் நிலத்தின் பத்திரம் கூட தாயே உந்தன் பெயரில் தானே உற்சவம் பூஜை திருவீதி உலா எதிலும் உனக்கே முதலிடம் இங்கே
பிறவியின் பயனை பெற்றிடத் தானே ஒருமுறையேனும் உன் தலம் வருவோம் கருணை வடிவாய் உன் முகம் கண்டு கவலை நீங்கி களிப்பினைப் பெறுவோம்
தேவரும் அசுரரும் அமிர்தம் பெறவே பாற்கடல் தன்னை கடைந்திடலானார் மத்தாயிருந்த மந்தர மலையோ நிலைகொள்ளாமல் தத்தளித்ததுவே
இதனைக் கண்ட நாராயணனும்
கூர்மவதாரம் எடுத்திடலானார்
கடலின் உள்ளே ஆழம் சென்று தோளில் தாங்கி நிலைபெறச் செய்தார்
அப்போது அங்கே தாமரை மலரில் அம்மா நீயும் அவதரித்தாயே திருப்பாற்கடலில் விலகிடும் இடத்தில் ஸ்ரீஹரி விஷ்ணு மறைந்திடலானார்
அவரைத் தேடி அன்னை நீயும் அங்கு சென்றாயே அன்புடன் தானே இருவரும் அங்கே திருவிளையாடல் புரிந்தீரன்றோ அடியார் வியக்க
அங்கும் இங்கும் இருவரும் ஒடி ஆடல் புரிந்த காரணத்தாலே தீவினில் உள்ள எள் செடியாவும் எள்ளை உதிர்த்து எண்ணெய் ஆக்கின
திலம் எனச் சொன்னால் எள் என்றாகும் அதனால் தானே தீவின் பெயரே திலத்தீபமென்றே ஆனது இன்று முன்னோர் சொன்ன கதை பல உண்டு
இறுதியில் நீயே மாலவன் தனக்கு மாலை சூட்டி மனம் புரிந்தாயே அதுவே இன்றைய தீபாவளியென ஆன்றோர் எமக்கு எடுத்துரைத்தாரே
எள்ளால் விளைந்த எண்ணெய் நதியில் இருவரும் நீராடி கழித்ததாலே மானிடர் நாங்கள் நல்லெண்ணெய் தேய்த்து மகிழ்ந்தே குளித்து கொண்டாடுவோமே
புத்தம் புதிய ஆடை உடுத்தி ஸ்ரீதேவி உந்தன் திருவடி பணிவோம் தொட்டது துலங்க நீயருள்வாயே தொடர்கதையாக வளம் தருவாயே
லக்ஷ்மி தேவி அம்மா வருக லட்சியம் அடையத் துணையாய் வருக
அஷ்ட ரூபிணி இணைந்தே வருக அழகின் உருவே அன்பாய் வருக
உடல் பிணி கவலை யாவும் தடுத்து கவசம் போலே எம்மை காக்க தடைகளை அகற்றி தைரியம் தந்து நலமுடன் எங்களை நீயே காக்க
உன் திருவடியே உதவும் சரணம் உலகோர் போற்றும் திருமகள் சரணம் பொன்னும் பொருளும் குவிப்பாய் சரணம் பொன்மலர் பாதம் பணிந்தோம் சரணம்

சிக்ஷாஷ்டகம் தமிழ் வரிகளுடன்|Sikshashtaka Tamil

1. ஸ்ரீகிருஷ்ணநாம சங்கீர்த்தனத்திற்கு எல்லா வெற்றியும் உரித்தாகட்டும். இது காலம் காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள மாசுக்களை நீக்கி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு இறப்பு என்ற தீயை அணைக்கிறது. நிலவு தன் ஒளியால் குளிர்ச்சியை கொடுப்பது போல, இந்த ஸங்கீர்த்தனமானது மனித இனத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு வித்திடுகிறது. பேரானந்த கடலை பெருக வைக்கிறது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமிர்த்தை முழுமையாக சுவைக்கச் செய்கிறது



2. எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகும். இவ்வாறாக கிருஷ்ணா, கோவிந்தா என ஆயிரக்கணக்கான உடையவராயிருக்கிறீர். தெய்வீக நாமங்களில் தெய்வீக சக்தியை இருக்கிறீர்கள். இந்த நாமங்களை இத்தகைய உம்முடைய உள்ளடக்கி நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனை எதுவும் இல்லை. உம்முடைய கருணையினால், உம்முடைய தெய்வீகநாமங்களினால், நாங்கள் சுலபமாக உம்மை அடைந்துவிட முடியும். ஆனால் இத்தகைய நாமங்களில் சுவையற்ற நான் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன். மிகவும்

3. பகவானின் புனித நாமத்தை ஜெபிக்கும் ஒருவர் தாழ்வான மனநிலையில் இருக்க வேண்டும். புல்லைக் காட்டிலும் பணிவாக இருக்க வேண்டும். மரத்தை விடப் பொறுமையாக இருக்க வேண்டும். தனக்கென்று எந்த மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது.பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலையில் ஒருவர் பகவானின் புனித நாமத்தை இடைவிடாமல் உச்சரிக்க முடியும்.

4. எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்கும் விருப்பம் இல்லை. அழகிய பெண்களை விரும்பவில்லை, என்னை பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம், ஒவ்வொரு பிறவியிலும் உமக்கு ஆற்றும் உள்நோக்கமற்ற பக்தி சேவையை மட்டுமே நான் வேண்டுகின்றேன்.

5. நந்த மஹாராஜாவின் புதல்வனே (கிருஷ்ணா), நான் உனது நிரந்தர சேவகன், எவ்வாறோ நான் பிறப்பு, இறப்பு என்ற கடலில் விழுந்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்த கடலில் இருந்து கை தூக்கிக் காப்பாற்றி, உங்களுடைய தாமரைப் பாதங்களில் ஒரு தூசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

6. எம்பெருமானே, தங்கள் புனித நாமத்தை ஜபிக்கும் போது, என் கண்களில் பக்திப் பரவசத்தால் ஆனந்த கண்ணீர் பெருகுவது எப்பொழுது? மேலும் எப்பொழுது எனது குரல் தழுதழுத்து, மயிர்க் கூச்செறிந்து உமது நாமத்தை நான் ஜபிக்கப் போகிறேன்?

7. ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவினால், ஒரு நொடிப் பொழுதையும், பல யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. நீங்கள் இல்லாமல் அனைத்து உலகத்தையும் வெற்றிடமாக நான் உணர்கிறேன்.

8. கிருஷ்ணரை தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். அவர் என்னை முரட்டுத்தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாமல் என் இதயத்தை பிளக்கச் செய்தாலும் அவரே என் பிரபுவாவார், என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ள அவருக்கு முழுஉரிமை உண்டு. ஏனென்றால் எவ்வித நிபந்தனையும் இன்றி, அவர் எப்பொழுதும் எனது வழிபாட்டிற்குரிய பகவானே ஆவார்.

மிட்டாய் இருக்குது, மிட்டாய் இருக்குது

மிட்டாய் இருக்குது, மிட்டாய் இருக்குது 
வாங்கும் பக்தர்களே மிட்டாய் இருக்குது
மிக நேர்த்தியாக விட்டால் வராத மிட்டாய்
 
ஆத்ம மிட்டாய் இது ஜெகந்தனிலே மிக அருமையான மிட்டாய்
பரமாத்மா எனும் பதத்தினால் செய்த பக்தர்கள் தின்னும் மிட்டாய்



சுருக்கமாகலே இரண்டெழுத்துள்ள சூட்மமானமிட்டாய் வருத்தமின்றி தொண்டர்கள் வகையாகவே பாடும் ராமநாம மிட்டாய்.

ஆதியில் அயனுக்காக மச்சவதாரம் வகித்ததும் இந்த மிட்டாய். 
தேவர்களுக்காக கிரியை தாங்க கூர்மமான மிட்டாய்.

ஹிரண்யாதனை கொல்ல வராக வதாரம் வகித்ததும் இந்த மிட்டாய். பிரஹலாதனுக்காக தூணில் நின்றும் வந்த நரசிம்ம நாம‌ மிட்டாய்.

மஹாபலியின் மமதை அடக்க வாமனமான மிட்டாய் கார்த்தவீர்யனின் கர்வத்தை அடக்கிய பரசுராமமிட்டாய்.

ராவணனை கொல்ல அவதரம் செய்த கோதண்டராம மிட்டாய்.
கம்ஸனை கொல்ல அவதாரம் செய்த பால் கோபால் மிட்டாய்.

கண்ணணுக்கண்ணனாய் அவதாரம் செய்த பலராம மிட்டாய். 
கலியுகந்தன்னில் கண் கண்ட தெய்வம் ஸ்கந்தனான மிட்டாய். 

பஞ்ச பாண்டவர்கள் பகுததறிந்து நல்ல பயற்சி பெற்ற மிட்டாய். 
கொஞ்சும் கிளிகள் பில்லாம் ரெங்கா ரெங்காவென்று கோதித் தின்னும் மிட்டாய். 

நானும் நீங்களுமாய் ஆனந்தமாக பஜனை செய்யும் மிட்டாய். 
இந்த மிட்டாய் உங்கள் சொந்த மிட்டாய் இது போனால் வராத மிட்டாய்.

லக்ஷ்மிநரசிம்ம கராவலம்பம் வரிகளுடன்| Lakshmi Narasimha Karavalambam (Tamil)

திருப்பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவனே! சக்ராயுதத்தை கையில் தாங்கியவனே! ஆதிசேஷனின் தலையில் உள்ள ரத்னங்களினால் ஒளிரும் புண்யமான வடிவை உடையவனே! யோகிகளுக்கெல்லாம் தலைவனே! நிலையானவனே! தஞ்சமடையத் தக்கவனே ! ஸம்ஸாரமெனும் கடலைக் கடக்க ஓடம் போன்றவனே ! லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்து அருள வேண்டும்.



நான்முகன், இந்திரன், ருத்ரன், மருத்துக்கள், சூரியன் முதலானவரின் கிரீடங்களின் முனைகளால் உறையப்பெற்று மாசற்று ஒளிரும் தாமரை போன்ற சரணங்களை உடையவனே! லக்ஷ்மீ தேவியின் ஸ்தனங்களாகிற தாமரை மலருக்கு ராஜ ஹம்ஸம் போன்றவனே ! லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மீந்ருஸிம்ஹனே!
ஸம்ஸார மென்னும் காட்டுத்தீயினால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், அச்சுறுத்தும் பரந்த தீயின் ஸமூஹங்களால் கருகிய ரோமங்களை உடையவனுமான எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! எங்கும் வியாபித்திருப்பவனே ! ஸம்ஸாரமென்னும் வலையில் விழுந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப் பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையும் தலையையும் உடையவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! தேவனே! ஆழமான அடித்தலத்தை உடையதும் மிகவும் பயங்கரமானதும் ஸம்ஸாரமென்னும் கிணற்றை அடைந்து நூற்றுக்கணக்கான இன்னல்களான அரவங்களால் துன்புறும் கதியற்றவனான இரங்கத்தக்க நிலையை அடைந்த எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! இன்னல்களனைத்தையும் போக்குபவனே! ஸம்ஸாரமென்னும் பயங்கரமான யானையின் துதிக் கையினால் அடிபட்டு நசுக்கப்பட்ட நுண்ணிய உறுப்புகளைக் கொண்டவனும், பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கையாகிற அச்சத்தினால் அல்லுறுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! கருடனை வாஹனமாகக் கொண்டவனே! அமுதக் கடலில் வசிப்பவனே! வசுதேவன் புதல்வனாய் அவதரித்தவனே! வாழ்க்கை என்னும் பாம்பின் விரிந்த வாயிலுள்ள அச்சுறுத்தும் கடுமையான வலிவான பற்களிலுள்ள கொடிய நஞ்சினால் பொசுக்கப் பட்டு உருவிழந்த எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே ! இரக்கமுடையவனே ! பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், காமனை மலராகவும், துயரங்களைப் பழங்களாகவும் உடைய வாழ்க்கை என்னும் மரத்தின்மீது ஏறி விழுகின்ற எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! வாழ்க்கைக் கடலில் பரந்த அச்சுறுத்தும் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு விழுங்கப்படுகின்ற உடலை உடையவனும், பலவிதமான கவலை உடையவனும், பலவிதமான ஆசைகள் என்னும் அலைகளால் அல்லல் படுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

மிகவும் வல்லமை உடையவனே! கருணை நிதியே! பிரஹ்லாதனின் இன்னலைப் போக்க அவதாரம் செய்தவனே ! வாழ்க்கைக் கடலில் முழுகி மயங்குகின்ற எளியோனான என்னை (கடைக்கண்ணால்) பார்க்க வேண்டும். லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே ! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! முரனின் பகைவனே! வாழ்க்கை என்னும் அச்சுறுத்தும் காட்டில் திரிகின்றவனும், விலங்குகளில் தலைசிறந்த (சிங்கம்) போன்ற உக்கிரமான அச்சுறுத் தும் காமனால் பீடிக்கப்பட்டவனும், மிகவும் துன்ப முற்றவனும், பொறாமை என்னும் கோடையினால் பீடிக்கப்பட்டவனுபான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானே! இரக்கமுடையவனே! வாழ்க்கையின் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் ஆட்கள் கழுத்தில் (பாசக்கயிற்றால்) கட்டி மிகவும் அதட்டுபவர்களாக எங்கேயோ இழுத்துச் செல் கிறார்கள். தனித்திருப்பவனும், பிறர் வயப்பட்ட வனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லஷ்மியின் நாதனே! தாமரையை தொப்புளில் உடையவனே! தேவர்களின் தலைவனே! வியாபித்திருப்பவனே! வைகுண்டனே! கிருஷ்ணனே! மது என்ற அசுரனைக் கொன்றவனே! தாமரைக் கண் ணனே! பிரம்மனே! கேசவனே ! ஜனார்த்தனனே! வஸு தேவனின் மைந்தனே! தேவர்களின் தலைவனே! இந்த எளியோனுக்குக் கை கெர்டுத்தருள வேண்டும்.

ஒரு (கையினால்) சக்ராயுதத்தையும் மற்றொரு கையினால் சங்கையும் மற்றும் இன்னொரு கையால் லக்ஷ்மியை அணைத்துக் கொண்டும் வலது கையால் வரமளித்தல், காத்தருளல், பத்மமுத்திரை முதலியவைகளை குறிப்பிட்டுக் கொண்டு நிற்கும் லக்ஷ்மி யுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

தேவனே ! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! புலன்கள் என்னும் பெயருடைய வலிமையுடைய திருடர்களால் குருடான என்னுடைய பகுத்தறிவு என்னும் பெருஞ்செல்வம் கவரப்பட்டு மோஹம் என்னும் இருண்ட பாழும் கிணற் றில் தள்ளப்பட்ட எனக்குக் கை கொடுத்தருள வேண்டும். 

பிரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகன், வியாஸர் முதலான சிறந்த பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பவனே! பாரிஜாதம் (மரம்) போன்று பக்தர்களை பரிவுடன் காத்தருள்பவனே! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானின் திருவடித்தாமரைகளில் (அமர்ந்த) தேனீ போன்ற சங்கரரால் இப்புவியில் நன்மை பயக்கும் இத்துதியானது செய்யப்பட்டது. எவர்கள் திருமாலிடம் பக்தி உடையவர்களாக இத்துதியைப் படிக்கின்றார்களோ அவர்கள் இன்பமயமான அந்தத் திருவடித்தாமரையை அடைகின்றார்கள்.

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...